Author Topic: விநாயகரையும், லட்சுமியையும் ஏன் ஒன்றாக வழிபடுகின்றார்கள் என்று தெரியுமா...?  (Read 795 times)

Offline kanmani

தீபாவளி என்றாலே கொண்டாட்டமும் வகை வகையான தின்பண்டங்களும் தான் நினைவிற்கு வருபவை. இதனை நமக்கு அளித்த ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்த தவறக்கூடாது. தீபாவளி பண்டிகையின் காரணம் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக சொல்கின்றார்கள். ஆனால், இவை அனைத்தும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவரை வழிபடுவதையே மூலமாக கொண்டுள்ளது. அதனால், எந்த கடவுளை வழிபட்டாலும், அந்த கடவுளை நாம் நெஞ்சார வழிப்பட்டால், அவர் நமக்கு எல்லா வளத்தையும், செல்வத்தையும், அறிவாற்றலையும் வழங்குவார்.

தீபாவளி அன்று விநாயகரையும் லட்சுமியையும் ஒன்றாக வழிபடுவது மரபாகும். தாய் லட்சுமி செல்வச்செழிப்பிற்கும், வளத்திற்கும் கடவுள். அதேபோல் விநாயகர் கடவுள் அறிவாற்றலுக்கு கடவுள் என்பதும் நாம் நன்றாக அறிந்த ஒன்றாகும். மக்கள் செழிப்பையும், அறிவாற்றலையும் பெறுவதற்காக இவ்விருவரையும் ஒன்றாக வழிப்பட்டு வருகின்றனர்.

எந்த ஒரு விசேஷமும் விநாயகரை வணங்காமல் தொடங்காது. இதற்கு தீபாவளி பண்டிகை விதிவிலகல்ல. விநாயக கடவுள் நமது தடைகளை நீக்குபவர் எனக் கருதப்படுகின்றார். அதனால், நமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தடைகளை நீக்குவதற்காக அவரை முதலில் வழிபடுகின்றனர். அவருடன் சேர்த்து தாய் மகாலட்சுமியின் வடிவங்களை வழிபடுவது தீபாவளியின் முக்கிய சிறப்பு அம்சமாகும். தீபாவளி அன்று இரவு தாய் லட்சுமியானவள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று செல்வச்செழிப்பை வழங்குவதாக கூறப்படுகின்றது.

ஆனால், விநாயகரையும் லட்சுமியையும் ஏன் ஒன்றாக வழிபடுகின்றனர் என்ற கேள்வி தொடர்கின்றது. இதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கின்றது.

மதநூல்களின்படி, ஒருமுறை தாய் லட்சுமி தனது செல்வச்செழிப்பு குறித்தும், அதிகாரங்கள் பற்றியும் திமிர் கொண்டாள். அவரது கணவர் விஷ்ணுவிடம் உரையாடி கொண்டிருந்த போது, தன்னை தானே பாராட்டி கொண்டு, தன்னை வழிபடுவது மட்டும் தான் பலன் தரக்கூடியது என்று கூறினார். தான் மட்டுமே எல்லாருக்கும் செல்வதையும், வளத்தையும் அளிப்பதாக கூறினார். இந்த தொடர் தற்புகழ்ச்சியை கேட்ட பின்பு, விஷ்ணு கடவுள் தேவியின் திமிரை அடக்க எண்ணினார். கடவுள் விஷ்ணு மிகவும் நிதானமாக இவை அனைத்தும் இருந்தாலும், குழந்தை இல்லாவிடில் ஒரு பெண் முழுமை அடைவதில்லை என்று கூறினார். தாய்மை என்பது ஒரு பெண் தன் அனுபவங்களில் மிகச் சந்தோஷமாக எண்ணுவதாகும். தாய் லட்சுமிக்கு குழந்தை இல்லாததால், அது முழுமை அடையவில்லை என்று கூறினார். இதை கேட்ட தாய் லட்சுமி மிகுந்த ஏமாற்றம் உற்றாள்.

கனத்த இதயத்துடன் லட்சுமி, பார்வதியிடம் உதவி நாடி சென்றார். பார்வதிக்கு இரண்டு மகன்கள் இருந்ததால், அவர்களில் ஒருவரை தத்து எடுத்து தாய்மையின் சந்தோஷத்தை அனுபவிக்குமாறு கூறினார். தாய் பார்வதி மனமின்றி தன் மகனை லட்சுமி தேவிக்கு தத்து கொடுத்தார். ஏனெனில், லட்சுமி தேவி நீண்ட காலம் ஒரு இடத்தில் தங்க மாட்டார். அதனால், தனது மகனை சரியாக பார்த்துக் கொள்ள முடியாது என்று கருதினார். ஆனால், லட்சுமி தேவி பார்வதியிடம் தன்னால் இயன்றவரை அவரது மகனை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், அவருக்கு எல்லா சந்தோஷத்தையும் அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

லட்சுமி தேவியின் நிலைமை அறிந்து, தாய் பார்வதி தனது மகனான விநாயகரை லட்சுமி தேவிக்கு தத்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமடைந்த லட்சுமி தேவி தான் விநாயகருக்கு எல்லா வளத்தையும் செழிப்பையும் அளிப்பதாக கூறினார். வளமையை பெறுவதற்காக லட்சுமியை வழிபடுவோர் முதலில் விநாயகரை வணங்கினால் தான் லட்சுமி தேவியின் அருளைப் பெறுவார்கள். அவரை வணங்காமல் லட்சுமியை வழிபடுவோர் தாய் லட்சுமியின் அருளை பெற மாட்டார்கள்.

 அதனால் தான், தீபாவளி அன்று விநாயகரை தாய் லட்சுமியுடன் சேர்த்து வழிபடுவார்கள். அறிவாற்றல் இல்லாத செல்வச்செழிப்பு, தவறான பாதையில் பயன்படுத்துவதில் கொண்டு போய் முடிவடையும். அதனால், செல்வச்செழிப்பை நல்வழியில் செலவழிக்க, முதலில் அறிவாற்றலை பெற வேண்டும். அதனால் தான், விநாயகரும் லட்சுமி தேவியையும் ஒன்றாக வழிபடுகின்றார்கள்.