Author Topic: மனமாற்றம் உண்மையா  (Read 1131 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனமாற்றம் உண்மையா
« on: November 27, 2011, 03:54:42 AM »
மனமாற்றம் உண்மையா


கடவுள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் என்று வற்ப்புருத்துவதினால் யாரும் நம்பப்போவது கிடையாது, நம்புவது கிடையாது என்பதனால் கடவுள் இல்லை என்றாகி விடுவதும் கிடையாது. நம்பிக்கைகள் ஏற்ப்படுவதற்க்கு அதை அனுபவித்திருப்பது அவசியமாகிறது. எந்த ஒரு நம்பிக்கையும் அல்லது சுகமும் துக்கமும் அனுபவத்திற்குப் பின்னர் தான் நன்கு விளங்குகிறது, வறுமை நோய் வலி சுகம் துக்கமெல்லாம் அனுபவிக்கும் போது அதன் ஆழம் உணர முடிகிறது, அதனால்தான் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று. வறுமையும் நோயும் உபத்திரவங்களையும் அனுபவிக்கும் ஒருவனுக்குத்தான் அதிலிருந்து வெளியேறும்போது கிடைக்கும் அனுபவங்கள் தெய்வ நம்பிக்கையை அதிகரிக்கிறது.

தெய்வத்தின் மீது நம்பிக்கை என்பது குருட்டாட்டம் கிடையாது, குருட்டு நம்பிக்கை கிடையாது, தெய்வம் தன் மீது எல்லோரும் நம்பிக்கை வையுங்கள் என்று கூவி அழைத்தாலும் யாரும் அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவது கிடையாது. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதன் அனுபவமில்லாமல் அந்த நம்பிக்கை நிலைத்து நிற்காது. நிலைத்து நிற்ப்பதே தெய்வ நம்பிக்கை, வயிற்றுப்பசி போக்குவதற்காக வேலை கிடைப்பதற்காக நோய் தீருவதற்காக மட்டுமே தெய்வ நம்பிக்கை ஏற்ப்படும் என்றால் அவை எல்லாம் கிடைத்த பிறகு அந்த நம்பிக்கை அதிகரிப்பதும் உறுதி என்பதால் தெய்வ நம்பிக்கை என்பது அனுபவங்களால் மட்டுமே நிலை நிற்க்கக் கூடியதாகும்.

அனுபவங்களின் வாயிலாக ஏற்ப்படும் தெய்வ நம்பிக்கைகள் உடையவர்களால் மட்டுமே அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது, அந்த அனுபவங்களை பெற இயலாதவர்கள் தெய்வ நம்பிக்கைகளை பொய் என்று சொல்வதால் தெய்வமும் அதனை உண்டென்று நம்புகின்ற நம்பிக்கைகளும் பொய்யாகி விடுவதில்லை. தெய்வத்தையும் அதன் செயல்பாடுகளையும் உண்டென்று அதை அனுபவப்பட்டவர் கூற்றினால் நம்புகின்றவர் உண்டென்றால் அது அவர்கள் அனுபவப்பட்டவரின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த கட்டத்தில்தான் போலிகளால் மக்கள் ஏமாற்றங்களை சந்திக்க நேருகிறது. போலிகள் பெருகுவதனால் உண்மைகள் இல்லாமல் போய்விடுமா, போலிகள் பெருக்கத்தினால் உண்மை எது பொய் எது என்று அறிந்துகொள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறதே தவிர உண்மையான உபதேசிகள் இல்லாமல் இல்லை. போலிகள் அதிகரிப்பதால் தெய்வம் பொய்யாவதில்லை.

யாரையும் யாரும் மாற்றவேண்டியது அவசியமில்லை, அது நடக்கின்ற காரியமும் இல்லை. மதமாற்றம் என்பது மன மாற்றத்தினால் மட்டுமே ஏற்ப்படக்கூடியது, கட்டாயத்தினால் ஏற்ப்படுத்தபட்டால் கடைசிவரையில் நீடித்திருக்க இயலாமல் போகும். ஒரே பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளிலேயே ஒரு குழந்தை தேர்வு செய்வதை அடுத்த குழந்தை தேர்வு செய்வதில்லை, பெற்றோர் விருப்பப்படி தனது விருப்பங்களை மாற்றிக்கொள்வதற்கு ஒத்து போவதில்லை என்கின்ற சூழல் நடைமுறையில் எங்கும் காணப்படுகின்ற நிலையாக இருக்கும் காலகட்டத்தில் யாரோ ஒருவரை பணம் கொடுக்கிறேன் வேலை கொடுக்கிறேன் இன்னும் என்னென்ன தேவைகளோ அவற்றையெல்லாம் கொடுக்கிறேன் உங்கள் மனதிலிருக்கும் தெய்வ நம்பிக்கைகளை நான் சொல்வதுபடி மாற்றிக் கொள்ளுங்கள் என்று வற்புருத்துவதனாலேயே அவர் மன மாற்றமடைந்து மதம் மாற்றம் செய்ய முன்வருகிறார் என்றால், உண்மையாகவே அவர் மனதளவில் மத மாற்றம் அடையவில்லை அவருக்கு கிடைத்த வேலையோ பொருளுக்காகவோ அவர் மாறியதாக கூறிக்கொள்கிராறேத் தவிர மனதளவில் மாற்றங்கள் ஏற்ப்பட வாய்புகள் இல்லை என்பது தெளிவாகிறது.

தெய்வ நம்பிக்கை என்பதை யாராலும் செயல்முறையில் நிரூபித்து காண்பித்து இது உண்மைதான் என்று நிரூபிப்பதற்கு வழியில்லை என்பதால் இல்லை என்பதோ பொய் என்பதோ ஆகிவிடுவதில்லை. மதங்களும் கடவுளும் வறுமையில் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு, இருக்க வீடு, மனை, தொழில் என்று ஏற்ப்படுத்திக்கொடுத்தால்தான் அது தெய்வம் என்ற சட்டத்தை மனிதர்கள் தெய்வத்திற்கு முன்வைப்பார்களேயானால், மனிதர்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நிலைமை கடவுளுக்கு கிடையாது, மனிதர்கள் தங்கள் வசதிகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப கடவுள் செய்தால்தான் கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்கின்ற மனித வரையறைகளுக்கு கடவுள் உட்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடர்களின் எதிபார்ப்பாக இருக்கும், நம்புவதும் நம்பாததும் அவரவர் மனதில் உள்ள முடிவு, அதற்காக முட்டாள்கள் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் கடவுள் என்பவர் செயல்படவேண்டும் அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுகொள்ளமுடியும் என்று சவால் விட்டுக் கொண்டு, இல்லையென்றால் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யான தகவல் மதங்களும் கடவுளும் பொய் என்று தன்னைத்தானே திருப்திபடுத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.