தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 25, 2017, 11:03:01 PM
Title: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~
Post by: MysteRy on July 25, 2017, 11:03:01 PM
முட்டை...முட்டை...முட்டை...!
முட்டையின் ஆதியைத் தேடிச் செல்ல வேண்டுமென்றால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகச் செல்ல வேண்டும். கிமு 3200-லேயே எகிப்தியர் முட்டையை உணவாக உட்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர் கிமு 600-ல் இருந்து முட்டையை ‘டேஸ்ட்’ செய்கிறார்கள். முட்டைகள் பெரும்பாலும் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் உடைந்துவிடும். இதைச் சமாளிக்க 1911-ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவர் அட்டையால் ஒரு பெட்டி செய்தார். அந்த டெக்னிக்தான் இன்றுவரை தொடர்கிறது.
அமெரிக்கத் தர அளவுகோல்படி முட்டையின் அளவை வைத்து அது பிரிக்கப்படுவதில்லை. எடையை வைத்தே பிரிக்கப்படுகிறது. 12 முட்டைகளின் எடை 850 கிராம் (30 அவுன்ஸ்) இருந்தால், அது ஜம்போ வகை. இதுதான் பெரியது.
முட்டையை எப்படி சாப்பிடலாம்?
முடிந்தவரை பச்சை முட்டையைச் சாப்பிடுவதைத்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அல்லது ஹாஃபாயிலாகச் சாப்பிடலாம். முட்டையை வறுத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும் புரதச்சத்து முழுமையாக நீக்கப்படுகிறது.
வேகவைத்த முட்டையையும் பச்சை முட்டையையும் எப்படி உடைக்காமல் கண்டுபிடிப்பது?
வேகவைத்த முட்டையைச் சுற்றிவிட்டால் வேகமாகச் சுழலும். பச்சை முட்டை கொஞ்சம் தள்ளாடி ஆடும்.
முட்டையை எப்படி கிரேடு செய்கிறார்கள்?
முட்டை ஓட்டின் நிலை மற்றும் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே முட்டைகள் கிரேடு செய்யப்படுகின்றன. எடையை வைத்துப் பிரிக்கப்படுகிறது என்ற பொதுவான எண்ணம் தவறு.
பி12 வைட்டமின், ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் குணங்கள்கொண்ட அமினோ ஆசிட் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இவை புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. கண்களுக்கு நல்லது செய்யும் லூட்டின் முட்டையில் அதிகம் இருக்கிறது.
உலகில் கலப்படமே செய்ய முடியாத உணவுப்பொருள் முட்டைதான்... இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
வெள்ளைமுட்டைக்கும் பிரவுன் நிற முட்டைக்கும் சத்துகள் அளவில் எந்த மாற்றமும் இல்லை. முட்டை பேக் செய்யப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்கும் சாப்பிட வேண்டும். நாள்கள் ஆக ஆகச் சத்துகள் குறைந்துகொண்டே இருக்கும்.
Title: Re: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~
Post by: SweeTie on September 17, 2017, 04:52:59 AM
இந்த முட்டைய பத்தி இம்புட்டு விஷயம் இருக்கா???(http://i1297.photobucket.com/albums/ag21/nilaakmr0/j2_zpsvngxjiii.jpg) (http://s1297.photobucket.com/user/nilaakmr0/media/j2_zpsvngxjiii.jpg.html)
Title: Re: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~
Post by: MysteRy on September 17, 2017, 02:05:44 PM