FTC Forum

Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: aasaiajiith on December 22, 2011, 07:24:49 PM

Title: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
Post by: aasaiajiith on December 22, 2011, 07:24:49 PM
பெண்ணின் ஏழு வகை பருவங்கள் என்ன என்ன ?
Title: Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
Post by: RemO on December 22, 2011, 08:20:43 PM
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்
 
 
Title: Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
Post by: aasaiajiith on December 23, 2011, 07:25:21 AM
உரைக்கும் பொழுது உதடுகள் ஒட்டா இரு குரல் என்ன சொல்லுங்கள் திருக்குறளில் .?
Title: Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
Post by: ஸ்ருதி on December 23, 2011, 07:54:32 AM
இரு குரல்.....>குறள்


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -


எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
Title: Re: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்
Post by: aasaiajiith on December 23, 2011, 04:42:51 PM
ஒரு குரலின் கனிவு கலந்த  நினைவிலேயே இருந்ததால்
 குறள், குரல் ஆனதில் கவனம் இல்லை - இருந்தும்
திருக்குறள் எனுமிடத்தில் குறள், குறளாகவே .

வாழ்த்துக்கள் !
அதே வகையில் ,இன்னும் இரண்டு கூடுதலாய் குறள் கூறவும் !