Author Topic: சித்தர்கள் பாடல்கள்  (Read 2271 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சித்தர்கள் பாடல்கள்
« on: June 17, 2012, 09:36:21 PM »
நமது சித்தர்கள் அருளிய அரும் பெரும் பொக்கிசமான பாடல்களில் எமக்கு கிடைத்த சில நூல்களை குறிப்பாக ஆன்மீகம் சம்பந்தமானவற்றை ஆன்மீகம்.கொம் வாசகர்களுடன் பகிர்;ந்து கொள்வதில் பெருமையடைகிறோம்.

              முதற்படியாக தமிழிற்கு அகத்தியம் என்ற இலக்கண நூல் தந்த பதினென் சித்தரில் முதனமையானவரும், தமிற் கடவுளாம் முருகப்பெருமானின் சீடருமான குருமுனியாம் அகத்திய சித்தர் அருளிய பாடல்களை இங்கு தருகிறோம். எமக்கு கிடைத்த நூல்களின் அடிப்படையில் இந்தப்பகுதி மேலும் விரிவடையும்.

அகத்திய சித்தர் அருளிய தீட்சைப்பாடல் 5

அகத்திய மகாமுனிவர் ஞானகக்கிசம் -- 5

அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 6

அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 8

அகத்தியர் சோதிமணி சூத்திரம் -- 8

அகத்தியர் திருமந்திரம் -- 8

அகத்தியர் சிவகுளிகை – 8

அகத்திய மகாமுனிவர் ஞானம் 30


              சித்தர் பெருமக்கள் தங்கள் அனுபவங்களை சொல்லும் போது நல்லவர் கைகளிற்கு அவை முறைப்படி சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் முக்கிய விடயங்களை பரிபாசையாகவே சொல்லி வைத்துள்ளனர். சரியான அர்த்தம் புரியாமல் சித்தர் பெருமக்கள் பாடல்களை அனுபவத்திற்கு கொண்டுவர முயற்சிப்பது பல நேரங்களில் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். சித்தர் பாடல்களை அனுபவத்திற்கு கொண்டு வரவிரும்பும் அன்பர்கள் தகுந்த குருவின் உதவியுடன், அவர்கள் வழிகாட்டுதலின் மூலம் கொண்டு வரும்படி தங்களை அறிவுறுத்துகிறோம்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #1 on: June 17, 2012, 09:41:24 PM »
அகத்திய மகரிசி

       தீட்சைப்பாடல் 5


 

ஆதியந்தமாய் நிறைந்த தீட்சை மார்க்க

மருள்செய்தேன்புத்திரனே சொல்லக்கேளு

சோதியந்ததுள்ளிருக்குஞ் சுடரே போற்றி

சொல்லுகிறேன் வகாரமுடன் வுகாரம்போடு

வேதியென்றகமலத்திற் பொருளேயாகும்

வேதாந்தமுடிந்துதா னெடிட்ரண்டுஞ்

சாதியென்றதீட்சையது யறிந்துபாரும்

சத்தியந்தானுந்தனுக்குத் தருகுவாரே.                       1

 

வாறுகேளெட்டிரண்டு கூட்டவைந்தும்

வந்துதடாவுந்தனுக்கு மகிழ்ந்து பாரு

கூறுகோளப்பனுட முப்பும்போச்சு

கொடிதான சுருக்கமதுகாணப்போகா

சீருகேள் தாளகத்தை மேவிப்பாரு

நிலைத்துதடாதீட்சையது பத்துப்பாரு

மாறுகேள்வொன்றிரண்டுஞ் செபித்தாயானா

லாச்சரியமுலகமெல்லா மதற்குள்ளாச்சே.                2

 

ஆச்சென்றுபிண்டமது வண்டமெல்லா

மாச்சரியங்கண்மணியே யென்ன சொல்வேன்

வாச்சென்றவண்டத்தை நோக்கிப்பாரு

வாருதிபோல்ரவிமதியுந் தோணுந்தோணும்

நீச்சென்றகுருநிட்டைக் குள்ளே புக்கி

நிலைத்துதடாகாயமதில் ரூபமில்லை

ஆச்சென்றுவுபாயமெல்லாம் துறவிற்புக்கு

யடங்கிற்றுபார்த்துக்கொள் ளுண்மைதானே.               3

 

தானென்றவிம்முறையை யறியலாச்சு

தாயென்பார்சனங்களென்பார் தள்ளுதள்ளு

கோனென்றால்வருமோதான் குவிந்து பாரு

கூறவொண்ணாயிக்கருவைப்பேசலாகா

வானென்றபெரியோரைக் கண்டுதேறு

வணங்கியேயனுதினமு மகிழ்ச்சியாக

பானென்றயிப்பொருளை யீசன்றானும்

பார்ப்பதற்குத்தானுரைத்தார் பரிட்சையென்றே.             4

 

என்றெனவேபொருளதுதான் ரவியேபுக்கு

மெடுத்துரைக்கப்போதுமது யென்னசொல்வே

னன்றெனவேபொருளைந்து பாட்டுகுள்ளே

நன்றாகதோணவேசொல்லிவிட்டே

னென்றானபொருளதுதா னுற்றுப்பாரு

ஓகோகோயென்னசொல்வே னுகமைமெத்த

இன்றையதான் புதுமையா ரைந்தெழுத்தைக்காணா

ரிப்படியென்றுன்னுக்குட் களைந்துபாரே.                      5

 

அகத்திய மகரிசி தீட்சைப்பாடல் 5

                முற்றிற்று.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #2 on: June 17, 2012, 09:43:59 PM »
அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 6

பாரப்பாசீவன்விட்டுப்போகும்போது
பாழ்த்தபிணங்கிடக்குதென்பார் உயிர் போச்சென்பார்
ஆரப்பாவறிந்தவர்க ளாருமில்லை
ஆகாயசிவத்துடனே வேறுமென்பார்
காரப்பாதீயுடனே தீச்சேருமென்பார்
கருவறியாமானிடர்கள் கூட்டமப்பா
சீரப்பாகாமிகள்தா னொன்றாய்ச்சேர்த்து
தீயவழிதனைத்தேடி போவார்மாடே.                                          1

மாடுதானானாலும் வொருபோக்குண்டு
மனிதனுக்குஅவ்வளவுந் தெரியாதப்பா
நாடுமெத்தநரகமென்பார் சொர்க்கமென்பார்
நல்வினையோதீவினையோ யெண்ணமாட்டார்
ஆடுகின்றதேவதைக ளப்பாகேளு
அரியதந்தையிளஞ்சேரு மென்றுந்தோனார்
சாடுமெத்தபெண்களைத்தான் குறிப்பாயெண்ணி
தளமானதீயில்விழத் தியங்கினாரே.                                            2

தங்காமற்பிழைப்பதற்கு யி;ந்தஞானம்
சார்வாகப்பாராட்டு ஞானம்வேறே
மயங்குதற்குஞானம்பார் முன்னோர்கூடி
மாட்டினார்கதைகாவியப் புராணமென்றும்
இயல்பானரசந்தனிலே யீப்புகுந்தாற்போலும்
இசைந்திட்டார்சாத்திரங்க ளாரென்றேதான்
வரையானபயன்பெறவே வியாசர்தானு
மாட்டினார்சிவனார்தன் வுத்தரவினாலே.                                  3

உத்தாரந்தானிப்படியே புராணங்காட்டி
லோகத்தில்பாரதம்போல் கதையுண்டாக்கி
கர்த்தாலெத்தானென்று தோணவொட்டாமல்
கபடநாடகமாக மேதஞ்சேர்த்து
சித்தர்வழியாக சேர்ந்தோர்க்கெல்லாஞ்
சதியுடனேவெகுதர்க்கம் பொருள்போற்பாடி
பத்தாகசைவர்க்கு வொப்பினையும்சேர்த்து
பாடினார்சாத்திரத்தைப் பாடினாரே.                                                4

பாடினதோர்வகையேது சொல்லக்கேளு
பாதகபுராணமென்ற சோதியப்பா
நீடியதோர்ராவணந்தான் பிறக்கவென்றும்
நிலையானதசரதன்கை வெல்லவென்று
நீடியதோராசனென்றும் முனிவரென்றும்
அருள்பெற்றவர்களென்றும் தேவரென்றும்
ஆடியதோர்ராக்கரென்று மனிதரென்று
பாடினார்நாள்தோறும் வகையாய்த்தானே.                                 5

கழிந்திடுவார்பாவத்தா லென்றுசொல்லும்
கட்டியநால்வேத மாறுசாத்திரமு
மழிந்திடவேசொன்னதல்லால் வேறொன்றுமில்லை
யதர்மமென்றுந்தர்மமென்று மிரண்டுண்டாக்கி
வொழிந்திடுவாரென்றுசொல்லி பிறப்புண்டென்றும்
வுத்தமனாய்பிறப்பனென்று முலகத்தோர்கள்
தெளிந்திடுவோர்குருக்களெனறுஞ் சீடனென்றுஞ்
சீவனத்துக்கங்கேயல்லோ தெளிந்துகாணே.                               6

அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 6
                       முற்றிற்று
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #3 on: June 17, 2012, 09:46:03 PM »
அகத்தியமகாமுனிவர் அருளிய

               ஞானம் -- 8


 

சோதியென்னும்பராபரையாள் தேவிபாதம்

சொற்பெரியநாதாக்கள் பாதம்போற்றி

நீதியெனும்யெனையாண்ட நந்திபாதம்

நின்னகத்தில்வைத்துயான் தொழுதிரஞ்சும்

பாதிமதிதரித்தசிவன் நின்றமார்க்கம்

பார்மக்காளுன்னுள்ளே பரிந்துகாட்ட

ராதியென்னும்நின்றபர மூலத்துள்ளே

ஆத்மாவாய்நின்றகண பதியேகாப்பாமே.              1

 

கணபதியாய்நின்றபர மூலத்துள்ளே

கணங்கொள்ளாநின்றெழுத்தை கருதிக்கேளு

தனபதியாம்பீசத்து ஓங்காரவட்டந்

தனித்துநின்றயிடமதுதான் சார்ந்துபாரு

இனபதியாய்நின்றதொரு பீசந்தானும்

யெழும்புகின்றநந்தியது யதுவேயாகும்

மனமதியாய்நினைவையொட்டிக் குறித்துப்பாரு

மைந்தனேநந்திமயிர்ப் பாதியாமே.                  2

 

பாதியென்றநந்தியது சிவமேயாகும்

பாரியத்தின்மையத்தில் மண்ணேயாகும்

சோதியெனநின்றதொரு வமிர்தந்தன்னை

சொன்னவினியென்னாலே முடியாதப்பா

பாதியென்றபராபரையால் சொன்னதெல்லாம்

பகருகிறேன்புலத்தியனே பண்பாய்க்கேளு

வீதியென்றமுச்சந்தி யெனக்குமைந்தா

விதமானயெட்டாங்குலத் துள்ளேகேளே.               3

 

கேளப்பாவமிர்தமது நின்றதானம்

கெடியானசமண்டுதான் தாரையைப்போல

நாளப்பாவதிலுருந் தைந்தினுள்ளே

நமனுடையமுடிவதுவே வுயிருமாகும்

பாழப்பாவொன்றுமில்லை ஞானமார்க்கம்

பாடினதிலித்தொழிலை மரைத்தாரையா

தேளப்பாகொட்டுதல்பொ லமிர்தந்தன்னை

சிந்தாமல்லுண்பதற்கு வகையைக்கேளே.            4

 

வகையென்னவிரண்டுவிழி மருட்டிபுள்ளே

மைந்தனேஅண்ணாக்கி லிண்ணாக்கையோட்டு

தகையொன்றுமில்லாமல் மூலத்தீசற்றும்

சனத்திலேநந்தியுட வழியிற்செல்லும்

பகையில்லாமுதுகினுட தண்டினுள்ளே

பரிவானநந்தியது நேரிலோடும்

திகைத்துநின்றுகண்டதோ ரமிர்தந்தன்னை

சிறந்துநின்றநந்திக்குத் துறையாமெண்ணே.        5

 

யெண்ணவேநந்தியுட னியம்புகாலை

யிசைந்தநந்திசுழிமுனையில் நாட்டிப்பாரு

வுண்ணவேவாயுவுடன் தேய்வுங்கூட்டி

யிசைந்தநந்தியதுவழியே யமர்ந்துபோகும்

பண்ணவேயமிர்தமது தலைகீழாகும்

படீரென்றுகொட்டிவிடுஞ் சிவமேமிஞ்சும்

கண்ணவேநந்திக்கி வலுவைதேட

கணமாணவாசியைத்தான் வெளியோட்டாதே.         6

 

ஓட்டாதவாசியைத்தான் வெளிபீசத்துள்ளே

யுள்ளிருத்தியழுத்திர வைத்துக்கொண்டு

தேட்டானஞானவெளித் தெகட்டுமப்பா

சிவசிவாவொருவருக்கும் வெளிவிடாதே

யாட்டான நந்தியுட நிலையைப்பற்றி

யானுமுன்னேவமிர்தத்தில் செல்லவைக்கும்

பாட்டானநாசிமுனை குறியையுற்று

பார்க்கையிலேயமிர்தமது சொரியும்பாரே.           7

 

பாரப்பாசெடத்தில் நந்திபாதம்

பற்றிக்கொள்கெட்டலைந்து போகவேண்டாம்

பாரப்பாவாத்மாவே சூட்சப்பாவை

யப்பனேயதிலிருக்கும் விபரமெல்லாம்

சேரப்பாவொன்றுமில்லை வீடுமாகும்

சிறந்துநின்றநந்தியது பரமேயாகும்

வீரப்பாவொன்றுமில்லை நந்திகண்டால்

மெய்ஞ்ஞானபோதகமு மிரதமுற்றே.                  8

 

அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 8

                          முற்றிற்று


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #4 on: June 17, 2012, 09:49:59 PM »
அகத்திய மகரிசி அருளிய

  சோதிமணி சூத்திரம் -- 8


                      காப்பு

நல்லதொருகணபதியின் பாதம்போற்றி

நவகோணமனோன்மணியின் பாதம்போற்றி

யல்லல்தவிர்த்தருகோண குகன்றாள்போற்றி

வன்பத்தோரட்சரத் துடையோர்போற்றி

சொல்லுகிறேனுந்தனுக்கு வகாரவுண்மை

சோதிமணிசூத்திரமோ ரெட்டப்பா

தௌ;ளுமணிபுலத்தியனே பேரானந்தஞ்

சித்தாந்தமுறையெல்லாந் தெளியத்தானே

                       நூல்

திரிபுடைதன்வட்டத்துள் சிங்-அங்-உங்கென்று

திரும்பவேஐயுங்கிலியும் அங்கென்றோது

சரியையொடுகிரியையது ஞானமப்பா

தப்பாதுஉங்கிலியும சவ்வென்றோது

பரிசமொடுபூரணத்தி லியங்கும்வாய்வு

பார்க்கையிலேஓம்சிவாய வசியென்றோது

துரியமடாதுரியத்தி லப்புமுப்புஞ்

சூட்டுறேன் பாறையுப்புசொல்லுகிறேனே.            1         

 

சொல்லுகிறேன் பாறையுப்பு யெடுத்துக்கொண்டு

சூட்சமாய்த்தாளகத்தி லரைத்துவப்பா

வில்லைதான்பிடித்ததனை வோட்டில்வைத்து

மேல்கீழுங்கவசமிட்டு வுப்பைப்பூசி

யெல்லையிலாகாட்டெருவில் முழப்புடந்தான்

யியல்பாகபோட்டுநீ யெடுத்துப்பாரு

சொல்லியதோர்தாளகத்தி லீயமெய்துஞ்

சூட்சமாய்வாதவித்தை சொல்கிறேனே.                   2

 

சொல்லுகிறேன்றாளகத்தி லீயமானால்

சுரக்கமாய்க்காரீயந் தன்னிலூட்டி

வல்லமைதானில்லையடா காரீயந்தான்

மகத்தானபதினாறு மாற்றாகு

மெல்லையற்றயீசனுக்கு மெட்டாமூல

மேகாட்சர-அம்-உம்-எம்-மிரையுமிட்டு

தொல்லையில்லைவாதமடா சுருக்கஞ்சொன்னேன்

றுறையோல்டசெய்தாக்காற்றுலங்குந்தானே    3

 

தானென்றவகாரத்துக் கெழுத்துஞ்சொன்னேன்

தப்பாமற்கேளடா தேய்வைமூட்டு

மோனமுடமௌனமென்று மாத்தாளென்று

மருகோணவீடுதான் உகாரமென்றும்

போனென்றநாகத்தை வாங்குவாங்கு

பரிவாகதவம்பண்ண பூரம்போடு

தேனென்றவோங்காரத் துள்ளேபுக்கு

சிவயமசியென்றுதான் திறந்திட்டேனே.               4

 

திறந்திட்டேனேகாரத்துக் காதியென்ன

சிவசிவாயமிர்தமதிக் கெட்டாகற்ப

முரைத்திட்டேன்கற்ப்பமது நாளொன்றுக்கு

வுத்தமனேமஞ்சாடி களஞ்சிகூட்டு

திறந்திட்டேனிப்படியே செய்துவந்தால்

யோகிக்குவயதுnhல்லமுடியாதப்பா

வறைந்திட்டேனப்படியே யோகத்திற்கு

வாய்க்கடங்காமவுனத்துக் காகும்பாரே         5

 

அவ்வாகிஉவ்வாகி அகாரமாகி

ஐம்பத்தோரெழுத்துக்கு ஆதியாகி

யவ்வாகிகாலிரண்டுந் தன்னுள்ளாகி

நடுவில்நின்றலிங்கமது அடசரமாகி

உவ்வாகிவோர்நிலையாய் ஸ்தம்பமாகி

ஓம்நமசிவாயமென்று வகையிலோதி

நவ்வாகிசிவ்வாகிஅவ்வுமாகி

நாட்டமாஐயுங்கிலியை நாட்டுநாட்டே.                 6

 

நாட்டாதசித்தரியை கீழேகீறு

நலமாகவுள்ளரையில் சுழியும்போடு

ஊட்டப்பாமதியமிர்த மிரங்குமப்பா

உண்டுண்டுபோகத்தி லுரைந்துநில்லு

பாட்டடாஓம்நமசி வாயமென்று

பரிவாகநின்று ஐயுங்கிலியுஞ்சொல்லி

கூட்டாகயோகத்துக் கிதுவேசித்த

குணடலியைகண்டுகொண்டு குறியைப்பாரே.            7

 

குறியான அகாரமே சிகாரமாச்சு

குதமில்லாமுதலெழுத்து மிதனுள்ளாச்சு

அறியாதபொருளதுதா னிதனுள்ளாச்சு

அனைத்துயிர்க்கும் பிறப்புயிதனுள்ளாச்சு

வழியாகவிதுமூன்றுஞ் செய்தோர்சித்த

வழியறியாமூடனென்ற கதைமாடு

ஒளியாகுஞ்சோதிமணி யிதுவேயாகும்

முயர்வைத்தநாகமணிகிரீடந்தானே.                    8

 

அகத்தியர் சோதிமணி சூத்திரம் -- 8

             முற்றிற்று.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #5 on: June 17, 2012, 09:50:35 PM »
அகத்திய மகரிசி அருளிய

       திருமந்திரம் -- 8


 

உறையற்றதொன்றைச் செய்யுமூமைகாள்

கறையற்றதொன்றைக் கறைகாணலாமோ

திறையற்றநீர்போற் சிந்தைதெளிவார்க்குப்

புறையற்றிருந்தான் புரிசடையோனே.                      1

 

மாட்சியாவது மாதவமுற்றிட

மாட்சியாவது மனமேதெளிந்திட

மாட்சியாவது மன்னுயிரிருந்திட

மாட்சியாவது மாண்டிடமுத்தியே.                     2

 

தான்வறையற்றபின் ஆரைவரைவது

தானாவனானபின் னாரைவரைவது

காமனைவென்றகண் னாரையுகப்பதுவும்

தூயமொழிவாசஞ் சொல்லுமென்றீசரே.            3

 

மனம்விரிந்து குவிந்ததுமாதவம்

மனம்விரிந்து குவிந்ததுமன்னுயிர்

மனம்விரிந்து குவிந்ததுவாயுவாம்

மனம்விரிந்துரை மாட்டிடமுத்தியே.                 4

 

சோதியானதுருசியைச் சொல்லவொண்ணாதுப்

பாதியானதுருசியைப் பேசவெண்ணாது

ஆதியான்சொன்ன வரும்பொருடன்னை

வீதியாய்ச்சொன்னால் விண்ணடிவீழுமே.           5

 

விண்ணடிவீழும் வெளிவிட்டபேர்க்குத்

தன்னடிதானாயத் தனக்குச்சரியாய்க்

கண்ணடிகண்ணாய்க் கற்றுணர்ந்தோர்க்கு

பொன்னடிமூலம் பொருள்சொல்லலாமே.               6

 

சொல்லாரணமாஞ் சுருதிமுடிந்திட

மெல்லாருங்காணா வெடுத்தேவுரைத்தவன்

பொல்லாதசென்மம் புகுந்துபுலையனா

யெல்லாநரகத்துக் கேலாங்காணுமே.                 7

 

சொல்லாரணமாஞ் சுருதிமுடிந்திட

வெல்லார்க்குஞ்சொன்னா லெழுநரகம்

ஆளாக்கிச்சொன்னா லவனேயிவனாகும்

பாழாக்கிப்போட்ட குருபாழ்.                              8

 

    அகத்தியர் திருமந்திரம் -- 8

           முற்றிற்று


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #6 on: June 17, 2012, 09:51:59 PM »
அகத்திய மகாமுனிவர் அருளிய

                  சிவகுளிகை – 8


 

பாரப்பாசித்தரெல்லாஞ் சொன்னமார்க்கம்

பாங்கானவயித்தியரே யிந்நூல்பாரு

பாரப்பாமாந்தமது பிணிகட்கெல்லாம்

பகறினேன்குளிகையொன்று பண்பாய்க்கேளு

சேரப்பாபதினெட்டு பேருங்கூடி

திறமாகக்கோர்வையாய்ப் பாடினார்கள்

ஆரப்பாவதைக்குறிக்கி யொருகுளிகைக்குள்ளே

அப்பனேசிவகணையாய்ப் பாடினோமே.                       1

 

பாடினகராரென்றாற் பொதிகைக்குள்ளே

பரமசிவன்மகனுடைய சீடனப்பா

ஆடியேகுளிகையுட கருவைக்கேளு

வப்பனேசுருக்கியே துருசாய்ச்சொன்னோம்

தேடியேதிரியாதே கருமேனிவேரும்

செயமரிசிதிருநீற்றுப் பச்சைவேரும்

வாடியேயலையாதே சிறுபூளைவேறு

மைந்தனேவாடாத சிறுபொறுமிதானே.                       2

 

தானென்னகாட்டிலே மொச்சவேறு

சாதவெள்ளைச்சாரணையின் வேறுதான்

தேனென்றசெப்பரிய வேலிவேறுஞ்

செயமானவமுக்குரா வடக்குவேறும்

மைந்தனேகுட்டிவிளா மேற்குவேறும்

வேனென்றவேறுவகை பதினொன்றுக்கும்

விளம்புகிறேன்கடைமருந்தின் விபரங்கேளே.               3

 

கேளடாபெருங்காயம் வசம்புகூட

கெடியானசிற்றரத்தை வெள்ளைப்பூண்டு

ஆளடாதிப்பிலி கிராம்புதானு

மப்பனேசாதிபத்திரி யிஞ்சிதானும்

சேரடாகடைமருந்து திரண்டுபங்கு

செயமானவேறுவகை வொன்றாய்க்கொள்ளு

வாரடாதின்குர வொன்றாய்க்கூட்டி

மாட்டியேகுட்டிவிளாசஞ் சாருவாரே.                       4

 

வார்த்துநீயரையடா வரைச்சாமந்தான்

மைந்தனேகுழம்பதுபோ லாகுமுன்னே

பரிந்துநீவேலியின்றன் சாருவிட்டுப்

பாங்காகயரைச்சாம மரைத்துக்கொள்ளு

சேர்த்துமேகுன்றிக்கா யளவுசெய்து

திறமாக அங்-உங்-சிங்-மங்-ஓம்நமவென்று

போற்றியேயெடுத்தார்கள் சித்தியாகும்

புத்திரனேவட்டமா சித்தியாச்சு.                                   5

 

ஆச்சப்பாசிவகுளிகைதா னொன்றுசொன்னேன்

அப்பனேநூல்களிலே சொல்லவில்லை

காச்சப்பாகுளிகையுட கருவைச்சொன்னால்

காணாமலேலோடுமடா பிணிகளெல்லாம்

போச்சப்பாபிணிகள்முலைப்பாலி லாட்டிவிட்டால்

பேரானமுப்பத்திரண்டு தோசம்போகும்

ஆச்சப்பாமாந்தமொடு பதினொன்றுபோகு

மப்பனேவேலியுட சாற்றிற்போமே.                              6

 

போமடாமூட்டுதோச மொன்பதுக்கும்

புகழாகயிஞ்சிவேர் சாற்றினோடும்

வாமடாபுள்தோசம் பதினெட்டுக்கும்

வாகானவென்னீரில் விட்டாற்போகும்

தாமடாபொதிகைமுனி சொன்னமார்க்கந்

தப்பாதுவொருநாளும் வீண்போகாது

ஆமடாசிவகுளிகை யிதுதானென்று

வப்பனேபார்த்தவர்க்கு pத்தியாமே.                            7

 

கேளப்பாயெங்களுட குளிகைக்கெல்லாங்

கிருபையால்நொச்சியிலை சாற்றிலோடும்

வாளப்பாசன்னியொடு யிருமலுக்கு

மைந்தனேவேலியுட சாற்றிற்போகும்

வாளப்பாகரப்பானுக் கெல்லாமைந்தா

வளமானஅமுக்கிரா சாற்றிற்போகும்

ஆளப்பாகுழந்தைகட்கு வந்தநோய்க

ளப்பனேயக்குளிகையி லடக்கமாமே.                         8

 

அகத்தியர் சிவகுளிகை – 8

                         முற்றிற்று


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் பாடல்கள்
« Reply #7 on: June 17, 2012, 09:52:52 PM »
அகத்திய மாமுனிவர் ஞானம் 30


மெய்ஞான குருபரனைப் பூசைபண்ணு
வித்தைந்து சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லு
காரமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே
பொய்யாத உபதேச குருவைப் போற்றி
புகழாக பன்னிரெண்டு வருசங்காரே.                        1

கார்த்தாக்காலோரெழுத்து வழியும் சொல்வார்
கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற
பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்
பரிவாக வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார்
சேர்த்தாக்காற் லெட்டோடே யிரண்டும் சொல்வார்
சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார்
பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி
பூங்கமலத் திருவடியை பூசை செய்யே        2

பூசையென்ன மானிலமே பூசையாகும்
புரவமையத்தொளி கண்டாலதுவேபோது
மாசையென்ன அற்றவிடங் கடந்த ஞானம்
அம்பரத்தை செய்யதுவே யாசையாகும்
ஓசையென வாசிவைத்து மூலத்தூணி
உயர்ந்து நின்ற சிலம்பொலியே ஆசையாச்சு
ஊசையென்ன பலவகையு முற்றுப்பார்த்தால்
பகட்டாத சொரூபத்தாற் பணிய நன்றே         3

நன்றானரேசகத்தை முன்னே கேளு
நலமான பூரகத்தை வாங்கிக் கொள்ளு
வொன்றான கும்பகத்தை யுற்றுப்பாரு
உண்மை யென்னவிடங்கேளு வுறுதிகேளு
பன்றாகபழகுவதுக் கடிகை கேளு
பதிவுசொன்னால் மூன்றுக்கும் வடிவு கேளு
குன்றானமூன்றுக்கும் குறிகுணங்கள் சொன்னால்
குருவுக்குவடலாவி பொருள் தத்தம்பண்ணே    4

பண்ணிநின்றவுடலாகு முயிர்தானாகும்
பகருகின்ற பொருளாகுவுற்றாராரு
நண்ணிநின்ற குருவாரு பரந்தானாரு
நலமானவகார மாறும்பாரு
கண்ணில்நின்றவொளிபாரு வெளியைப்பாரு
காலடங்கிவாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில்நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி
வேதாந்தசித்தாந்த மிரண்டும்பாரே             5

வேதாந்தசித்தாந்த மிரண்டுமென்ன

மேன்மையுள்ள பெரியேர்க்கு மெல்லாமொன்றே
நாதாந்த நடனவொளி கண்டபேர்க்கு
நானென்றவகம் போச்சு யெல்லாம் போச்சே
போதாந்தம் பொக்கிசமாம் வாமபூசை
பூசித்துக்கும்பித்து வுள்ளே ரேசி
கீதாந்த வொளியேழும் நாதங் கேட்கும்
கிருபை தருமுனற்றிய மனத்தைக்கட்டே        6

மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்
மதியிரவி யண்டபிண்ட மானவாறும்
மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்
வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்
மனந்தானே நாதவிந்து அரூபரூபம்
வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்
மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்
வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே   7

கேளப்பாவங்கென்று வுள்ளேரேசி
கேடியாகசிங்கென்று வுள்ளேபூரி
ஆளப்பாஅங்கென்று வுள்ளேகும்பி
ஐம்-ஓம்-சிம்-யம்மென்று தியானம் செய்வாய்
சூளப்பாசுழிமுனை கண்ணொளியையேற்ற
சொல்லுகிறேன் அம்-உம்-சிம்-வம்-ஓமென்று
வாளப்பா ஓம்-ஐயங்-கிலியுங்-சவ்வுங்-வாசி
வாலையாமும்பறையே சிவாவென்றென்னே     8

என்னவே ரேசகங்தான் முப்பத்திரண்டு
யியலானபூரகந்தான் பதினாறாகு
முண்ணவேகும்பகமே யறுபத்துநாலு
முயர்ந்துநின்ற பிராணாயாமங் குருசொற்கேட்டு
பின்னின்றதசநாடி தாரணையேயானாற்
பிலமறிந்துசையோக நிலையைப்பற்றி
கண்ணில்நின்ற யிடமறிந்து வாமபூசை
கருவான சிவயோகங் காணலாச்சே             9

ஆமென்றும்ஓமென்றும் வங்-யங்-ஓம்-யவசிமந வென்று
ஐந்தெழுத்தைமாறி வுச்சரிக்க வேணும்
வாமென்றவிடகலையில் சிங்-வங்-யங்நங்-மங்-ஓம்-நமயவசி யென்று
வளமையுடன் சிகாரமதையறிய வேணும்
தூமென்றசுழிமுனைக்கி ஓம்-மங்-நங்-யங்-வங்-சிங்
ஓம்-சிவயநம வென்று சூட்சமாய்நகாரத்தையறியவேணும்
தாமென்றமவுனத்தால் தியானஞ்செய்து
சதாசிவமாம்சுழிமுனையி னொளியைப்பாரே    10

பார்க்கையிலே பவளவொளி பச்சைநீலம்
பருவான பொன்பசுமை வெண்மையைந்தும்
சேர்க்கையிலே சூரிய னுதயம்போல
செகசோதி பூரணத்தின் காந்தி தானும்
ஆர்க்கையிலேகொடுத்த பொருள் வாங்குமாப் போல
ஐந்துருவுமொன்றான வடிவேதோணுங்
காப்பதுதபன் திருவடியே சரணமென்று
காத்தவர்க்குத்தீங்கில்லை கருணைதானே        11

கருணைதருமக்கினியாதித்தன் சந்திரன்
கலந்தொன்றாய்நின்றது பூரணமேயாகும்
பொருள்நயமாயறிபவனே புண்ணியவானாகும்
புகழ்சொன்னசற்குருவே யாசானாகும்
அருள்கிரணசோதியதா யுதிக்குமெலே
வாயித்தெட்டிதழ்மேலே யமிர்தகர்ப்பந்
திருவறிந்துவுண்டவனே சிவயோகியாகுஞ்
சிவசிவாகாலறிந்தோன் சித்தனாமே             12

சாகாதகாலை நன்றாய் காணவேணும்
தணல்வேகாததலையறிந்து கூடவேணும்
போகாதபுனலறிந்து வுண்ணவேணும்
பொருளறிந்தசற்குருவைபோற்றவேணும்
வாகாகமூன்றரையுந் தன்னுக்குள்ளே
வகைதெரியலட்சியத்தை வணங்கிக்கேளு
ஆகாதுவொன்றுமில்லை யெல்லாமாகும்
அதைரியமிலாப்பொருளாகுஞ் சகலசித்த                     13

சித்தென்னசிற்றின்பம் பேரின்பமென்ன
செல்காலம்நிகழ்காலம் வரும்காலமென்ன
சித்தென்னசித்தினுட லானந்தமென்ன
சடமென்னபொருளென்ன வுயிர்தானென்ன
வித்தென்னமரமென்ன வேர்தானென்ன
வெள்ளியென்ன தங்கமென்னலோகமென்ன
பத்தென்னயெட்டென்னயிரண்டுமென்ன
பரமரகசியமான விந்தைகேட்டே                 14

விந்துகட்டசுழிமுனைகண் ணொளியைப்பாரு
வழிரேகையைப்பாரு சுழியைப்பாரு
அந்தவட்டத்தோங்கார மதனைப்பாரு
ஐந்துபஞ்சாட்சரத்தைப்பாரு
வுpந்துவிட்டுப் போகாதே விந்தைக்கட்டு
விதரணையாய்தோமுகத்தி லிருந்துபாரு
விந்தைவிட்டால்யோகிகட்குச் சலனம்விந்து
விடாமலே வேதாந்தக் கயிறிற்கட்டே            15


கட்டுவதுமூன்றோடே றைந்தைச்சேரு
கலந்தெட்டுத்தன்னோடே யிரண்டைச்சேரு
ஒட்டுவதுசத்துடனே வொன்றைச்சேரு
வுறதியாய்சேர்த்தபின்பு வோக்கச்சேரு
மூட்டுவதுதுலாசந்தா னடங்கிற்றானால்
முனையோடுசுழியாணி யாதாரந்தோணும்
சட்டமுடன்லட்சதீட்சை நன்றாய்கேளே
சாரமறியபூரண நூல் தன்னைப்பாரே              16

நூல்பாருகொங்கணவர் கடைக்காண்டத்தின்
நுணக்கமெல்லாமதிற்றோணும் பூசைதீட்சை
பால்சீனிபழந்தேன்கற்கண்டு வைந்துமாகும்
பால்திரட்டுயுண்டருசி போலேகாணும்
மூலகுரு மந்திரமு மமிர்தந்தன்னில்
மூட்டினார்நியாயவகை யெல்லாஞ்; சொன்னார்
கால்பாருதலைபாரு புனலைப்பாரு
கண்காதுமூக்கி துவாய்க் கண்டவாரே             17

கண்டத்தில்நின்றசித் தரியைப்பாரு
கண்புருவத்திடைவெளியி னொளியைப்பாரு
அண்டத்தில்வெளிதோன்றும் நடுவேநின்ற
அங்குமிங்குமெங்குநின்ற வடவைப்பாரு
சண்டமாருதம்போன்ற காலினாலே
தட்டிவிடுயகர அஸ் வலகரனைப்பற்றி
துண்டத்தின் முனைபாரு குண்டலியைப்பாரு
சுதமான மூலாதாரம்பாரே                       18

ஆதாரமூலவட்டத் தம்பம்பாரு
அறிமுகவனட்சரத்தைக் கண்டுதேரு
வேதாவிமாலுடையயெழுத்தைக்கண்டால்
வெட்டவெளி யாங்காரக் கம்பந்தோணும்
சூதாகமானிடற்கு யென்றும்வாசி
சூட்சமா-யங்-வங்- கென்றுந்தியானி
பாதாரமேகெதி ஓம்-அங் கென்றூணு
பதியிலேவங்-கங்கே யெழுத்தைநாட்டே           19

நாட்டப்பாபாழ்வெளியில் பசும்பொன்பச்சை
நாடியிடைபின்கலையுஞ் சுழியேசுத்து
வோட்டாப்நந்திகம்பத் தொளியைப்பாரு
ஓங்காரமுங்கொண்ட சிங்-வங் கென்று
ஈட்டப்பா-யம்-மம்-மென்றெண்ணி
யியங்குகின்றமூலத்தின் படியைநாட்டி
ஆட்டப்பாவைங்கோண மேலேவட்டம்
அதன்மேலேநாலிதழி னெழுத்தைமூட்டே          20

மூட்டியேவாசிவைத்து பிராணாயாமஞ்செய்ய
மூலகணபதியும் வல்லபையுஞ்சித்தி
சூட்டியேஅத்தயடி மூலங்கண்டாற்
சொல்வதென்னசகலசித்து மதின்மேற்பாரு
பூட்டியேபிருதிவப்பா சவாதிட்டானம்
பொன்னிறமாம்நாற்கோண மிதழாருக்கும்
தாச்டிகமாய்வரசித்து ஓம்-நம் மென்று
சாதகமாய்பிராணாயந் தாக்கநன்றே              21

நன்றானநான்முகனுஞ் சரஸ்வதிங்காணும்
நாடோறுஞ்சந்துச்டி நினைக்கலாகும்
நன்றானும்நடமெத்த வாலைபூசை
அந்திசந்திஉச்சியிலு மடைவாகச்செய்து
ஒன்றானபிரமநிறம் பொன்னதாகும்
ஓகொகோகுலையத்தோர் காணார்மான்பர்
மன்றானமணிப+ரகம் யிறைபோல்நிற்கும்
விட்டத்தின்பத்திபத்திழ்தான் மாயனாமே          22

மாயனாம்பூரந்தான் மயங்குவாண்
ராமசீதாலட்;சுமியுமாலும் பாரு
ஆயனாம்பச்சைமா கமலமேனி
மாயனோடுஅரனைப்போற் காந்தியாகும்
தூயமாம்புரியவட்டம் வாசிதேசி
யுயிர்க்குசுகமாந்தி ஆலம்பொசிப்பாய்
ஞாயமாம் ஓம்-வம்-மம்-உமாவென்று
நாட்டமாம்பிராணாய வரிசையாமே              23

வாசித்துங்கெணசித்தும் வாலேசெய்தார்
பரிசையாய்நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
பத்திமுத்தியாய்மனதில் செபிக்கவேணும்
உரிசையாயியுணர்வுபற்று வதற்குமெலே
ருத்திரனார்முக்கோணவட்டமேலே
சுரிதையாய்ப்பனிரெண்டு யிதழேநிற்கும்
சத்துருத்திரிருத்திரனார் தன்னைக்கானே          24

தன்னைத்தான்காணவே அம்-உம்-ஊம்-ஆம்மென்று
சார்வாகவாசியொடு ரேசியாதே
உன்னைத்தானறிவிக்குஞ் சங்காரகர்த்தன்
வுருக்காட்டுமஞ்சுரிநாமம் பசுமைநீலம்
ஆன்னந்தான் அனாகதமாஞ் சுழித்தவீடு
வறிவானநினைவுக்குள் லிங்கம்பீடம்
பின்னைத்தானிதுவன்றி வேறேயுண்டோ
புரிதுசொல்லக்கூடாது சின்மயமாமென்றே         25

சின்மயத்தின்செயலறிவார் சித்தர்முத்தர்
தேசிகருமநவமுனிக ரிசிகளாகும்
டீபான்மயத்தின்செயலறிவார் வாதிசமுசாரி
விழிராசர்வசியமுதல் யோகிசித்தர்
மின்மயத்தின்விசுத்தியறு கோணம்நிறங்கறுப்ப
மேல்வட்டமீரெட்டு யிதழேயாகும்
துன்மயத்தின்ரோபவமா மகேசுவரனும்
மகேசுவரியானவம்பிகையின் ரூபங்களே          26

அம்வகையையறிவதற்க அம்-உம்-ஓம்-வம்-யம் மென்று
அழகானகால்மடக்கி யோகங்செய்ய
தம்பிகையாம்பதியின்கோடி யீசன்காந்தி
தாய்காந்திஅருணனொளி கோடிக்கொம்பரம்
நம்பினபேர்க்கெந்நாளு மழியாசித்தி
நவகோடிநாதாக்கள் தெரிசனையேயாகும்
உம்பரோடவிளையாட கௌனசித்தி
வுயர்ந்தநின்றகாயசித்தி யுருதியாமே             27

உறுதியாம்ஆக்கினை சக்ரவட்டம்
உள்ளரணடிதழாகுங் கருப்பவண்ணம்
சோதியாமாகாயம் மனுக்கிரகந்தோற்றும்
புகழா இம்-உம்-ஊம்-ஆம் மென்ற
திருவாலெட்சியத்தால் யோகஞ்செய்ய
செய்யவேசதாசிவனுந் தெரிசிப்பார்பார்
அறுதியாமனோன்மணியா ளம்மையாஞ்சித்தி
ஆவிரமென்னுமிரவிமதி போலொளியாங்காணே   28

ஒளியதுகாணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு
வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு
ஆறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும்
மந்திடந்தான்சகலசித்தக் காதிபீடம்
வெளிகாண சதாசிவந்தான் மின்னல்கோடி
வெளிச்சம்போல்கண் கூசம்பார்க்கப்போகா
வழிகாணமுத்திதனில் துவாதசந்தான்
மகாசொர்க்கமுத்தியுமா மட்டசித்தே             29

அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ்
மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது
விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும்
வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு
சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு
சன்முகமாமாதாரக் கருவைக்கேளு
திட்டமுடன்மனவுறுதி சின்மயத்தைவெல்லுந்
திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே           30

 

அகத்திய மகாமுனிவர் ஞானம் 30
                           முற்றிற்று