FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 09, 2019, 11:37:14 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: Forum on June 09, 2019, 11:37:14 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 220
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team  சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/220.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: சிற்பி on June 09, 2019, 04:05:00 PM
எங்கு போனாலும்
நாம் இருவரும்
ஒன்றாகவே
போகலாம்
அன்பே.....

அன்பின்
இருபெரும் விளக்கமாக
நீயும் நானும்
இருக்கலாம்

அழகான பூக்களிலும்
அழகற்ற பூவிதழ்கள் உன்டு
அழகற்ற பூக்களிலும்
அமுதம் போல் தேன் துளி உன்டு

இந்த உலகில்
காதலிலும் சில
தோல்விகள் உன்டு
தோல்வியிலிலும் சிலர்
வாழ்ந்தது உன்டு

மனிதர்கள் உண்மைக்கு
எதிரானவர்கள்
நம் காதலுக்கு
எதிரானவர்கள்

அழகே
இந்த எதிர்ப்புகளை
தாண்டியும் நாம்
வாழ்ந்துவிடலாம்
ஆனாலும்
எப்படியேனும் மனிதர்கள்
நம்மை பிரித்துவிட்டால்

நம் வாழ்க்கைக்கும்
பொருள் இல்லை
நாம் வாழ்வதிலும்
பொருள் இல்லை

நீயும் நானும்
கற்பனை கனவுகளால்
நமது வாழ்க்கையை  அலங்கரித்து கொண்டோம்

எனதருமை காதலியே
இப்போது தான் புரிந்தது
கற்பனை வேறு
எதார்த்த வாழ்கை வேறு

இந்த உலகமே
காதல் தந்த பரிசு
அந்த காதலுக்கு
நம்மை நாமே
பரிசாக தந்து விடுவோம்


...அன்புடன் சிற்பி...
(https://i.postimg.cc/SJZZ4MrT/1317285866660726.jpg) (https://postimg.cc/SJZZ4MrT)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: Mr.BeaN on June 09, 2019, 05:47:46 PM
வானம் எல்லாம் நீலமாக..
நாணம் கொஞ்சம் தள்ளி போக..
தேன்போல் இனிமை நம்மை சேர..
இரு கரங்கள் கோர்த்தே இணைந்தே போவோம்!

கொட்டும் காதல் அருவியாக..
நமை முட்டும் ஊடல் தகர்ந்து போக..
நமதன்போ என்றும் மலைகளாக..
துயர் நீக்கி வாழ்வோம் அலைகள் போலே!

மேகம் நம்மில் மழையை தூவ-
ஆகும் நேரம் மோகம் போதும்!
அறிவியல் சொல்லும் அணுவின் அளவே
நம்மை சேரும் துன்பம் போதும்!
வெகு தூரம் நீளும் வானின் அளவாய்..
அன்பு மகிழ்ச்சி காதல் யாவும்..
மிகையாய் நம்மை சேர்வது போலே..
வாழ்வோம் நாமே!!! யுகம் பல கடந்தே!!!

இரு கை கோர்த்து.
இயற்கை சேர்த்து..
உவகை கொள்ள...
வேண்டும் நீயே!!!

__நகைச்சுவையாளன்__பீன்__
[/size][/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: Poocha on June 10, 2019, 07:50:57 PM
கண்ணும்
கண்ணும்
கண்டதும்
காதல் மொழி
கற்று கொள்ள
தொடங்கினேன்

கைகளில்
கைகள் கோர்த்த
சமயம் காதல் புரிய
தொடங்கினேன்

பரஸ்பரம்
நிறமோ
மதமோ
வித்தியாசப்படுத்தி பார்க்கும்
திராணியின்றி
காதல் வளர்க்க
தொடங்கினேன்

உன்னை காணா
ஒவ்வொரு நொடியும்
நீ அழைப்பதாய்
தலைக்குள்
ஒரு குரல்

மனதின்
தவிப்பு
யாரிடம் சொல்ல

கண்ணுக்குள்
எப்போதும்
உன் உருவம்
புன்னகை
பூத்திடும்

பிரியாத
உன்னுடன்
பிரியத்துடன்
இவ்வுலகை
சுற்றி
ரசித்திட வேண்டும்

இருள் மெல்ல மெல்ல
கண்ணுக்கு பழகி
காட்சி விரிவது போல
ஏதோ ஒரு இசை
மெல்ல மெல்ல
தொடங்கி அருகில் சத்தமாய்
கேட்க தொடங்கும் நேரம்

உன் கண்களில்
தெரிந்த மிரட்சியில்
பதற்றமடைந்து
கண் விழித்து
பார்க்கிறேன்

தொலைபேசி
அழைப்பு
தொடுதிரையில்
சிரித்தபடி
உன்
புகைப்படம்

சுரீரென
உரைத்தது
உன் பிரிவு

வலி தாங்க
பழகுவதே
வாழ்க்கையின்
மிகசிறந்த
பாடம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: KuYiL on June 10, 2019, 10:33:27 PM
என்றுமே உன் காதலனாய் நான் !!!
நீ
சிரிக்கும் சிரிப்பில் மழலை !
சிணுங்களில் வெள்ளி கொலுசு!
காதில் உன் மூச்சு நான் விடும் சுவாசம் !
உன் அணைப்பின் இறுக்கத்தில் 
காற்றுக்கு என்றுமே தோல்வி தான் !
உன் ஆசை வார்த்தை
என் வாழ்க்கையின் வெற்றி பாதை !
உன் உள்ளங்கை சூட்டில்
எரிந்து போன என் தோல்விகள்!
சோகத்தில் சாவை தேடும்
கொலை காதலன் நான் அல்ல!
உயிர் விடும் நொடி வரை
உன் உயிராய் வாழ
உலகம் என் எதிராய் நின்றாலும்
உன் நிழல் என் உயிர் கவசம் !
மலை விளிம்பில் உன்னுடன் நான்..
வானம் பூமி சாட்சியாய்
மலை அருவி சாரல் அச்சதை தூவ
உன் கரம் பிடிக்கும் இக்கணம்
என் வாழ்க்கையின் அடித்தளம் !
காமத்தில் மட்டும் முடிவதல்ல
என் காதலின் தேடல்
என் சிகரம் நோக்கிய
வெற்றி பாதைக்கு
என் தேடலில் நான் கண்ட
நம்பிக்கை நட்சத்திரம் !
உன்னை மட்டுமே கை பிடித்து நிற்கும்
நான்
உன்னுடன் நிற்பது சாவின் விளிம்பில் அல்ல
சிகரம் தொட்ட நம் காதலின் வெற்றி மகுடம் ....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: RishiKa on June 10, 2019, 11:04:28 PM

அன்பே  ! ஆருயிரே !
 
அருவியின் அழகை காண சென்றோமா ?
அகத்தின் பரிமாறலுக்கு சென்றோமா ?
உன்னோடு கரம் கோர்த்து நிற்கும் வினாடிகள் ....
மண்ணோடு நாம் வாழும் யுகங்கள் .....

மேக  படகில்  ஏறி 
விண்மீன் பிடிக்க  போகலாம்  வா
பறப்பதும்  மிதப்பதும்
காதலில்  மட்டும்  சாத்தியம்  இங்கு....

சலனமற்ற  என்  வாழ்வில்  ...
சலங்கையாய் சிரிக்க  வைத்தாய் நீ .
வாழ்க்கை  சிகரத்தில்  ஏற ..
சிறகுகளை விரிப்போம்  வா  ..

நாம்  ரசித்த  காதலுக்கு
நன்றி  சொல்வோம்  காலத்திற்கு ...
பிரியத்தின்  பாதையில்  நம் பயணங்கள்
பிரியாத  வரம்  கிடைக்க   வேண்டுவோம் ....

நெஞ்சுக்குள்  பூத்த  மொழிகள்  யாவும்
நேசத்தில்  நெய்த  காதல் ...
என்னோடு  நீ  வந்தால் இங்கே ...
புதியதோர்  கனவு தேசம்  உருவாகும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220
Post by: Guest 2k on June 14, 2019, 08:19:19 PM

நதியென
நீண்டு விரியும்
இந்த பாதையின் முடிவு
நாம் என்றுமே அறிந்திராதது
இருந்தும் இணைந்தே பயணிக்கும்
ஒத்திசவை கொண்ட நம் மனங்களுக்கு
முடிவற்ற பாதைகள் தான்
பெரும் விருப்பமானதாக இருக்கிறது


பெருவனமென
நீண்டு விரியும்
இந்த பாதையின் அடர்த்தி
நாம் என்றுமே கண்டறிந்திடாதது
அடர்ந்த இவ்வனத்தின் எதிர்ப்புகளைப் பற்றி
யாதொரு கவலையும் இருந்ததில்லை
காதலின் பாதை கரடு முரடானது
என்பதறிந்தே
இணைந்து பயணித்தோம்


புதைமணலின் உள்ளிழுக்கும்
இந்த பாதையின் ஆழம்
நாம் பரீட்சித்திராதது
நம்
சங்கமிக்கும் நினைவுகளை புதைமணலிற்கு பரிசளித்து
ஆழங்களை அளக்கிறோம்


எல்லையின்றி விரியும்
நீள்வானத்தின் எல்லையை
யஞ்ஞனம் அறிந்துகொள்வது
காதலின் சிறகுகள் கொண்டு
பறந்தே திரிகிறோம்
கண்டங்களை கடக்கும்
வலசைப் பறவைகளாய்


ஆழியின் பேரிரைச்சல்
அடங்கி பேரமைதி நிலவும் இடத்தினை
ஒத்த இந்த பாதையின்
முடிவில் இருக்கும்
அமைதியின் ரீங்காரம் நாம் கேட்டிராதது
நூற்றாண்டுகளா நீந்தியும் கடக்க முடியாத
காதலின் ஆழத்தை விடவும் ஆழி ஆழம் பெரியதா என்ன?


சர்ப்பமென
நீண்டு விரியும்
இந்த பாதயின் நீளம்
நாம் என்றுமே அறிந்திராதது
காலங்களை கடத்தும் சக்தி கொண்ட
காதலின் கரம்பிடித்து
புன்னகை சூடி
கடவைகளை கடந்து செல்கிறோம்


அடர் இருட்டின் பிசுபிசுப்போடு
நீளும் இப்பாதையில்
முன்னோக்கி எதுவுமே தெரிவதில்லை
இருந்தும் இணைந்தே பயணிக்கிறோம்
நெடுந்தோங்கி நிற்கும் மலைகளும் உண்டு
கிடுகிடுக்கும் பள்ளங்களும் இங்குண்டு
கைப்பிடித்து செல்லும் காதலின்
வழித்தடங்கள்
பெருவெளிகளை கடந்து செல்கிறது
இருளின் முடிவில்
என்றுமே சிறு வெளிச்சம் உண்டுதானே?


ஆர்பரித்து விழும்
நதியின் வீழ்ச்சியென
எல்லைகளற்று வீழும் இப்பாதையின்
ஆழம் நாம் அறிந்திராதது
இருந்தும்
இரு கைகள் கோர்த்து முன் செல்கிறோம்
நம் முன்னே என்ன இருக்கலாம்?
என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்