Author Topic: ~ சுவையான சத்தான கேரட் சாதம் ~  (Read 68 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218380
  • Total likes: 23062
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுவையான சத்தான கேரட் சாதம்



]தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப்
கேரட் – 2 (பெரியது)
பூண்டு – 4 பல்
பச்சைமிளகாய் – 3
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்

செய்முறை :

* கேரட்டை பெரியதாய் துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நன்கு காய்ந்த பின் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* பின் துருவிய கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். கேரட் நன்கு வதங்க தேவையில்லை.
* விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடலை, கொத்தமல்லித்தழை தூவலாம்.
* சுவையான சத்தான கேரட் சாதம் ரெடி.