Author Topic: ரம்ஜான் நோன்பன்று தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்கள்!!!  (Read 745 times)

Offline kanmani

இஸ்லாமிய காலெண்டரின் படி ஒன்பதாவது மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு இஸ்லாமிய பண்டிகை தான் ரம்ஜான். இதுவரை செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, மனம், இதயம் மற்றும் ஆன்மாவை சுத்தப்படுத்துவதற்கான நேரமாக கொண்டாடப்படுவது தான் ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகைக்காக முஸ்லீம்கள் ஒரு மாத காலம் நோன்பை மேற்கொள்வார்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சுத்தமாக இருப்பதற்கு மேற்கொள்ளும் நோன்பில், சிறு துளி எச்சிலைக் கூட விழுங்கமாட்டார்கள். அந்த அளவில் கடுமையான நோன்பை மேற்கொள்வார்கள்.

மேலும் சில கெட்ட பழக்கங்களையும் இந்த மாதத்தில் மேற்கொள்ளக்கூடாது. உதாரணமாக, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், ரம்ஜான் பண்டிகையினால் கிடைக்கும் பெரிய நன்மை என்னவென்றால், கெட்ட பழக்கங்களை தவிர்த்து நல்ல பழக்கங்களை மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்வது தான். ஏனெனில் அந்த வகையில் இஸ்லாமிய விதிகளானது விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த ரம்ஜான் நோன்பின் போது தவறாமல் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

தொழுகை

தினமும் இஸ்லாமிய கடவுளான அல்லாவை வணங்க வேண்டும். அதுவும் மசூதிகளுக்கு சென்று தொழுகையை தவறாமல் மேற்கொண்டு, உடல் மற்றும் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தானம்

மசூதியில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும். வேண்டுமெனில் அத்தகையவர்களுக்கு உணவு, உடை மற்றும் பணம் போன்றவற்றை கொடுத்து, செய்த பாவங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

பாவ மன்னிப்பு

இதுவரை செய்த பாவங்களுக்கு கடவுளிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இனிமேல் எந்த ஒரு பாவத்தையும் செய்யமாட்டோம் என்ற சபதத்தை எடுக்க வேண்டும்.

குரான்

நோன்பு மேற்கொள்வதால், தூங்காமல் இருப்பதற்கும், பசியெடுக்காமல் இருப்பதற்கும், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை படிக்க வேண்டும். இதனால் செய்த பாவங்கள் குறைந்து, புண்ணியமானது அதிகரிக்கும்.

நல்ல உணவுகள்

நோன்பு இருப்பதால், நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பசி அதிகம் இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் ஒரு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், செரிமானப்பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும்.

ஆல்கஹால்

நோன்பு மேற்கொள்ளும் போது, ஆல்கஹால் அல்லது சிகரெட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். முடிந்தால், இந்த ரம்ஜான் பண்டிகையிலிருந்து ஒரு சபதம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அல்லாவும் மன்னிப்பார்.

சண்டை கூடாது

பொய் சொல்வது மற்றும் சண்டை போடுவதை தவிர்த்து, எப்போதும் அன்பாகவும், சந்தோஷத்துடனும் இருந்து, ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்களை மதிக்கவும்

நோன்பு இருக்கும் போது, உடலுறவை தவிர்க்க வேண்டும். மேலும் கோபம் வந்தால், அப்போது பெண்களிடம் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தாமல், பொறுமையாக இருந்து, அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்.

சரியான ஆடைகள்

முக்கியமாக பெண்கள் பின்பற்ற வேண்டிவை என்றால், எவ்வளவு அழகான ஆடைகளை அணிந்தாலும், அதன் மேல் புர்கா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். இல்லாவிட்டால், நோன்பு மேற்கொள்வதே வீணாகிவிடும். ஆண்கள் இந்நாட்களில் டவுசர் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் தலைக்கு தொப்பி அணிந்திருக்க வேண்டும்.