FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 14, 2019, 11:31:39 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: Forum on September 14, 2019, 11:31:39 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 228
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக      வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilmp3.net/zfile/228.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: ShaLu on September 17, 2019, 11:03:21 PM
மானிடராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டுமென்பர்
இன்று அந்த மானிடர்
படும் இன்னல்கள் பல.
 
வரும்காலத்தில் இந்தியா
வல்லரசாகும் என்றனர்..
ஆனால் சுயவாழ்வாதாரத்திற்கே
வழியில்லா அவலநிலையில்
அல்லலுறுகின்றனர்.
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இலட்சங்களை செலவழித்து
இலட்சியப் பாதையினை
அடைய நினைத்து
உயர்கல்வியும்,முதுகலைப்பட்டமும்
தன்னிடத்தில் கொண்டு
பகல் இரவாய் காத்துக்கிடக்கின்றனர்
 
 
பட்டப்படிப்பு படித்த
பட்டதாரிகள் கூட
படிப்பிற்கு எள்ளளவும்
சம்பந்தம் இல்லா வேலைகளில்
கனவுகளையும் , ஆசைகளையும்
மண்ணோடு மண்ணாய் புதைத்துவிட்டு
மனதிற்கு ஒவ்வா வேலைகளை
மனக்குமுறல்களுடன் பார்க்கின்றனர்.
 
 
திறமை இருக்கிறது பட்டப்படிப்பும் இருக்கிறது
ஆனால் வேலைத்தர முன்வருவார்
யாருமில்லை என்றாயிற்று
கேள்விக்குறியானது
நம் பட்டதாரிகளின் வாழ்க்கை.
 
 
பெற்றோரின் கடின உழைப்பில்
 பட்டம் படித்த இளைஞனுக்கு
கிடைப்பதில்லை  தன்
படிப்புக்கேற்ற வேலை..
 
ஒருவேளை கடுமையான
இன்னல்களுக்கு இடையே
வேலை கிடைக்கப்பெற்றாலும்
பணிநீக்கம் என்ற ஒன்று
பலரின் வாழ்க்கையை
கேள்விக்குறியாக்கி விடுகின்றது
 
எவ்வளவு இன்னல்கள் ,
போராட்டங்கள் , அவமானங்கள்
எல்லாவற்றையும் கடந்து
வெற்றிப்பாதையில் செல்ல முனைந்தால்,
பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி
வேலையில்லை என்று
வீட்டிற்கு  அனுப்புகின்றான் முதலாளி.
 
 
என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம்
என்றான் அன்றொரு கவிஞன்
ஆனால் இன்றோ...
என்று தணியும் இந்த
வேலையில்லா திண்டாட்டம் என்றாகிவிட்டது.
 
காத்திருப்போம் விடியலை நோக்கி
காலம் மாறும் என்ற நம்பிக்கையோடு!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: JeGaTisH on September 18, 2019, 12:50:40 AM
படித்தது எதுவோ!  பட்ட படிப்பு
அது இப்போது பட்டம் விட
மட்டுமே உதவுகிறது !

கட்டு காட்டாக காசு கொடுப்பவனுக்கு
வேலைகள் கதவை தட்டி கையில் கொடுக்கிறது !

ஏழை எங்கள் வாழ்வை
உயர்ந்து பார்ப்பவர் யாரோ! 
எங்களை கை பிடித்து
கரை சேர்ப்பதுவும் யாரோ !

பட்ட படிப்பு படித்தாலும்
பார்ப்பதட்கு வேலை இல்லாவிட்டால் !
பக்கத்து வீட்டுக்காரன் கூட
படி ஏறமாட்டான் !

பஞ்சமென பதுங்கிய கடையில்
டீ யும் பேஞ்சுமாய்
வாழ்க்கையை வாழ கற்றேன் !

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத உலகிலே
நம் வருங்கால சங்கதியினருக்கு
என்ன வேலை கிட்டுமென வாடிடுமோ வருங்காலமே  !

   

single சிங்க குட்டி ஜெகதீஷ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: உங்களை போல் ஒருவர் on September 18, 2019, 10:52:01 AM
நுண்ணறிவுடன் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்க்கு கிடைக்கும் மரியாதை
செய்தித்தாளை நம்வீட்டு வாசலில் வந்து சேர்ப்பவர்க்கு கிட்டுவதில்லை!

உள்துறை வடிவமைப்பாளர்க்கு கிடைக்கும் மரியாதை
ஒரு தச்சருக்கு கிட்டுவதில்லை!

கண்ணாடி அறையில் சிற்பம் விற்பவர்க்கு கிடைக்கும் மரியாதை
உளி கொண்டு சிலை வடிக்கும் சிற்பிக்கு கிட்டுவதில்லை!
 
தானியம் விற்க்கும் வியாபாரிக்கு கிடைக்கும் மரியாதை
நாற்று நட்டு அறுவடை செய்யும்  விவசாயிக்கு கிட்டுவதில்லை !

தேநீர் திருவிழா மேலாண்மை செய்பவர்க்கு கிடைக்கும் மரியாதை
தேயிலை தோட்டத்தை பராமரிப்பவருக்கோ அலுவலகத்தில்
தேநீர் வழங்கும் நபருக்கோ கிட்டுவதில்லை!

ஒவ்வொரு பணியும் தனித்தன்மை கொண்டதே 
ஒருசில பணியாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை
மற்ற பணியாளர்களுக்கு கிடைக்க தவறியது ஏனோ?
உடையை காணும் மக்கள் உழைப்பை மறவது ஏனோ?
மனமுழைப்பும் உழைப்பே உடலுழைப்பும் உழைப்பே
உழைப்பவர்கள் ஒவ்வொருவருமே மரியாதைக்கு உரியவர்களென்ற
எண்ணத்தை நம் சிந்தையில் நிறுத்திக்கொள்வோமே!




உங்களை போல் ஒருவர்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: Unique Heart on September 18, 2019, 02:50:46 PM
உழைப்பாளர் வர்க்கம்.

உலகை படைத்த இறைவன்,
அதை உழைப்பை கொண்டே சுழலவைதான்.

உலகில் படைக்க பட்ட ஒவ்வொரு உயிரும்,
ஏதோ ஒரு வகையில் உழைப்பு செய்கிறது.

தேனீ அது,  தன் உழைப்பை தேடலின் மூலம் வெளிப்படுத்தும்

கவிஞனின் உழைப்பு அது 
கவித்துவதில் வெளிப்படும்.

சிற்பியின் உழைப்பு அது,
சிற்பத்தின் சிறப்பினால் வெளிப்படும்.

எழுத்தாளனின் உழைப்பு அது ,
எழிமிகு சிந்தனையின் எழுத்துகளினால் வெளிப்படும்.

ஆசானின் உழைப்பு அது, அன்பின் சிந்தனையில் உருவான 
மாணவர்களின் நன்னடத்தையில்  உருவகம் பெரும்.
 
யாசகனும் உழைக்கிறான்,
மனவலியுடன் யாசிக்கும் கனமெல்லாம்..
 
உழவனின் உழைப்புதனை உலகமே உணர்ந்திருக்கும்.

இது  போலாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையில் உழைத்து கொண்டே இருக்கின்றனர்.

உயிர் மூச்சி அது எப்படி இன்றியமைத்ததோ,
அது போன்று உழைப்பு அதும் இன்றி அமையாததே !.

உழைக்கும் வழி அது வெவ்வேறான பொழுதிதிலும்,
உழைப்பவன் அனைவரும் உழைப்பாளர் வர்க்கமே...

பிரிவுகளை ஒன்றிணைக்க உழைப்பாளர்களை
உருவகித்தான் இறைவன்,

இறைவன் நிர்ணயித்த உழைப்புதனை, 
உழைப்பாளர்களை கொண்டே  கௌரவித்தது உலகு.

உழைப்பாளர்களுக்கென ஒரு  தினம்,
அது நம் இந்திய நாட்டில் "மே தினம்"....

உழைப்பின்றி  அமையாது உலகு... MN-AARON....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: thamilan on September 19, 2019, 07:31:05 AM
உழைப்பு
மனிதனையும் மிருகங்களையும் வேறுபடுத்தும்
ஒரு உன்னத சக்தி
உழைப்பால்  உயர்ந்தவவர்கள்
உலகில் பலர்
உலகின் முன்னேற்றமே
உழைப்பால் உருவானது தானே

படிப்பு ஒரு அறிவு
அந்த அறிவை
ஆக்கமுள்ளதாக்குவது உழைப்பு
உழைப்பில் உயர்வு தாழ்வுகள் இல்லை
மண்கொத்துபவனும் உழைப்பாளி தான்
மரம் வெட்டுபவனும் உழைப்பாளி தான்
அறிவை நம்பி வாழ்பவன் அறிவாளி
உடல் உழைப்பை நம்பி வாழ்பவன் உழைப்பாளி

வசதியாக வாழவேண்டும் என்று நினைப்பதை விட
வறுமை இல்லாமல் வாழ வேண்டும் என்று
நினைப்பவர் வாழ்வு ஆனந்தமாகும்
பட்டம் பதவி தராத மதிப்பை
உழைப்பு மனிதனுக்கு தந்திடும்

கடின உழைப்பும் விடா முயற்சியும் 
மனிதனை  மேன்மைப்படுத்திடும்
உலகில் உயர்ந்தவர் அனைவருமே
உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் 
உடை கசங்காமல் வாழ வேண்டும் என
நினைப்பதை விட
எது செய்தாலும் நேர்மையாக வாழ நினை
உன் வாழ்வு உன்னதமாகும் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 228
Post by: SweeTie on September 21, 2019, 07:54:17 AM
வாய்க்கால் வரம்பெல்லாம்  இப்போ
மாடி வீடாய்  மாறிருச்சு
விவசாயி  அவர்களுக்கும் 
விவசாய  தொழில் போச்சு

பரம்பரையாய் செய்த தொழில்
பலருக்கும்  மறந்தாச்சு
பெரும் தொழிற்சாலைகள் உருவாக
சிறுகைத்தொழில்  சிதறிப்போச்சு


மொட்டை மாடியில் கொட்ட கொட்ட விழித்து
 பட்டப்படிப்பு  படித்தென்ன லாபம்
படியேறி இறங்கி கால் மரத்துப்போயாச்சு
விண்ணப்பம் எழுதி பேனா மை தீர்ந்துருச்சு

கணினிகளும்  ரோபோக்களும்  வேலைக்குவந்தாச்சு
 வேலை இல்லாப் பட்டதாரிகள் வீதிக்கு போயாச்சு
பொருளாதாரம் வீழ்ச்சி என்பார் ...  ஏழைகளின்
வாழ்வாதாரம்தனை  மறந்தோர்

காலம்தான் பதில் சொல்லுமா?  இல்லை
காணாமல் போய்விடுமா?
சாளரங்கள் வழியே   குளிர்
தென்றல்  வீசிடுமா?
இயற்கையே வழிசொல்
இறைஞ்சுகின்றோம் உம்மை !! 
12