Author Topic: பத்துக் குற்றம்  (Read 3372 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பத்துக் குற்றம்
« on: November 09, 2011, 07:34:26 AM »
ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது.

அவை :

1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற வேண்டியதைக் குறைவாகக் கூறுதல் .

2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல் .

3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும் சொல்லுதல் .

4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல் .

5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக எழுதுதல் .

6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர் அய்யுறும்படி எழுதுதல் .

7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய நயமில்லாத , பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல் .

8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல் .

9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த் தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல் .

10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த கருத்தின்றி . வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல் .

நன்னூலார் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை , கவிதை , கட்டுரை முதலிய சிறு

படைப்புகளுக்கும் இவ்விதி பொருந்தும் .

இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும் குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன ; இது மொழியைச் சீரழிக்கும் நிலை ;

ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற , " சுதந்தர " ,

மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை .



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: பத்துக் குற்றம்
« Reply #1 on: November 09, 2011, 10:15:02 AM »
நல்ல பதிவு!

Offline RemO

Re: பத்துக் குற்றம்
« Reply #2 on: November 09, 2011, 11:44:53 AM »
ipadila ipa elutha yarum ila

Offline செல்வன்

Re: பத்துக் குற்றம்
« Reply #3 on: November 09, 2011, 01:45:41 PM »
இதெல்லாம் இல்லாமல் ஒரு நூல் எழுதுவது என்பது இக்காலத்தில் சாத்தியம் குறைவு. நல்ல தகவல் . தொடரட்டும் .

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பத்துக் குற்றம்
« Reply #4 on: November 10, 2011, 02:07:11 AM »
ipo mattum illai akkalathilum yen ekkalathilume kastamthan... ;)