Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 326  (Read 988 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 326

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


வாழ்க்கையில் வலியை அறியாதோறும் இல்லை
ஒரு தருணமேனும் உன்னை உணராதோறும் இல்லை
உனக்காய் நான் இருக்கிறேன்
என்று என்னை அரவணைத்தவனே

தாயின் கருவறையில் உடன் இருந்தாயோ அறியவில்லை
பிறந்த நொடி முதல் என்னை விட்டு நீ விலகவில்லை ...
என்னை தீண்டியதுமில்லை என்றும் விட்டு நீங்கியதுமில்லை
வாடி நின்ற போதெல்லாம் வாரி அணைக்க தவறியதும் இல்லை

அன்பாய் அரவணைத்தோர் பலர்
ஆச்சர்யமாய் கொடுத்த பரிசும் நீ
எதிர் பார்ப்பு இல்லாமல் பழகியோர்
எதிர் பாராமல் கொடுத்த பரிசும் நீ
அழவைப்பவனும் நீ
என்னை அரவணைப்பவனும் நீ ...

சுற்றமும் உற்றமும் என்னை சூழ்கையில்
சற்றே விலகி நின்று என்னை ரசித்தாய்
சொந்தமும் பந்தமும் விலகுகையில் ... அழகாய்
அழையாத விருந்தாளியாய் என்னை ஆட்கொண்டாய் .

கேட்க மறந்த பாடலையும்
கேட்க வைத்தவன் நீ
ரசிக்க மறந்த காட்சிகளையும்
ரசிக்க வைத்தவன் நீ

முடங்கி கிடந்த வாழ்க்கையில்
முடிச்சு அவிழ்ந்த பறவையாய்
வானுயற பறக்கிறேன்
உன் கைகோர்த்த தருணம் முதல்


என் இனிய தனிமையே
என்றும் என் துணை நீயே
...


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..

சிவமே! நீ ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..

சிவமே! நீ அன்பில்லா முரடன் அல்ல.. உன்
பாசத்தை பகிர அறியாதவன் ஆவாய்..

சிவமே! நீயே வானுக்கும் மண்ணுக்கும்..
பொறுப்பான, காவல் காரன் ஆவாய் 

சிவமே! நீ அழ தெரியாதவன் அல்ல, உன்
கண்ணீரை மறைக்க தெரிந்தவன் ஆவாய்..

சிவமே! நீ விரும்பும் உயிர்களுக்கு உனையே, 
முழுதாய், அர்ப்பணிக்கும் கொடையாளி ஆவாய்.     

சிவமே! நீ பொருள் தேடி அலைபவன் அல்ல.. உன்
பந்தங்களை பராமரிக்க உழைப்பவன் ஆவாய்..

சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..

சிவமே! நீ சோம்பேறியானவன் அல்ல.. உன்
அங்கீகாரத்துக்காக காத்திருப்பவன் ஆவாய்..

சிவமே! நீ உணரும் இந்த தவிக்கும் தனிமையும்
உன் சிந்தை சீராகி, உறுதியானவன் ஆவாய்..

சிவமே! நீ உன் வாழ்க்கை பாதையாய்
பிறருக்காகவே, வழிவகுக்கும் மகான் ஆவாய்..

சிவமே! நீ என்று, இவ்வையக அணைத்து
சக்திகளை தாங்கும், சுமைதாங்கி ஆவாய்..
     
சிவமே! நீயே  ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..

நீயே, காத்திடுவாய் இப்பிரபஞ்சத்தையே..
அவளுள்! அவனுள்!!  அடங்கிய சிவமே!!

« Last Edit: October 23, 2023, 08:50:01 PM by TiNu »

Offline Minaaz

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 247
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
இணையில்லை இளைப்பார இடங்கள் அளித்திட்ட இயற்கையின் பரவசத்திற்கு ஈடாய்....

தனிமையே தன்னலம் மறந்து தாலாட்டாய் ஏற்று நிற்கும் இயற்கையதின் கொஞ்சும் மொழிகளை....

மனதோரம் முனு முனுத்திடும் சிணுங்கல்களில் சிற்பமாய் செதுக்கி வடுத்திடும் அதன் அழகுதனை....

இறைவனே வரமாய் வர்ணனையாய் தீட்டிட்ட ஓவியம் அது....


மனிதன் என முத்திரையிடப்பட்டவனே கவிஞன் என  மொழி மாற்றத்தின் மாறுதல் இயற்கை....


படபடப்பாய் ஓடி அலைந்திடும் அலைதனை நோகாமல் தாங்கிப்பிடித்திடும் பாறைதனை ஓவியங்களில் கண்டு கழித்திடும் கண்கள் நிஜமென உணருகையில் திகைத்து நின்றிடும் மேனியின் விசித்திரம்....

பாலாய்ப்போன மனதும் பாதியில் இழந்து தவித்திடும் அதன் தடுமாற்றத்தில்....[

தனிமையில் நான் தவித்திருக்கும் பொழுதெல்லாம் உள்ளம் தேடுவது என்னவோ ,....
தனிமையை  தண்ணில் தவிக்ர்கும்..,
மாயவள் உன்னையே....

இவ்வளவு அழகு பொருந்திய உனது விசித்திர ஜாலத்தில் என் இன்னல்களும் சோர்வுகளும் ....
கணமில்லா பஞ்சென காற்றோடு காற்றாக கரைந்திடும் அதிசய கலை உன்னிடம்....


அதனால் தான் என்னவோ,....
கவலைகள் சூழ்ந்து கொள்ளும் தருணம் தன்னை அறியாமல் தேடுகிறேன் உன்னை ...
என் உதட்டோரம் தவழும்
 ஒரு சிறு புன்னகைக்காக..,♥️/color]
« Last Edit: October 24, 2023, 12:01:43 PM by Minaaz »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 131
  • Total likes: 805
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எவர் வந்து ஆற்றுப்படுத்தினும்
ஆறாது என் காயம்..
எந்த விரல்கள் வந்து துடைத்திடினும் நிற்காது என் கண்ணீர் ..
எந்தக் கரங்கள் வந்து தலை வருடினும் அமைதியாகாது என் ஆன்மா..

சொல்லுக்குள்ளும்
அடங்காதது..
வார்த்தைகளுக்கும் வசப்படாதது..
வேதனையை மட்டுமே வரவாய் கொண்டு,
துன்பங்களை மட்டுமே துணையாய் கொண்டு
வாழ்பவனின் துயரக் கதை இது..

உயிராய்ப் பழகிய உறவுகளைத் தொலைத்து ..
உணர்வாய் வாழ்ந்த நண்பர்களைத் துறந்து..
தாயை மறந்து, தந்தையை இழந்து,
சகோதரனை சாகக் கொடுத்து,
சகோதரியை சாய்த்தொழிய விட்டு விட்டு என்னுயிர் காக்க பிழைப்பு தேடி கடல் தாண்டி, நாடு தாண்டி பயணித்தேன்;
எந்திரம் போல் பொருள் ஈட்டி
 உயிர் இருந்தும் உயிரற்ற பொம்மையாய் வாழ்கின்றேன்..

ஆர்ப்பரிக்கும் அலைகடலே
என் தேசம் கொண்டு சேர்ப்பாயா?
அமைதி காக்கும் பெரும் பாறைகளே என் பூமி கொண்டு சேர்ப்பாயா?
விசும்பில் வீற்றிருக்கும் வெண்ணிலவே என் லோகம் கொண்டு சேர்ப்பாயா?
இறைஞ்சுகின்றேன் இயற்கையே என் வையம் கொண்டு சேர்த்துவிடு..

எல்லாம் இழந்து நின்றாலும் என்றேனும் ஒரு நாள் தாய்மண்ணில் தடம் பதிப்பேன்...
அனைத்தும் கரைந்து போனாலும் என்றேனும் ஒரு நாள் அன்னை மண்ணில் கால் பதிப்பேன் ..

துரத்தியடிக்கப்பட்ட நாட்டிலே என் நாடி அடங்கி போகட்டும் ..
பிறப்பு தந்த பூமியிலே என் இறப்பு வந்து சேரட்டும் ..
ஜனனம் தந்த மண்ணிலே என்
மரணம் வந்து தீண்டட்டும்...
என் மரணம் வந்து தீண்டட்டும் ..

Offline Mani KL

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 182
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
தனிமையில் உன்னை கண்டபோது
நினைவில் ஓடிய சிந்தனை

கடலே
அலை வந்து வந்து போகிறது
அதை கண்டு என் கண்கள் வியந்து போகிறது

வள்ளல்
இரு உள்ளங்கள் இணையும் இருப்பிடம் நீ
கவிஞனுக்கு கவிதை வரிகள் வாரி கொடுக்கும் வள்ளல் நீ

நிறம்
அமைதியாக இருக்கும்போது நீல நிறம்
ஆராவாரமாக ஓடும் போது வெள்ளை நிறம்

அழகு
பார்வைளார்களுக்கு கொள்ளை அழகு
எனக்கு உந்தன் வெண்மையான வெள்ளை அழகு

தனிமை
தனிமையில் உன்னை கண்டு ரசிக்ககிறார்கள்
தனிமையில் என்னை கண்டால் சிரிக்கிறார்கள்

சோர்வு
அலையாக வந்து வந்து போகிறாய் சோர்வதில்லை
சோர்வடையும் போது வந்து வந்து போகிறேன்

சிந்தனை
தத்தலிக்கும் கப்பலை கவிழவிடாமல் தவழவிடுகிறாய்
தத்தலிக்கும் மனதில் சிந்தனைகளை
சிதரவிடமால் நினைவுகளாய் தவழவிடுகிறாய்

நிலவு
தேய்பிறையாக மாய்ந்து போனாலும்
வளர்பிறையாக வந்து சேரும்
உன் அழகுக்கு ஒளிருட்ட
« Last Edit: October 24, 2023, 04:29:32 PM by Mani KL »

Online Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
காதல் இனிது .. கலந்துரையாடல் இனிது என்பர்
தனிமையின் இனிமை அறியாதோர்

தனிமையில் நட்பின் துரோகங்கள் இல்லை
தனிமையில் காதல் தோல்விகள் இல்லை

காத்திருப்புக்கான ரணங்கள் இல்லை
கனவுகளின் தொல்லையும் இல்லை

தன்னிலை தானே அறிய செய்யும் தனிமை 
சுய வளர்ச்சிக்கு வித்திடும் தனிமை

அமைதியின் துணையவன் தனிமை
தன கையே தனக்கு சகாயமென உணர்த்தும் தனிமை

பிடித்த பாடல்
பிடித்த உணவு
பிடித்த உடை

பிடித்தங்களை தயக்கமின்றி வாழ
வழி சமைக்கும் தனிமை

தன்னிகரில்லா காதலானவன்
இணையில்லா இணையவன் தனிமை




Offline vaseegaran

தனிமையில் நீ எதை நினைக்கிறாயோ
நீ அதுவாகிறாய் என்பது சான்றோர் வாக்கு ..

தனித்து விடப்படும் போது தான்
நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரியும் ,

யாருமே நம்மை புரிந்துகொள்ளவில்லையே என்று ஏங்குகிறோம்,
உண்மையில் நம்மை நாம் உள்ளார்ந்து புரிந்துகொண்டோமா.
பலநேரங்களில் நமது தனிமை நமக்கு வாழ்வை புரியவைக்கும்.

இங்கு நாம் தனியாக தான் வந்தோம் தனியாகவே போவோம்,
நினைவுகள் மட்டுமே மிச்சம் ஆனால் நம் வாழ்விலோ,
அவர் என நினைப்பாரோ  இவர் என்ன நினைப்பாரோ
அவர்கள் வேண்டும் இவர்கள் வேண்டும்  என்று நினைத்து நினைத்து
நீ தியாகம் செய்தது உன் வாழ்வில் எத்தனை எத்தனை.

இந்த பிரபஞ்ச பெறுவாழ்வில் உனக்காக சிறிதேனும் இடம் கொடு,
தனியாக பயணம் செய். இயற்க்கை சூழலும் உன் மனுமும் ஒத்திசைந்து
பலகதவுகளை உனக்குள்  திறக்கும். உன் மனமும் உன்னிடம்  பேசும்
உனக்கான சிறு சிறு ஆசைகளை யார் தயவின்றியும் செய்து மகிழ்

இப்புவியை விட்டு போவதற்குள்
உனக்கென்று உன்  தனிமை நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்
நீ எப்போது நினைத்து பார்த்தாலும் உன் வாழ்க்கைக்கான  பொக்கிஷங்கள் அதுதான்

தனிமை ஒருபோதும் உனக்கு துரோகம் செய்யாது,
சிரித்து பேசி பின்பு முதுகில் குத்தாது ,
உன்னை அன்பு அடிமையாய் நடத்தாது,
உன்தோள் மேல் கைபோட்டு உன் தோழனாக பேசும்
உன்னை பற்றி உனக்கே சொல்லி உன்னை உயர்த்தும்
ஆதலால் வாழ்வில் தனிமைகொள் இனிமைகொள்
« Last Edit: October 25, 2023, 12:25:03 AM by vaseegaran »

Offline SweeTie


நீலவண்ண  துகில் போர்த்தி   
நித்தமும்  தவம் கிடக்கும்  ஆகாய  கங்கை 
அவள் மேனியில் அங்காங்கே   சில வெண்மலர்கள் 
மங்கிய மாலை நேரம் அவள் அழகில்
மயங்காத   மனங்கள்   உண்டோ
 
அவளுக் கெனவே பிறந்தவன்  போல் 
காட்சி தரும்  கடலரசன் அவன்
வெள்ளி கம்பிகள் போன்ற  அலைவரிசை
ஒட்டி உரசுகிறாள்   ஆகாய கங்கை
அவனோ அணைத்து  ஆனந்த கீதம் பாடுகிறான்

பொறாமையில்    தீய்ந்து போகிறாள்   முழுநிலா
அரை மதியாய்   தேய்ந்து   கிடக்கிறாள்   
வாழ்க்கையில்  வழுக்கி விழுந்தவன்போல் 
இருள்  கொண்ட அமாவாசை   சீக்கிரமே
வந்துவிடும் என்ற பயம்  அவளுக்கு

இயற்கையை ரசிக்கும்  இவன் யாரோ
கவிஞனாக  இருப்பானோ ?   இல்லை 
ஓவியனாக  இருப்பானோ ?  இல்லை
எழுத்தாளனாய்   இருப்பானோ ?
யாராயினும்  அவன்  ரசிகன்

வெளியில் சொல்ல முடியாத சோகங்கள்
சொல்ல  எத்தனிக்கும்    விஷயங்கள்   
தாங்கொணாப்  பிரிவின்  துயரங்கள் 
அனைத்துக்கும்  பதில்  தனிமை 

தனிமையில்  இனிமை காணும்
இவன் தனிமை  எந்த  ரகம் ????   
« Last Edit: October 25, 2023, 07:47:21 AM by SweeTie »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என்றோ
வாசித்த கவிதை ஒன்று
நினைவலைகளில்
சுழன்று கொண்டிருப்பதை போல

என்றோ
கேட்ட பாடல் ஒன்று
உதடுகள் முணுமுனுத்து
கொண்டிருப்பதை போல

என்றோ வாசித்த
ஒரு நெடு நாவலில்
வியாபித்திருக்கும்
பல நூறு  புள்ளிகள் போல

என் நீள வாழ்வில்
வியாபித்திருக்கும்
உன் நினைவுகள்

இனி
சற்று அந்நியமாய்
எட்டி நின்று ரசித்து கொள்கிறேன்
இனி
மௌனங்களோடு பேச
பழகிக்கொள்கிறேன்

இனி
நேசத்தின் மிச்சம் வைத்து
அமிலத்தின்  ருசியோடு
வாழ பழகிக்கொள்கிறேன்

இனி
துக்கு நூறாய்
என் மனம்
உன் பிரிவால்
உடைந்திடும் முன்
நிழல்படமாய்
பத்திரப்படுத்தி
வைத்துகொள்கிறேன்

மீண்டும்
தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகி கொள்கிறேன்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline PSK

  • Newbie
  • *
  • Posts: 18
  • Total likes: 44
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தனிமை ஏன் நண்பன்
இவனோடு இருக்கும் போது
 நான் இன்பத்தை
உணர்ந்து இருக்கிறேன்
துன்பதையும் உணர்ந்து இருக்கிறேன்

இயற்கையை சுவாசித்து
சின்ன சிறு செடிகள் நட்டி
பூக்களின் அழகை ரசித்து
சில் வண்டுகள் ரிங்காரம் கேட்டு
 வண்ண மீன்களை வளர்த்து
குட்டி குருவிகளின் முட்டைகளை பார்த்து
முயல்களேடு விளையாடி
தூரத்தில் செல்லும் போது
இயற்கை மழை அன்னையைத்தழுவி
விளையாடி இசை பாடல்களோடு
சந்தோசத்தை உணர்ந்து இருக்கிறேன்

சில நேரங்களில் யாரும் இல்லை
என்று தோன்றும் பொழுது
வெறுப்பையும் கசபையையும்
உணர்ந்து இருக்கிறேன்

இப்பொழுது கடல் அழகை ரசித்து
அமைதியாய் உன்னோடு என் தனிமை