Author Topic: ஐயோ இது உண்மையா?  (Read 1534 times)

Arul

  • Guest
ஐயோ இது உண்மையா?
« on: August 28, 2013, 01:00:05 AM »
ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
    அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
      அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
    அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
 
  இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
   
        காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
   இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 2
« Reply #1 on: August 28, 2013, 12:06:49 PM »
அந்த அலறல் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இருவருடைய இதயமும் நின்றேவிட்டது ஒரு நிமிடம் அதே நேரம் அந்த வெளிச்சமும் அதே இடத்தில் நின்றது பின்னர் சற்று பாதையை விட்டு விலகி காட்டிற்க்குள் சென்று ஏரியின் பின் பகுதியில் சென்று இவர்களுக்கு நேராக நின்றது,இவர்கள் இருவருமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயத்தில் மயக்கம் போட்டு அந்த மரத்தடியிலேயே விழுந்துவிட்டனர்


      அவர்கள் பின்னால் வந்த ஒருவர் மரத்திற்க்கு பின்னால் ஒழிந்திருக்கும்போது அவரை ஏதோ காலில் பலமாகக் கடித்துவிட்டது அந்த வலி தாங்கமுடியாமல் தான் பலமாக கத்தியிருக்கிறார் அவரும் சிரிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டார், அவர்கள் மூவரும் மயங்கிய பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஒளி அவர்களை நோக்கி வருகிறது

   அவர்களின் முகத்தில் காலைக் கதிரவனின் வெப்பக் கதிர்கள் தன் முகத்தில் பட்டவுடன் கண் விழித்தனர் விழித்துப் பார்த்தால் மூவருக்குமே அதிர்ச்சி,ஒருவரை       ஒருவர் பார்த்துக் கொள்கிறனர் முதலில் அவர்களின் பெயர்களைச் சொல்லி விடுகிறேன் முதலில் வந்த இருவரில் ஒருவரின் பெயர் முத்தையன்,இன்னொருவர் கந்தவேல்,அவர்களை பின் தொடர்ந்து வந்தது வேறு யாருமல்ல கந்தவேலின் அண்ணண் மகன் முருகன் தான் முருகனும் வெளியூருக்கு சென்று திரும்ப தாமத மாகிவிட்டது அதனால் காட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த போது இவர்கள் இருவரும் வருவதைக் கண்டவுடன் அவன் ஒழிந்து கொண்டான் அதற்க்கான காரணமும் இருக்கிறது அதை பிறகு கூறுகிறேன் அவர்கள் முன்னால் சென்றவுடன் இவனும் பின்னாலேயே சென்றுவிடலாம் என்று தான் மறைந்து கொண்டான்,அவர்கள் முன்னால் சென்றதும் பின் தொடர்ந்து சென்றான்
 
   முருகனைப் பார்த்தவுடன் கதிர்வேல் ஒரு நிமிடம் ஆடித் தான் போய்விட்டார்,பழையதையெல்லாம் மறந்து அவனிடம் பாசமாக நீ எங்கேயடா வந்தாய் நீயா இரவில் அலறியது அவனும் ஆமாம் ஏதோ காலில் கடித்து சதையப்பிய்த்துவிட்டது என்று கடிபட்ட இடத்தை பார்த்தால் காலில் எந்த விதமான காயமும் இல்லை பலத்த அதிர்ச்சி அதைவிட மிகுந்த அதிர்ச்சி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை அடர்ந்த வனத்திற்க்குள் ஒரு மிகப் பெரிய மரத்தின் கீழே இருந்தனர் அங்கு மனித நடமாட்டத்திற்க்கான எந்த வாய்ப்பும் தெரியவில்லை ,இரவு நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது ம்யக்கமடைந்தது வரை தெரிகிறது,அதற்க்குமேல் எப்படி இங்கு வந்தோம் எப்படி காலில் ஆன காயம் காணாமல் போனது நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம்
 
     அப்பொழுது ஏதோ பெரிய சத்தம் கேட்டது பறவைகள் அனைத்தும் நான்கு திசைகளிலும் ஆபத்து வருவதைப் போன்று அலறின,ஏதோ அவர்களை நோக்கி வருகிறது.................................   
இன்னும் பல த்கில் அனுபங்கள் உங்களுக்காக ............................மீண்டும் நாளை

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 3
« Reply #2 on: August 29, 2013, 11:06:58 AM »
 


ஏதோ ஒரு பெரிய சத்தம் ஏதோ அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டவுடன் மூவருக்கும் ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை சட்டென்று முருகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த செடிகொடி அடங்கிய புதருக்குள் சென்று மறைந்து கொண்டனர்
   சத்தம் மிக அருகாமையில் கேட்டது இப்பொழுது நிறைய சத்தங்கள் கேட்டது  புதரின் அருகில் வரும்போது தான் தெரிந்தது அவை கரடிகள் என்று அவைகள் அனைத்தும் அந்த பெரிய மரத்தின் கீழே நின்று விளையாட ஆரம்பித்தன இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமானது ஆனால் வெளியே சென்றால் உயிரே போய்விடும் என்ன செய்வது அப்பொழுது
 
  திடீரென்று ஒரு கரடி அந்த புதரையே உற்று நோக்கியது,பின்னர் மெதுவாக அந்த புதரை நோக்கி வர ஆரம்பித்தது இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது  என்னசெய்வதென்றே தெரியவில்லை சட்டென்று முருகன் தன்னருகே காய்ந்த மர கட்டை ஒன்று  கிடந்தது அதை கையில் எடுத்துக் கொண்டான் எது நடந்தாலும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு அதை தாக்க தயாரானான் அவர்கள் எங்களால் அதிக தூரம் ஓடக்கூட முடியாது பொறுமையாய் இரு என்று சமாதானம் செய்தார்கள்
 
   புதருக்கு அருகில் வந்து விட்டது நுகர்ந்து பார்க்கிறது தன் முகத்தை புதரில் நுழைக்க முற்படும் போது அதற்க்கு பின்னால் இன்னொரு சிறிய கரடி அதன் மீது வந்து வேகமாக மோதி விளையாடியது சட்டென்று திரும்பி அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டது
  சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைத்தும் வேறொரு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன அப்பொழுது தான் தன் சுயநிலைக்கு  திரும்ப ஆரம்பித்தனர்,அங்கிருந்து வெளியே வந்தனர்
  முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் பின்னர் எது நடந்தாலும் சரி என்று தண்ணீர் இருக்கிமிடம் தேட ஆரம்பித்தனர் அதற்க்கு அவர்களுக்கு அதிக நேரம் தேட அவசியமில்லாமல் சிறிது தூரத்திலேயே தண்ணீர் ஓடும் சல சல சத்தம் கேட்டது அந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்று பார்த்தால் அங்கு மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் ஓடும் தண்ணீர் எந்த வித அசுத்தமும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மூவரும் வேகமாக  சென்று தண்ணீரை தொட்டவுடன் வேகமாக கையை பின்னோக்கி இழுத்தனர் அவ்வளவு குளிர் மையாக இருந்தது ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக அருந்த ஆரம்பித்தனர் ,தண்ணீர் உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு ஒரு இனம் புரியாத் சக்தி ஒன்று தன்னுள் நுழைவதாக உணர்ந்தனர்
   
   அதனருகே சிறிது தூரத்தில் ஏதோ பழங்களின் தோட்டங்கள் இருப்பதைக் கண்டனர் அங்கே சென்று பார்த்தால் பல வகை பழங்கள் காய்த்து தொங்கின பறித்து சாப்பிட்டு பசியாரினர் அங்கேயே ஒரு மரத்தின் அடியில் படுத்தனர் படுத்தவுடன் சோர்வினால் உறங்கிவிட்டனர் கண்விழித்து பார்த்த போது மாலை நேரமாகி சூரியன் மறையத் தொடங்கிவிட்டது ,அப்பொழுது தன் சுய ஞாபகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன ,இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ,எப்படி நம் ஊருக்கு செல்வது நாம் உயிரோடு திரும்பி செல்வோமா என்று பயம் உருவாகியது இன்றும் இந்த காட்டில் தான் இருக்க வேண்டுமா ? என்று மூவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே அப்பொழுது
 
  ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது அதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி எல்லோரின் மனதிலும் ,இங்கு யாரோ இருக்கிறார்கள் அவர்களிடம் சென்றால் கட்டாயம் வழிகிடைக்கும் என்று அந்த பாதை  வழியாக நடக்க ஆரம்பித்தனர் இருட்ட ஆரம்பித்தது ஏற்க்கனவே மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெளிச்சம் குறைவாக தான் இருந்தது ,இருட்டு அதிகமானதால் பாதையை  தவிர ஒன்றுமே கண்களுக்கு தெரியவில்லை வேகமாக நடந்தனர் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது .
 
அப்பொழுது அந்த வழியில் இவர்களை பார்த்துக் கொண்டு ......................?
     
 
இன்னும் திகில் தொடரும்

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 4
« Reply #3 on: August 30, 2013, 06:25:09 PM »
அப்பொழுது அவர்களை பார்த்துக்கொண்டு பல கண்கள் இவர்களை பார்க்கின்றன அந்த கண்கள் அனைத்தும் இரவில் மிக ஒளியுடன் பிரகாசமாக தெரிந்தன,இவர்களுக்கு மிகவும் நடுக்கத்தை உண்டாக்கின ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த கண்கள் தெரிந்த பகுதியில் உற்று நோக்கினர்
 
    ஒரு கருப்பாக குட்டையான சில மனித உருவங்கள் ஒரு அடி உயரமே இருந்தனர் அதைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர் ஒரு கூட்டமாக இருந்தனர் நாம் தவறான வழியில் வந்துவிட்டோம் இப்பொழுது என்ன நடக்குமோ என்று முருகன் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த கூட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது
 
  திடீரென்று அனைவரும் அங்கிருந்து பறக்க ஆரம்பித்து மயமாய் மறைந்துவிட்டனர் எங்கே சென்றிருப்பார்கள் என்று சுற்றும் தேடினான் யாரையும் காணவில்லை எங்கே சென்றிருப்பார்கள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் அதே எண்ணம் தன் உயிரை விட அவன் மனதில் இப்பொழுது அவர்களைக் காண்கின்ற ஆர்வமே அவனுக்கு அதிகமானது அவன்  அவர்களை தேட ஆரம்பிக்க எண்ணி புறப்பட முற்படும் போது
 
அவர்கள் இருவரையும் விட்டு வந்தது ஞாபகம் வந்தது வேகமாக திரும்பிவந்து பார்த்தான் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் காணவில்லை பகீரென்றது இதயம் படபடக்க ஆரம்பித்தது

  உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது வேக வேகமாக அந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தான் ஆனால் யாரும் தென்படவில்லை பாதை ஒரு மலையின் உச்சியை நோக்கி சென்றது அப்பொழுது சிலரின் பேச்சு சத்தங்கள் அவன் காதில்  கேட்டன அப்படியே ஒரு நிமிடம் நின்றான் அந்த சத்தமும் நின்றுவிட்டன

எந்த திசையில் இருந்து வந்தது என்று சுற்றும் கண்களை சுழல விட்டு காதில் ஏதேனும் சத்தம் வருகிறதா என்று பார்த்தான் எந்த சத்தமும் வரவில்லை அப்பொழுது அவன் காலில் ஏதோ சத சதவென்று ஒட்டியது என்னவென்று பார்த்தான் இருட்டில் தெரியவில்லை கையால் தொட்டு பார்த்தான்
 
  இரத்தம் அப்படியே உறைந்துவிட்டான் அவர்கள் இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கும் போது மீண்டும் பேசுக் குரல்கள் கேட்டது ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அந்த பேச்சு வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடக்க நடக்க அந்த பேச்சு  சத்தமும் நகர்ந்து கொண்டே சென்றது
 
அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பக்கம் நினைவு இறந்திருப்பார்களோ  என்று மாறி மாறி அவன் எண்ணங்கள் தடுமாறியது அப்பொழுது ஏதோ பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது மரங்களெல்லாம் சலசலத்தன இதோ வந்துவிட்டார்கள் பார்த்தவுடன் உயிரே நின்றுபோனது.....................


இன்னும்

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 5
« Reply #4 on: September 02, 2013, 08:46:51 AM »
அங்கே வருபவர்களின் கண்கள் அனைத்தும் இருட்டில் பளபளத்தன வேகமாக வந்தவர்கள் இவனுக்கு சற்று முன்னால் இருந்த  பள்ளத்தில் இறங்கினர் அங்கே அவன் சற்று மன தைரியத்துடன் எட்டிப் பார்த்தான் அங்கே கண்ட காட்சி அவனை மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது
அங்கே ஒரு அடி உயரமுள்ள ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர் அவர்கள் சுற்றியும் மிகப்பெரும் ஒளி மிகப்பிரகாசமாக தெரிகிறது அவர்களின் நடுவே வயதான ஒருவர் அமர்ந்திருக்கிறார்

அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அனைத்தும் பிரகாசமாக ஜொலிக்கின்றன அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது அவை அனைத்தும் தங்கத்தால் ஆனவை  என்று 
அவர்கள் வைத்திருக்கும் கைத்தடிகள் முதற்கொண்டு தங்கத்தால் பிரகாசித்தது என்ன தான் நடக்கிறது என்று உற்று பார்க்கத் தொடங்கினான் நடுவே அமர்ந்திருந்த பெரியவர் அனைவருக்கும் ஏதோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களும் கோசம் செய்துகொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை அவன் ஆச்சரியத்தில் இருக்கும் போதே


அப்பொழுது அவன் காதருகே ஒரு குரல் கேட்டது ஆனால் உருவம் எதுவும்  தெரியவில்லை மீண்டும் ஏதோ சமிக்கை குரல் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை அவன் சற்று பின்னால் நகர்ந்து சுற்றும் கண்களை சுழல விடுகிறான் ஒரே இருட்டு மீண்டும் திரும்பி முன்னால் பார்த்தான் அங்கேயும் கும்மிருட்டு அங்கே மற்றவர்கள் இருந்ததிர்க்கான அடையாளமோ எதுவும் தென்படவில்லை
நடுநிசி எங்கு செல்வது என்றும் அவர்கள் இருவரின் நினைவும் அப்பொழுதுதான் அவனுக்கு திரும்ப வந்தது திக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான் அப்பொழுது அவன் எதிரில் நடுக்காட்டில் பார்த்தான் நேற்றிரவு வந்த அதே வெளிச்சம் இருந்தது அவர்கள் அனைவரும் மறைந்ததர்க்கான் காரணம் அந்த வெளிச்சமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே
 
அவர்கள் இருவரும் அவன் பின்திசையிலிருந்து ஒரே குரலில் முருகா முருகா என்று மிகப் பெரும் சத்தத்துடன் கூப்பிட்டனர் அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இவனும் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான் காடே நிசப்தமாக இருந்தது இவர்களின் குரல் காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது ஓடினான் பல மரம் செடி கொடிகளிலும் முட்டி மோதிக் கொண்டே ஓடினான்
சட்டென்று அவர்கள் இருவரின் குரல் நின்றுவிட்டது இவன் ஒரு நிமிடம் நின்றான் மீண்டும் மீண்டும் இவன் அவர்களைக் கூப்பிட்டான் ஆனால் பதில் வரவில்லை .உடனே அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அப்பொழுது அவன் காலை ஏதோ தட்டிவிட கீழே விழுந்தான் சரிவில் உருண்டு நேராக கீழ்  நோக்கி சென்றான் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிவிட்டான் தனக்கு இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு கரங்கள் அவனை அள்ளிக்கொண்டது அது ஒரு மரத்தின் கிளையில் அவனை அமரசெய்தது மீண்டும் மறைந்துவிட்டது
இவனுக்கு என்ன நடந்தது என்று என்றே தெரியவில்லை தான் மரத்தின் மீது எப்படி வந்தோம்  என்றே அவனுக்கு தெரியவில்லை இதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிட்டது
அப்பொழுது நடுக்காட்டில் இருந்த வெளிச்சம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது அவன் பின்னால் திரும்பி பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் அவனை உற்று பார்த்தபடியே அவனை நோக்கி பாய தயாராக ....................தொடரும் இன்னும் பல மர்மங்களுடன்

ஹலோ ஹலோ எங்கே போறிங்க ..இன்னும் சுவாரஸ்யங்கள் இனிமே தானே கண்டீப்பா படிங்க

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 6
« Reply #5 on: September 04, 2013, 05:04:05 PM »
அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்தது
கண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு பார்த்தாலும் அந்த வெண்மையான வெளிச்சம் மட்டுமே தெரிந்தது இப்பொழுது இவனுக்கு அது இவன் இருக்கும் இடத்திற்கு 100 அடி தூரம் தள்ளி இருந்தது

என்ன இந்த வெளிச்சம் ஏன் இப்படி நடந்தது எப்படி இங்கு வந்தோம் இங்கிருந்து எப்படி வெளியே செல்வோம் என்று
அமைதியாக கிளையின் மீது அமர்ந்து மிகவும் மனம்கவலைப்பட அழ ஆரம்பித்துவிட்டான் அவர்கள் இருவரும் கட்டாயம் இறந்திருப்பார்கள் நான் மட்டும் எப்படி தப்பி செல்லபோகிறேன் நானும் இறப்பது உறுதி என்று ஓவென்று கத்தி அழவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது ஆனால் கத்த முடியவில்லை இரவு முழுவதும் கிளையின் மீதே அமர்ந்திருந்தான் உறக்கமில்லாமல்

சூரியன் உதிக்க ஆரம்பித்தான் லேசாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது கீழே இறங்க முற்பட்டு கீழே பார்த்தான்
ஐயோ கிளையின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இவன் உயிரே நின்றுவிட்டது நல்லவேளை இரவில் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்திருப்போம் என்று மனதில் பயந்து கொண்டே மரத்தின் மையப்பகுதிக்கு வந்து கீழே இறங்கினான்

அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் ஆனாலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி எழுந்து நடக்க ஆரம்பித்தான்

இரவில் நடந்தவைகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே நடக்கும் போது இரு தோள்பட்டையிலும் ஏதோ ஒரு கணமான உணர்வு எதோ அவன் மீது அமர்ந்திருப்பதைப் போல அவன் கைகளால் தோல் பட்டயை தட்டி விட்டான் ஆனாலும் பாரம் குறையவில்லை


ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் மற்றும் பேச்சுக் குரல்கள் இரு காதுகளுக்கு அருகிலும் என்னவென்று காதுகளை கூர்மையாக்கி கேட்க துவங்கினான்

அப்பொழுது அவன் தலையின் மீது ஓங்கி யாரோ அடித்தார்கள் அதே இடத்தில் மயங்கி விழுந்தான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியமலே ..................

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 7
« Reply #6 on: September 09, 2013, 09:30:47 AM »

  முருகன் கண்விழித்துப் பார்த்தான் பார்த்த உடனே சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான் கண்கள் முழுதும் வியப்பில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு பிரமிப்பு அவன் பார்த்த இடம் சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது தங்கத்தால் ஆன அழகிய மாளிகை போன்ற அறையில் அவன் படுத்திருந்தான்


ஆனால் அங்கு யாரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை தண்ணீர் அருந்த வேண்டும் போல் உணர்வு அதை அவன் நினைக்கும் போதெ அவன் அருகில் தண்ணீர் குவளை மற்றும் பல வகை உணவுகளும் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது அவன் பசியின் வேகத்தில் மற்றவைகளையெல்லம் மறந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் சாப்பிட்ட பிறகு தான் யோசித்தான் அவர்கள் இருவரும் இங்கே தான் இருப்பார்களோ என்று நினைத்து தேடிப் பார்க்கலாம் என்று எழுந்து வந்து கதவுகளைத் தேடினான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருந்தன எங்கே வெளியே செல்லும் வாயில் இருப்பதையே அவனால் கன்டுபிடிக்க முடியவில்லை

இது இரவா பகலா என்று கூட அவனால் கனிக்க இயலவில்லை எப்படி இங்கிருந்து வெளியே செல்வது எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று மீண்டும் கவலையில் அழ ஆரம்பித்தான் குடும்பத்தில் என்ன செய்கிறார்களோ எங்கு தேடுகிறார்களோ என்று வேதனை அவனை இன்னும் மன வேதனை அடையச் செய்தது

அந்த கோபத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சுற்றிலும் அடித்தான் அப்பொழுது அங்கு வந்த சத்தங்களை கொண்டு அங்கு உள்ள நுழை வாயிலை கண்டு பிடித்தான் வேகமாக சென்று திறந்து கால்களை வெளியே வைத்தது தான் அங்கிருந்து கீழே விழ ஆரம்பித்தான் அந்த  மாளிகை அந்தரத்தில் பறந்து சென்று அவன் கண்முன்னே மறைந்தது

கீழே நேராக அங்குள்ள பெரிய நீர்தேக்கத்தில் விழுந்தான் விழுந்த உடனே அவன் கை கால்கள் எல்லாம் மறத்து போக ஆரம்பித்தன அவ்வளவு குளிரான நீர் அது அங்கிருந்து வேக வேக மாக நீந்தினான் தன் உயிரை காப்பாற்ற எவ்வளவு பலமாக நீந்த முடியுமோ நீந்தி கரையை அடைந்தான் அப்பொழுது தான் அவனுக்கு போன உயிர் மீண்டு வந்தது

சுற்றிலும் முழுவதும் இருட்டில் எந்த வித சத்தமும் இல்லாமல் காடே அமைதியாயிருந்தது.அது அவனுக்கு மேலும் மிகுந்த பயத்தை கொடுத்தது எங்கே செல்வது இப்பொழுது எப்படி இரவை கழிப்பது என்று அருகில் ஒரு பெரிய மரத்தை நோக்கி நடந்தான்

அங்கே..........

 

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 8
« Reply #7 on: September 10, 2013, 11:19:05 AM »
அந்த மரத்தின் பக்கத்தில் செல்லும் பொது அவன் காலில் ஏதோ தட்டியது அவன் கீழே விழுந்து எழுந்து பார்த்தான்  இருட்டில் எதுவும் தெரியவில்லை சிறிது நேரம் கண்களை நன்கு உற்று நோக்கினான் ஏதோ ஒரு தடிமனான உருவம் படித்திருந்தது ஆனால் அது என்ன வென்று அவனுக்கு சரியாக கனிக்க இயலவில்லை அந்த உருவம் தூக்கத்திலிருந்து கண் விழித்தது அந்த கண்கள் இரண்டும் மிக மிக பிரகாசமாக மின்னின அவ்வளவு வெளிச்சம் அந்த கண்களில் இருந்து வெளிப்பட்டது


முருகனுக்கு ஒரு கணம் தான் எந்த உலகில் இருக்கிறோம் என்ற பிரமையே தோன்றியது சட்டென்று அந்த மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டான் அந்த உருவம் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தது அந்த வெளிச்சம் காட்டையே பிரகாசமாக காட்டியது முருகனுக்கு,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.உடனே மிகுந்த இருட்டாகிவிட்டது அந்த இடம் .முருகனுக்கு அந்த உருவம் என்னவென்றே தெரியவில்லை சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது இங்கிருந்தால் நமக்கு ஆபத்து நேரலாம் மரத்தின் மீது ஏறிக் கொள்வோம் சிறிது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து வேக வேகமாக ஏறினான் மேலே ஏறி அமைதியாக நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டான்

அப்பொழுது அவன் அருகில் ஒரு சுகந்தமான மணம் வீசியது,அவனுக்கு அது என்ன மணமென்று தெரியவில்லை ஆனால் மிக மிக அருமையாக இருந்தது அதை சுவாசிக்க அவனுக்கு அப்படியே மயங்கி போனான் அந்த மணத்திலேயே அங்கே திடீரென்று இடி முழக்கம் காடே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது,என்ன சத்தம் அது என்று திடிகிட்டு எழுந்து பார்த்தான் எதுவுமே அவன் கண்களுக்கு புலப்படவில்லை மீண்டும் நிசப்தம் எந்த சத்தமும் இல்லை இவன் நெஞ்சம் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்தது

ஒரு நிமிடம் கழித்து அங்கே .................

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 9
« Reply #8 on: September 16, 2013, 09:57:04 AM »
ஒரு நிமிடம் கழித்து மீண்டும் இடி போல சத்தம் வந்தது முருகனுக்கு இன்னும் பயம் அதிகரித்து உடல் நடுங்க ஆரம்பித்தது இரண்டாவது சத்ததில் மரத்தின் கீழ் படுத்திருந்த உருவம் எழுந்துவிட்டது அதன் கண் வெளிச்சத்தில் காடு நன்றாக தெரிந்தது அதே நேரத்தில் அந்த காட்டின் பல இடங்களில் இதே போன்ற உருவங்கள் எழுந்து தன் கண் வெளிச்சங்களை  காட்டில் பல திசைகளிலும் பரவவிட்டன அப்பொழுது தான் முருகனுக்கு அந்த உருவம் என்ன என்பது தென்பட்டது

மிக அகோரமான பற்கள் கோரமான முகத்துடன் நான்கு கால்களுடனும் இருப்பதை பார்த்தவுடன் இவனுக்கு உயிரே ஒரு நிமிடம் நின்றுவிட்டது மாட்டியிருந்தால் அப்பொழுதே நம் உயிர் போயிருக்குமே என்று அவன் மிகவும் பயந்து மரத்தில் அப்படியே மறைவாக நின்று பார்க்கத் தொடங்கினான்

அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சத்தம் வந்த திசை நோக்கி நடந்தன அப்பொழுது கட்டில் உள்ள சிறு சிறு விலங்குகளும் அந்த வெளிச்சத்தின் முன்னால் வரிசையாக ஓடி வந்து நடந்து செல்ல ஆரம்பித்தன அந்த காட்சியை கண்டவுடன் முருகனுக்கு தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை இது எல்லாம் கனவா ? அல்லது நினைவா ? என்று அவனுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு அங்கு நடக்கும் செயல்கள் தோன்றியது

எப்படியாவது நாமும் பின் தொடர்ந்து இவைகள் எங்கு செல்கின்றன என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகியது உடனே அவன் மரத்தின் மீதிருந்து இறங்க ஆரம்பித்தான்  மெதுவாக கரையின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தான் அப்போதும் அவன் அருகே அந்த சுகந்தமான மணம் அவனை சுற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது அவன் அதை நுகர்ந்து கொண்டே நடந்தான்

அங்கு எதோ அருகில் யாரோ பேசுவது போன்ற உணர்வும் அவனுக்கு தோன்றியது அக்குரல்கள் பெண்களின் குரல்கள் போன்றும் அவனுக்கு கேட்டது ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தான் அவன் கண்கலுக்கு எதுவும் தென்படவில்லை ஆனாலும் அந்த குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது அதை மீண்டும் கேட்க அவன் அமைதியாக இருந்தான் அந்த குரல்களும் இப்பொழுது அமையதியாகின
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் அப்பொழுது மீண்டும் பேச்சு ஆரம்பித்தன ஆனால் அவனுக்கு அது என்ன மொழி என்றே அவனுக்கு தெரியவில்லை சிரிப்பு சத்தங்கள் மட்டும் மிக தெளிவாக கேட்டது

ஆனால் அப்பொழுது அவன் எதிர்பாரத நேரத்தில்....................(இன்னும்)

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 10
« Reply #9 on: September 21, 2013, 11:10:34 AM »
அவன் எதிர்பாரத நேரத்தில் அவன் கையை யாரோ பிடித்து இழுத்தி நிறுத்தினார்கள் அவனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது

உடல் பயத்தில் வேர்த்து நீராய் கொட்டியது திரும்பி பார்த்தான் யாருமே தென்படவில்லை அவன் கண்களுக்கு ஆனால் அவன் கையை மட்டும் இருக்கமாய் பிடித்திருந்தார்கள் அவனால் அதை விடுவிக்க முடியவில்லை அவனும் எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் அவனால் முடியவில்லை சோர்ந்து போய் அவன் முயற்சியை கைவ்ட்டு விட்டு மெதுவான குரலில் யார் நீ என் கையை எதற்காக பிடித்திருக்கிறாய் விட்டு விடு என்று கூறினான்


ஆனால் எந்த பதிலும் வரவில்லை அவன் மிகுந்த கோபங் கொண்டு மிக பலமாக கையை விடு என்று வேகமாக கத்தினான் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது அந்த சத்தம் முன்னால் சென்ற விலங்குகள் அனைத்தும் நின்று விட்டன பின்னோக்கி திரும்புவதற்குள் அவன் கையை வேகமாக இழுத்து அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் இழுத்து சென்றது

அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று இப்பொழுது என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினான்.முன்னால் சென்ற விலங்குகளில் சில பின்நோக்கி வந்து தன் கண்களின் வெளிச்சத்தை பரவவிட்டன மீண்டும் சிறிது தூரம் பின்நோக்கி வந்தன இவன் இருக்கும் திசை நோக்கி வர ஆரம்பித்தவுடன் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இதோடு நம் வாழ்க்கை முடியப் போகிறது என்று வேக மாக கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்

அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் அவனை பிடித்திருந்த அந்த பிடியுடன் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தான் பெரிய மரக்கிளையின் மேல் அவனை இறக்கி விட்டது அப்பொழுது தான் நம்மை யாரோ காப்பாற்றுகிறார்கள் இங்கும் நமக்கு உதவ யாரோ இருக்கிறார்கள் என்ற மன தையிரியம் அவனுக்கு வந்தது

அந்த விலங்குகள் அவன் இருந்த மரத்தின் அருகில் வரை வந்து தேடிப்பார்த்து விட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தன அதே நேரம் மீண்டும் அந்த பலமான இடியோசை மீண்டும் கேட்டது உடனே விலங்குகள் அனைத்தும் வேக வேக மாக செல்ல ஆரம்பித்தன ஆனால் முருகனுக்கோ அதை பார்க்கும் ஆவல் அதிகரித்தும் பயத்தினால் உடல் சோர்வடைந்ததால் சாப்பிடமல் பசி வேறு அதிகரித்ததால் அவன் அப்படியே மயங்க ஆரம்பித்தான்

அவன் கண் விழித்த போது...........................(இன்னும்)


Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 11
« Reply #10 on: September 27, 2013, 04:38:53 PM »

   அவன் கண் விழித்து பார்த்த போது சுற்றிலும் அமைதியாக இருந்தது அதே இடத்தில் தான் இருந்தான் இரவு பார்த்த எந்த தடையங்களும் அங்கு இல்லை தண்ணீர்  தாகம் அதிகரித்தது

சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான் இறங்கி அருகில் இருந்த நீர் நிலையில் குளிர்ந்த நீரை பருக ஆரம்பித்தான் மிக இதமாக இருந்தது அவனுக்கு உடம்பில் ஒரு புத்துணர்வு உடனே அவன் மனதில் இன்று மாலைக்குள் இந்த காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற வேகத்தில் நடக்க ஆரம்பித்தான் வேகமாக ஆனால் அவனுக்கு பசி வேறு அதிகமாயிருந்தது சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்தான்

ஆனால் உண்ணுவதற்கு எதுவும் தென் பட வில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடக்க நடக்க அவனுக்கு உடல் சோர்வு ஏற்பட தோன்றியது ஆனால் அவன் நடப்பதை நிறுத்தவில்லை சிறிது தூரத்தில் பழ மரங்கள் இருப்பதை பார்த்துவிட்டான் அதைப் பார்த்த பின் தான் அவனுக்கு ஒரு நிம்மதி பிறந்தது வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கைக்கு எட்டிய பழங்களை பறித்து சாப்பிட தொடங்கினான்

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு எதோ சத்தம் கேட்டது நன்றாக உற்றுக் கேட்டான் என்ன சத்தமென்று அவை குதிரைகள் ஓடி வரும் சத்தம் என்பது அவனுக்கு புரிந்தது சட்டென்று மரங்கள் இடையே தன்னை மறைத்துக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை பார்க்க காத்திருந்தான்

அவன் அருகில் அந்த சத்தம் வந்த போது மறைவில் இருந்து எட்டிப பார்த்தான் குதிரைகள் தான் அவை நிறைய வந்தன ஒரு போருக்கு செல்வதைப் போன்று தயார்படுத்தப் பட்டிருந்தன பல விதங்களில் நிறங்கள் இருந்தாலும் அந்தந்த நிறங்கள் ஒவ்வொரு குழுக்களாக வந்தன எல்ல குதிரைகளுக்கும் முன்னால் ஒரு வெள்ளை நிறக் குதிரை வந்து கொண்டிருந்தது இவை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த முருகனுக்கு மிகுந்த அதிச்சியான முகத்துடன் அவைகளை பார்த்தான் ஏனென்றால்...........(இன்னும்)

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 12
« Reply #11 on: October 02, 2013, 08:52:28 PM »

   அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இது தான் அங்கு குதிரைகள் தான் வரிசையாக வந்தது ஆனால் அதன் மீது ஒருவரையும் காணவில்லை அதை பார்த்த அவனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்து விட்டு உடனே நினைத்தான் இந்த காட்டில் இவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைத்து பார்த்த போது இதுவும் ஒரு பெரிய விசயமில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டான்


இவன் இருக்கும் பழ தோட்டத்திற்கு எதிரே உள்ள மைதானம் போன்ற ஒரு இடத்தில் அனைத்தும் வந்து அணி வகுத்து நின்றன அந்த வெண்மை நிற குதிரை அனைத்திற்கும் எதிராக வந்து நின்றது

முருகன் என்ன நடக்கிறது என்று ஆவலாக பார்க்க ஆரம்பித்தான்
அங்கு இப்பொழுது பேச்சுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன இவனுக்கு ஒன்றும் புரியவில்லை
யார் பேசுகிறார்கள் யார் கோசம் போடுகிறார்கள் என்று ஒன்றுமே புரியாமல் முழித்தான்

ஆனால் அவனுக்கு ஒரு உண்மை மட்டும் புரிந்தது அந்த குதிரைகள் தனியாக வரவில்லை அதன் மீது யாரோ அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் தன் கண்ணுக்கு தெரியவில்லை என்று மட்டும் நன்றாக புரிந்தது இன்னும் அந்த குரல்கள் ஒலித்தன


சட்டென்று அமைதியானது வெண்மை குதிரை மட்டும் எங்கோ வேகமாக புறப்பட்டு சென்றது மற்றவைகள் அனைத்தும் அப்படியே அணி வகுத்து நின்றன அந்த குதிரை எங்கே செல்கிறது என்பதை ஆவலுடம் எட்டிப் பார்த்தான் முருகன் ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தது

இவர்கள் எப்பொழுது செல்வது நாம் இந்த இடத்தில் இருந்து வெளியேறுவது எப்படியாவது இன்று இங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்தான் முருகன்

அதற்கான சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தான் ஆனால் நேரம் கடந்ததே தவிர அங்கிருந்து யாரும்செல்வதாக தெரியவில்லை இவனுக்கு மிகுந்த கவலை வர ஆரம்பித்தது அப்பொழுது சட்டென்று யாரோ வரும் சத்தம்

யாரென்று ஆவலுடம் எட்டிப் பார்த்தான் அப்பொழுது....................(இன்னும்)

Arul

  • Guest
Re: ஐயோ இது உண்மையா? 13
« Reply #12 on: November 22, 2013, 09:38:17 AM »

   அப்பொழுது அதே வெண்மை குதிரை வந்து கொண்டிருந்தது அதற்கு பின்னால் அந்த பக்கமும் ஆயிரக் கணக்கில் குதிரைகள் வந்து கொண்டிருந்தன முருகனுக்கு இங்கு ஏதோ நடக்க போகிறது என்பது உறுதியாகிவிட்டது.ஆனால் எது நடந்தாலும் வேடிக்கை பார்க்க தயாராக இருந்தான்

வெண்மை குதிரை இரு தரப்புகளுக்கும் மையமாக வந்து நின்றது பின்னர் பேச்சுக்குரல்கள் ஆரம்பித்தன என்ன பேசுகிறார்கள் என்பது இவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை அந்த நேரத்தில் இவனுக்கு பின்னால் எதோ சத்தம் கேட்டது யாரோ வருவதை போன்று சத்தம் முருகன் சுற்றிலும் தேடினான் யாருமே தெரியவில்லை

ஆனால் யாரோ இருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது அப்பொழுது அவன் முன்பு உணர்ந்த சுகந்தமான மணம் இப்பொழுது அவன் அருகில் வீசியது அவன் செவியின் அருகில் அந்த குரல் ஒலித்தது என் பின்னே வா என்று ....

அவன் உடல் சிலிர்த்துவிட்டது அந்த குரல் கேட்டவுடன் ஒரு பெண்ணின் குரல் அப்படி ஒரு மென்மையான் குரலை அவன் இது வரை கேட்டதில்லை அதை கேட்டவுடன் குதிரைகளையெல்லாம் மறந்துவிட்டான் நான் எப்படி உன் பின்னால் வர முடியும் உன் உருவமே எனக்கு தெரியவில்லையே என்று திருப்பிக் கேட்டான் அதற்கு அந்த பெண் குரல் சரி நான் உன் கையை பிடித்துக் கொள்கிறேன்

என்னோடு வா என்று அவன் கையை பிடித்த உணர்வு இவனுக்கு நன்றாக தெரிந்தது கண் மூடி திறப்பதற்குள் வேறொரு இடத்தில் இருந்தான் மிக மிக அழகான இடம் அவன் அப்படி ஒரு இடத்தை இந்த காட்டில் இது வரை கண்டதில்லை அவ்வளவு அழகான பூஞ்சோலை எங்கு திரும்பினாலும் பூக்களாய் பூத்து குலுங்கின அவன் மனதில் எந்த விதமான சோகமும் இல்லாமல் அளவிட முடியாத ஆனந்தத்தில் இருந்தான் அவனுக்கு அதற்கு முன்பு நடந்தவைகளை முற்றிலும் மறந்திருந்தான்

அவனுக்கு அந்த இடத்திற்கு சென்றவுடனே அதற்கு முன்பு நடந்தவைகள் மறக்க ஆரம்பித்து இப்பொழுது அவன் உடன் வந்த அந்த இருவரையும் கூட மறந்திருந்தான் அவர்களை பற்றிய எண்ணம் சிறிது கூட அவன் இடத்தில் இல்லை அவன் தன்னை புதிய உலகை சேர்ந்தவன் போல் மிக உற்சாகமாக இருந்தான்

அங்கு சிறிது தூரம் காலார நடந்தான் ஓர் இடத்தில் அனைத்து வகையான உணவுகளும் ஓர் இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு பசியின் நினைவு வந்தது வேகமாக சென்று எடுத்து உண்பதற்காக அதை எடுக்க போனான்

அப்பொழுது...........