FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on August 02, 2012, 09:12:04 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 035
Post by: Global Angel on August 02, 2012, 09:12:04 PM
நிழல் படம் எண் : 035


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Ananya அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்




(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/035.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Bommi on August 09, 2012, 09:37:55 PM
அதிகாலை பொழுதில் என்
வீட்டு வாசலில் உறவு  பூக்கள்
அன்பு புன்னகையால் -அனைவரும்
அழகிய மாக்கோலம் இட்ட
என் இனிய உறவுகள்

வாலிப வசந்தங்களின் திருவிழா
விடுமுறையில் வந்த ஒரு வசந்த விழா
சொந்தங்கள் சூழந்த என் இல்லம்
பாசம் நிறைந்த ஒரு பல்கலைகழகம்
இக்கோலங்கள் கூட எங்கள்
மனகோலங்கலுக்கு உயிர் ஓவியம்மாகியது

நம் வீடு என்று நாள்தோறும்
அனைவரையும் பார்த்த சந்தோஷம்
அன்னையாய் எண்ணி மகிந்தேன்
மாமியை பார்த்து வெக்கப்பட்டு
மாமனை மரியாதையாய் பார்த்து
மாமன் மகளை கண் ஓரத்தில் காதல் செய்து
சித்தப்பா ,சித்தியுடன் கொஞ்சி
பெரியப்பா ,பெரியம்மாவுடன் ஆசைவார்த்தை பேசி
புத்தாடை உடுத்தி புது பொலிவுடன்
பட்டாம் பூச்சியாய் நான்

புள்ளிகள் இட்டு பூரிகிறோம் பூ மகளாக
கோலமிட்டு குதுகளிகிறோம் குழந்தைகளாக
வர்ணம் இட்டு மயங்குகிறோம் பறவைகளாக
வான்முட்டும் வர்ண ஜாலம் கோலங்களாக!!!!!!

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on August 10, 2012, 01:19:06 AM
காலம் கடுகதியில்
கண நேர தயக்கமின்றி
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
காலத்தின் ஓட்டத்திற்கும்
வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும்
வாய்க்குள் கூட
வருவதை திணித்துக்கொண்டு
காலில் ரெக்கை கட்டிய கூட்டங்களாய்
இன்று மனித இயந்திரங்கள் ..
புலர்ந்ததில் இருந்து
புணர்தல்வரை
வேகம் விவேகமற்று
போய்கொண்டேதான் இருக்கிறது ...


எஸ் எம் எஸ் உம்
இ மைலும்
இதயங்களை இணைக்கும் காலத்தில்
உறவுகளையும் இவைதான்
இணைக்கின்றது ...


முகம் பார்த்து
முகவரி சென்று
முகமன் கூறும் வழக்கமெல்லாம்
முகபுத்தகம் ... இணையதள வழியால்
இனிதாகத்தான் நடகின்றது
மாமன் மச்சான் என்று கட்டி தழுவுதலும்
மாமி மாமா என்று மரியாதையை செய்வதும்
அக்கா தங்கை என கட்டி கொள்வதும்
அரிதாக போய்விட்டது ..


ஒரு மின் அஞ்சலிலும்
எஸ் எம் எஸ் இலும்
ஹாய் ஹவ் ஆர் யு ...
கேட்பதிலும் அடங்கி போய்விட
எங்கே நம் கலாச்சாரம்
இடிவிழுந்த பனை மரமாய்
மொட்டையாய் போய்விடுமோ
என்ற அச்சம் தலை தூக்க....
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும்
பேணி காக்க ...
பண்டிகைகள் நாம் இருப்பாதாய்
மார்தட்டி கொள்கிறது ...

வாசல் தெளித்து கோலம்
வகை வகையாய் பலகாரம்
வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன்
வேபில்லையாட்டும் மாமி
விழுந்து விழுந்து படிக்கும்
அக்கா அண்ணா தம்பி தங்கையர்
எப்போதும் அலுத்துகொள்ளும் அப்பா
அடுப்பங்கரையில் அடைந்து கொள்ளும் அம்மா
அயல்வீட்டு அருமை நபர்கள்
அனைவரும் ஒன்று கூடி
அழகாய் பொழுதை கழிக்கும்
அழகான பண்டிகை நாள்

அனைவர் முகத்திலும்
அத்தி பூத்தால் போல்
அவளவு சந்தோசம் ....
இதன் புண்ணியத்தை பெருமையை
கட்டி கொள்வது 
பண்டிகையா ...?
இல்லை பண்டிகையை
விடுமுறை நாளாக்கிய
நம் பாரதத்து தலைவர்களா ...?

எது எப்படியோ
ஒன்று கூட ஒரு நாள்
உலகை ரசிக்க ஒருநாள்
தின்று கழிக்க ஒருநாள்
திகட்டும் வரை பேச ஒருநாள் ..
இந்த ஒருநாள் ..
ஒவொரு நாளும் வாராதோ
ஏக்கத்துடன் .....
 
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Rainbow on August 10, 2012, 01:32:01 AM


பண்டிகையே வா
பலகாரங்கள் பலவகை
பண்பாட்டு பழக்கங்கள் சிலவகை
பக்கத்து வீடும்
கமகமக்கும் சுக வாசனைகள்
தவறி திரியும் உறவையும்
தன்னை மறக்கும் உறவையும்
கட்டி இழுத்து கூடி வைக்கும்
பண்டிகையே நீ வாழ்க ..


விட்டு போன உறவையும்
தொட்டு நிக்கும் மனதையும்
கட்டி இழுத்து இணைக்கும்
கமகமக்கும் பண்டிகையே
ஆடு வெட்டும் இருக்கும்
அருவா வெட்டும் நடக்கும்
மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகள்
மனதை மயக்கும் மயக்கும்


புத்தாடையும் புது வரவும்
சித்தாடையும் சிறு வடிவும்
கொத்தாக அனுபவிக்கும்
கொடையான நாளிது ...
அப்பாவும் அம்மாவும்
அக்காவும் மாமாவும்
தாத்தாவும் பாட்டியும்
தலை முறைகளை வளர்ந்து
ஆசீர்வதிக்கும் அன்பான நாளிது
எந்நாளும் தொடர
சொந்தங்கள் மிளிர
பண்டிகையே நீ
பலமுறை வாராயோ ...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on August 10, 2012, 12:14:51 PM
கூட்டுக் குடும்பம் அழகான பலாப் பழம்
இனிப்பான உறவுகளின் இருப்பிடம்
பெரியவர்கள் அர்ச்சகர்
தாய் தந்தை கோவில் கருவறை
அதில் சிறு குழந்தைகள் தெய்வம்
கோவிலுக்கு எடுத்துக்காட்டாய்!

தெய்வமாக வாழும்  குழந்தையின்
கொஞ்சல் சிரிப்பும் ,சின்ன சின்ன குறும்பும்
கிருஷ்ணனை நினைவுக்கு கொண்டு வரும்
அப்படி ஒரு நினைவுகள் உங்களிடம் வைக்கிறேன் !

 தேனிகள் கூட்டாக சேர்ந்து மலர்களில் உள்ள
தேனை ஒன்றாய் சேர்த்து வைப்பது போல
கூட்டு குடும்பமாய் என் இல்லம் -அதில்
அப்பா, அம்மா , பெரியப்பா ,சித்தப்பா ,
அக்க ,தங்கை, என்ன பல உறவுகள் ஒன்றாக !


எந்த செய்தியாய் இருந்தாலும் எல்லாம்
ஒன்றுகூடி சரியான முடிவு செய்யவும்
அதை செய்து வெற்றி பெறவைத்து
அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதும்
குடும்பத்தின் சிறப்பு...

இன்றைய நாள் என் அப்பா ராணுவத்தில்
பணிபுரிந்து இல்லம் திரும்புகிறார்
அதற்கான நிகழ்வுகள் இல்லத்தில்
வெகு சிறப்பாக சந்தோசத்துடன்
குடும்பத்துடன் குதுகலத்துடன் தொடர்ந்தது ....

பண்டிகை நாள் போல திருவிழா கோலம்
பூண்டது, தந்தையை வரவேற்க,
வீட்டின் வாசலில் கோலமிட்டு
வண்ணம் தீட்டி, பொறாமை, கோபம்
பொச்சிரிப்பு, இவைகள் அனைத்தையும்
அறியாமல் கூட்டு குடும்பமாய்,
எண்ணற்ற உறவுகளுடன் உன்னதமாய்
காத்துக்கிடக்கின்றோம்!!!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பெரியவர்கள்
சொன்னது அன்று ஞாபகம் வந்தது ......