Author Topic: ~ இனி இல்லை ‘பேட்டரி லோ': வந்துவிட்டது புதிய சார்ஜர்! ~  (Read 564 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இனி இல்லை ‘பேட்டரி லோ': வந்துவிட்டது புதிய சார்ஜர்!

இன்றைய நவீன யுகத்தில் மொபைல் போன்கள் 24 மணி நேர தேவையாகி விட்டது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என எல்லாவற்றையும் இந்த மொபைல் போன்கள் வழங்கி வருகின்றது.

மொபைல் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. தொழில்நுட்ப பயன்பாடுகளில் முக்கிய பங்காற்றும் இவைகளில் சில பிரச்னைகளும் இருக்கத் தான் செய்கிறது.

இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறையினருக்கு பெரும் தலைவலியாக இருப்பது ‘பேட்டரி லோ’ என்னும் அலறல் தான். எந்நேரமும் மொபைல் போன்களில் சார்ஜ் புல்லாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ‘ஸ்டோர் டாட்’ நிறுவனம் நானோ டெக்னாலஜி மூலம் 30 விநாடிகளில் செல்போன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய வகை சார்ஜரைக் கண்டுபிடித்திருக்கிறது.



இந்த சார்ஜர் தற்போது உள்ள சார்ஜரை விட 100 மடங்கு வேகமாக சார்ஜரை பூஸ்ட் செய்யும் ஆற்றல் கொண்டது. 8 மாதங்களுக்கு முன்னதாகவே இதே போன்ற ஒரு கருவியை இந்நிறுவனம் சோதனை செய்து காட்டியது. ஆனால், அந்த கருவி நடைமுறையில் எளிதாக பயன்படுத்த முடியாத வகையில் தடிமனாகவும், அளவில் பெரியதாகவும் இருந்தது. எனவே, அதனை மறுஆய்வு செய்து மீண்டும் வடிவமைத்துள்ள, புதிய கருவி அளவில் சிறியதாகவும், தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

மொபைல் போன் வரலாற்றிலேயே புதிய புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது இந்த சார்ஜர். மொபைல் போன்கள் மட்டுமன்றி, டேப்லட்டுகள், லேப்டாப்கள், கைகளில் அணியும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் பேட்டரியையும் நொடிகளில் நிரப்புகிறது இந்த சார்ஜர்.

இனி ‘பேட்டரி லோ’ என்ற கவலையே தேவை இல்லை!