Author Topic: விண்டோஸ் 7ல் குறிப்புகள் எடுத்து வைப்பதற்கு  (Read 2333 times)

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது.
இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம்.

கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பார்க்கலாம்.

கணணியிலேயே இதனை ஒருங்கிணைத்துக் கொடுப்பதால் இயக்கத்திற்கு இதனைக் கொண்டு வருவது எளிது. ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில் sticky என டைப் செய்திடவும்.

இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். மிக விரைவாகவும் இதனைக் கையாளலாம். இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியாக ஸ்டிக்கி நோட், டெஸ்க்டொப்பில் காட்டப்படும்.

இதனை டெஸ்க்டொப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம்.

டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன் சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும் இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் வண்ணத்தை மாற்றலாம்.

புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும்.

நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ்(“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.

ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம் அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம்.

அதே போல இதன் மீது கிளிக் செய்தால் அவை இயக்கப்பட்டு திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம்.

நோட்டினை மூடி வைக்க ரைட் கிளிக் செய்து Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.

ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை.

எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் கொப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.

நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் போர்மட் செய்வது போல, அழுத்தம், சாய் வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)

நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்பபாட்டை நாம் தேர்ந்தெடுப்போம்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.

இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால் சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:Users{username}AppDataRoamingMicro softSticky Notes என்ற கோப்பறையில்
காணலாம்.