FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 21, 2011, 05:54:20 AM

Title: சுவாசம்
Post by: Global Angel on July 21, 2011, 05:54:20 AM
சுவாசம்

‍‍மனதோடு
மற்போர்
செய்பவனே!

மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவனே!!

நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்

அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்