Author Topic: வள‌ர்‌பிறை‌யி‌ல் ம‌னித‌னி‌ன் செய‌ல்‌திற‌ன் அ‌திக‌ரி‌க்குமா?  (Read 2771 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சுக்கிலபட்சம் என்கிற வளர்பிறையில் மனிதனுடைய மூளையின் செயல்பாடு உக்கிரமாக இருக்கும் என்றும், தேய்பிறையான கிருஷ்ண பட்சத்தில் அந்த மாதிரி இருக்காது என்றும் படித்தேன். இது உண்மையா? எப்படி?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சந்திரனைத்தான் நாம் மனோகாரகன் என்று சொல்கிறோம். பெளர்ணமி அன்று சந்திரனுடைய ஒளிக்கற்றைகளில் புவியீர்ப்பு விசை அதிகரித்து கடல் அலைகள் இயல்பிற்கு அப்பாற்பட்டு பொங்கி எழுவதைப் பார்க்கிறோம். மேலும், பெளர்ணமி நிலவினுடைய தன்மை அதாவது தணிந்த நிலை, உள்ளத்தில் ஒருவிதமான கிளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது என்பதையும் பார்க்கிறோம்.

அமாவாசை முடிந்து பிரதமையில் இருந்து தொடங்கி பெளர்ணமி வரை இருக்கக்கூடிய வளர்பிறையில் செயல்பாடுகள் பொதுவாகவே அதிகரிக்கும். இதுவே தேய்பிறையில் குறையும். அதாவது 10 எண்ணங்களுக்கு 4 எண்ணங்கள் தோன்றும். கற்பனைத் திறன், கற்பனை விகிதம் வளர்பிறையில் அதிகரித்தும், தேய்பிறையில் குறைந்தும் காணப்படும். அப்படித்தான் அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரனுடைய ஒளிக்கற்றைக்கு இயல்பாகவே கற்பனை சக்தி அதிகம்.

அதனால்தான் சந்திரனைப் பாடாத கவிஞர்களே கிடையாது. சாதாரண புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக்கவிதையில் இருந்து சங்ககாலப் புலவர்கள் வரைக்கும் சந்திரன்தான் கற்பனைக்கும், கவித்துவத்திற்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது. அதனால் வளர்பிறையில் உணர்வுகளும், செயல்பாடுகளும் அதிகமாக இருக்கும்.

தே‌ய்பிறையில் எண்ண‌ங்க‌ள் இருக்கிறது. செயல்பாடு இருக்கிறது. ஆனால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அமைப்பு இருக்கிறதே, அது வளர்பிறையில் 4 விதமான சிந்தனை வரும். அதனால் வளர்பிறையில் சிந்தனைத் திறன் அதிகரிப்பதும், தேய்பிறையில் சிந்தனைத் திறன் குறைவதும் என்று சொல்ல முடியாது. எண்ணங்கள், கற்பனைத் திறன் குறைவதும் என்பது இயல்புதான்