Author Topic: ~ விண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு! ~  (Read 449 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு!


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், பயனாளர் இடைமுக வழிகள் மட்டுமின்றி, வழக்கமாக நாம் விண்டோஸ் சிஸ்டத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த ஷார்ட் கட் கீகளும் அதற்கான செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
Windows key - மெட்ரோ ஸ்டார்ட் விண்டோவினைக் கொண்டு வரும். இதில் நீங்கள் தேட விரும்பும் எதனையும் டைப் செய்து தேடலாம். அது ஒரு அப்ளிகேஷனாகவோ, பயன்பாட்டு கோப்பாகவோ இருக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டார்ட் மெனுவில் மேற்கொண்டது போலவே, இதனையும் பயன்படுத்தலாம்.
Win + D - பழைய விண்டோஸ் டெஸ்க்டாப்பினைக் கொண்டு வரும்.
Win + C - சார்ம்ஸ் மெனுகிடைக்கும். இங்கு தேடல், பகிர்தல் மற்றும் செட்டிங்ஸ் மாற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.
Win + I - செட்டிங்ஸ் (Settings) பேனல் திறக்கப்படும். அப்போது பயன்பாட்டில் இருக்கும் அப்ளிகேஷனுக்கு செட்டிங்ஸ் மாற்றலாம். வால்யூம் கண்ட்ரோல் செய்திடலாம், வயர்லெஸ் நெட்வொர்க் பணிகளை வரையறை செய்திடலாம். திரையின் டிஸ்பிளே ஒளிப் பரிமாணத்தை மாற்றலாம்.
Win + Z - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கு App Bar திறக்கப்படும்.
Win + H - Metro Share panel திறக்கப்படும்.
Win + Q - Metro App Search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + W - Metro Settings search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + F - Metro File search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + K - Devices panel திறக்கபப்டும். இதில் புரஜக்டர் அல்லது அது போன்ற சாதனங்களை இணைக்க வழி கிடைக்கும்.
Win + , (comma) - டெஸ்க்டாப்பில் Aero Peek கிடைக்கும்.
Win + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் ஒரு ஓரமாகக் கொண்டு செல்லலாம். பொதுவாக வலது புறம் செல்லும்.
Win + Shift + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் இடது புறமாகக் கொண்டு செல்லலாம்.
Win + J - மெட்ரோ அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்துக் காட்டும்.
Win + Page Up / Down - அப்போதைய அப்ளிகேஷனை அடுத்த மானிட்டருக்கு மாற்றும்.
Win + Tab - Metro application switcher menu திறக்கப்படும். அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்து செல்லும்.
Win + X - ஸ்டார்ட் மெனு கிடைக்கும். மிகவும் பயனுள்ளது.
Windows Key + Print Screen கம்ப்யூட்டரில் உள்ள கடிஞிPictures போல்டரில், அப்போதைய திரைக் காட்சி எடுக்கப்பட்டு, தானாகவே சேவ் செய்யப்படும்.