Author Topic: கெளதம புத்தர்  (Read 951 times)

Offline Anu

கெளதம புத்தர்
« on: May 21, 2012, 09:44:17 AM »
"தனது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள வேண்டும்."
*****************************************************************************


நான் தேவனோ.., அவதாரமோ இல்லை.. புத்த நிலையை அடைந்த ஒரு மனிதனே நான். புவியில் பிறந்த மானிதராகிய நீங்கள் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும்
*******************************************************************************
"விழிப்பு உள்ளவர்கள் தம்மைத்தாமே திருத்திக் கொண்டு இல்லற வாழ்க்கையில் பற்று இல்லாதவர்களாய்.., நீர் நிலையை விட்டுப் பறந்து போகிற அன்னப் பறவையைப் போல.., இல்லற வாழ்க்கையை விட்டுப் போகிறார்கள்.
********************************************************************************


"ஞானமில்லாதவனுக்குத் தியானம் இல்லை..,
தியான மில்லாதவனுக்கு ஞானம் இல்லை..,
தியானமும் ஞானமும் சேர்ந்திருப்பவனே..,
மோட்ஷத்தின் பக்கம் இருக்கிறான்..!"
*********************************************************************************
கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"