FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 03, 2018, 11:21:27 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: Forum on June 03, 2018, 11:21:27 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 187
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/187.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: thamilan on June 03, 2018, 03:20:42 PM
என் கண்ணில் விழுந்து
கருவலயத்தினுள் நிறைந்தவளே
வார்த்தைகள் எனும் வர்ணம் கொண்டு
என் மனதினில் ஓவியமாய் பதிந்தவளே
உனக்கானது இந்தக்  கவிதை   

இறைவன் என்றுமே விசித்திர விளையாட்டுக்காரன்
அழகையும் அவலட்சணத்தையும்   ஒன்று சேர்ப்பான்
மென்மையும் வன்மையையும் ஒன்று சேர்ப்பான்
அன்பையும் அகங்காரத்தையும் ஒன்றிணைப்பான்
உலகம் இதனால் சமநிலை அடையும் என்பது
அவன் கணக்கு - ஆனால்

அவன் போட்ட கணக்கால்
உன்னை நானும்
என்னை நீயும் சந்திக்கவே
சந்தர்ப்பம் கிடைக்க வில்லை
உன்னை சந்திக்க ஒருவனையும்
என்னை சந்திக்க ஒருத்தியும்
மாத்தி  எழுதிட்டான் இறைவன்

சந்தித்திருந்தால்
காதல் தோல்வியில் நீயும்
வாழ்க்கை தோல்வியில் நானும்
சீரழிந்திருக்க மாட்டோம்

ஒரு நாளேனும் நம்மை சந்திக்க வைத்திருந்தால்
நம்  வாழ்க்கை திசைமாறிப் போயிருக்கும்
வசந்தம் நம்மோடு கை கோத்திருக்கும்
என்றாலும் நண்பர்களாக நம்மை சந்திக்க வைத்த
இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்

மனம்  ஒத்ததே காதல்
என் மனதில் என்றும் நீ இருக்கிறாய்
உன் மனதில் நானிருப்பேன் என்று எனக்குத்  தெரியும்
உன்னை என்னால்  சகோதரியாக  நினைக்க முடியவில்லை
நண்பியாகவும் நினைக்க  முடியவில்லை
அதையும் தாண்டியது எனது அன்பு 

அன்பின் வெளிப்பாடே காதல்
காதலர்களாக, கணவன் மனைவியாக இருக்க வேண்டுமா என்ன
அன்பை செலுத்த
என்றும் உன்மேல் அன்பு என்னுள் நிறைந்திருக்கும்
 
நீயா ஆமாம் நீயே தான்
என் அன்புக்கு பாத்திரமானவள் நீயே தான்
நீ என்னவள் இல்லை தான் என்றாலும்
என் அன்புக்கு பாத்திரமானவள்
உன் வேதனைகளை சுமக்க  முடியாவிட்டாலும்
உன் விழிநீரை துடைக்க என்  கைகள் நீளும்
உன்  விழி நீர் மண்ணில் விழு முன்னே
என் கைகள் தாங்கிப் பிடிக்கும் 
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: JeGaTisH on June 03, 2018, 03:34:09 PM
உன் கண்ணீர் துடைக்கும்
கையணியாக கையோரமாய்!

காலமெலாம் காத்திருந்தேன்
உன் காதலனாக வேண்டுமென!

இறுதியில் உன் கண்ணீரை
தாங்கிப்பிடிக்கும் பாத்திரமானதேனோ!

உன் சிரிப்பில் என்னை பறக்க செய்தாய்
உன் கண்ணீரால் என்னை மூழ்கடித்துவிடாதே!

உன் மனக் கவலைகள் கண்ணீராய் கசிய
என் தோள் கொண்டு உன்னை ஏந்திட ஆசை!

என்னை நீ நேசித்ததால் மழைத்துளி பிடித்தது உனக்கு
உன்னை நான் நேசித்ததால் கண்ணீர்த்துளியும் பிடிக்கிறது எனக்கு!

மனதின் வலிகளை சொல்லமுடியாது
வெளிப்படுத்துவது கண்ணீர்
கண்ணீரை கூட கையில் ஏந்தி
கவலைக்கு மருந்திடும் நான் உன் கணவனாகவேண்டும்!

கண்ணீர் துடைப்பவனை கணவனாக அடைந்தால்
உன் வாழ்கையில் கண்ணீர் என்ற சொல்லுக்கே இடமில்லை!


அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: AshiNi on June 03, 2018, 08:24:09 PM
என் இளையக்கொடியே !
  ஏனடி இந்த சோகம் உனக்கு?
கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாய்
  கண்ணீருக்குள் அடைப்பட்டாயே...
தூண்டிலில் சிக்கிய மீனாய்
  கண்ணீர்த்துளிகளுக்குள் சிக்கினாயே...

ரோஜா மலரை ஏந்தி
  உண்மைக் காதலை தாங்கி
பலமுறை வந்தேனடி
  உன் முன்னே நானும்...
உன் மீன் விழிகள் என்னை
  சுட்டெரித்து உதறி தள்ளின...
எங்கிருந்தோ வந்த வஞ்சகனை
  உன் கரங்கள் ஏந்தி அள்ளின...

பொய்யான காதலை நம்பாதே
  என நான் உரைக்க,
என் மீது ஆத்திரம் கொண்டு
  நீ முறைக்க,
நமக்குள் முரண்பாடுகள்
  பயிராக வளர்ந்தன...

ஆனால் இன்று..........
  நிஜமற்ற காதலின்
முகத்திரை களைந்தது!
  அவன் கொண்ட காதல்
மாயவிம்பம் என
  உனக்கும் புரிந்தது!

ஆயினும் கலங்காதே செல்லமே...!
  உன் மீது நான் கொண்ட
உண்மை காதலில் துளியும்
  மாற்றமில்லை...
என் ஜீவன் உள்ள வரை
  உன் வாழ்வில் என்றும்
வாட்டமில்லை...

ஊற்றாய் பெருகும் உன் கண்ணீரை
  எப்பாடுபட்டும் அணையாய் மாறி
நான் நிச்சயம் தடுப்பேன்...
  உடைந்த உன் இதயத்திற்கு
எத்துன்பம் தாண்டியும் வந்து
  இன்ப உலகை காட்டிடுவேன்...

வேதனையில் உலையென கொதிக்கும்
  உன் மனதிடம் கூறு கண்ணே...
பொய்மைக்காதல் ஒருபோதும் சிறக்காது
 உண்மைக்காதல்உன்னைஎன்றும்மறக்காது!

தந்தையாய் உன் தலை தாங்க
  என் மடியுண்டு
தோழனாய் உன் வசந்தம் காண
  என் விழிகளுண்டு
காதலனாய் உனைக் காத்திட
  என் காதல் மனமுண்டு
அன்பு  கணவனாய் உன் கண்களில் 
  ஆனந்த கண்ணீர் கொடுத்திட
என் வாழ்நாளுண்டு...

இன்று தான் உன் கருவிழிகள்
  சோக நீர் வடிக்கும் இறுதி நாள்...

இறைவன் துணையால்
  உன் கரம் பற்றுவேன்!
நான் நீயாக மாறி
  காலம்தோறும் உன்னை
என் மூச்சாக சுவாசிப்பேன்...

உன்னுடன் நான் வாழும் வாழ்க்கை
  அனைத்து  கன்னிகளுக்கும் உணர்த்தும்!
உண்மையாய் நேசித்து
  காதல் சொல்ல வரும் ஆடவனின்
காதலை ஏற்றால்,
அவன் காட்டும் எழில் உலகில்
   நானும் ஓர் மகாராணியே என்று....!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: PowerStaR on June 04, 2018, 12:07:01 PM
இதழ்கள் கூறாததை
விழிகள் பேசுமாம்
ஏனோ உணர முடியவில்லை
அர்த்தங்கள் !!
அவளின் நாணமா??
என் மடமையா ?

அவளின் விழி மலர் இதழ்களை
 உதிர்கிறது கண்ணீராக !!
ரசிப்பதற்க்கு அவை பூவிதழ் நீ்ர் அல்ல!!
விடைகொடு விழிநீராக
துக்கம் தொலைந்து !!
துயில் கொள்வாய்
உயிராய் சுமக்கும் மார்பில் உடலாய்
சாய்ந்துக்கொள்  கண்மணியே  !!!
உணர்வாயா உடையவன் என்று!!
உணர்த்துவாயா
உடையவள் என்று!!
இதழ் திறக்க வேண்டாம்
இமை திறந்தால் போதும் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: சாக்ரடீஸ் on June 05, 2018, 12:43:44 AM

 
எனக்கு
கரங்கள் இருந்தும்
அவள் கண்ணீரை
துடைக்க வழி தெரியாமல்
என் மனதிற்குள்ளே
நான் கதறும் கதறல்களின்
மௌனராகமே
இந்த கிறுக்கல் ....

அவள்  ஒரு தேவதை  !!!
ஒரே நேரத்தில்
உதட்டில் சிரிப்பையும்
கண்களில் கோபத்தையும்
காட்டும் பாசக்காரி .....

அவள்  ஒரு  தேவதை  !!!
கவலைகளை கண்ணுள்
மறைத்து
மழலை போல்
இங்கும் அங்கும்
குதித்து ஆடுவதில்
குறும்புக்காரி ....

அவள் ஒரு  தேவதை  !!!
கள்ளமில்லா அன்பை
கொண்டவள்
பத்து நொடி மட்டும்
கோவம் கொள்ளும்
ரோஷக்காரி....

தேவதையே
உன்னை பார்த்தது இல்லை
உன் தோள் சாய்ந்தது இல்லை
உன்னோடு கைகோர்த்து நடந்தது இல்லை
உன்னோடு விளையாடியது இல்லை
உன்னோடு சண்டை போட்டதும் இல்லை
இருந்தும் எனக்குள் ஒரு உயிராய் இருக்கிறாய்

தேவதையே
உன் ரணங்களை
என்னிடம் பகிர்ந்தது இல்லை ...
தந்தை தாய் பாசத்துக்கு 
ஏங்கும்  உன்  நெஞ்சத்தை  நான் அறிவேன்
நீ   இழந்த உன் வசந்தகால நாட்களை
தேடி அலையும்  உன்னை
நான் அறிவேன்
உன் மனதை  கூறுபோடும்
உன் வலிகளை
நான் அறிவேன்
உன் ஏக்கங்களை
நான் அறிவேன் .....
என்ன செய்வது என்று தெரியாமல்
திருவிழாவில் துளைந்த  குழந்தையாய் நான்
என் கரங்கள்
உன் ரணங்களை  சுக்குநூறாக உடைக்கவும்
உன் கண்ணீரை துடைக்கவும்
தவமாய் தவம் இருக்கின்றன

ஏனோ
இந்த ஜென்மத்தில்
நான் உன் தாயின் கருவறையில்
இல்லாமல் போனேன்
மறுஜென்மத்தில்
உன் உடன்பிறப்பாய் இருக்க
ஒரு வரம் வேண்டும்

உன் ரணங்கள்
உன் வலிகள்
எல்லாம் மறைந்து ....
நலம் பெற்று
உன் குரல் கேட்க என் செவிகளும்
உன் சிரிப்பை பார்க்க என் கண்களும்
உன் கண்ணீரை துடைக்க என் கரங்களும்
உனக்காக காத்திருக்கின்றன
மிஸ்  யு

குட்டி தேவதையே ....
என் ஆயுளில் பாதியை
உனக்கு தந்திட
என் முழு மனதோடு
வேண்டிக்கொள்கிறேன் ...

என் உடன் பிறவா தங்கைக்கு
இந்த கிறுக்கல் சமர்ப்பணம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: SweeTie on June 05, 2018, 12:52:11 AM
காதலாகி காதலாகி காத்திருந்தேன் ஆவலோடு
காத்திருந்த காலமெல்லாம் கானல் நீராய்   ஆகிடுமோ
சிறுக சிறுக சேர்த்துவைத்த  தீராத ஆசையெல்லாம்
ஊமை கண்ட கனாப் போல் சேராமல் போய்விடுமோ   

ஊருக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல்
உன்னோடு வாழ்வதற்கு  உறவெல்லாம் மறந்தேனே
பாருக்குள் நல்லவர்கள்  பார்க்காமல் போனாலும்
கண்கொத்திப் பாம்பாக என் மாமன்  பார்த்தானே

மது உண்ட வண்டாக நீ சுற்றும் வேளைகளில்
மகரந்த துகளாக நானிருந்தேன் உன் மடியில்
கண் இமையும்  மூடாமல் கார்குழலும் முடியாமல்
காதலித்த  நாட்கள் எல்லாம் கனவாகி போய்விடுமா?   

நெற்  பயிராய்  நீ இருக்க நெல்மணியாய் நான் இருந்தேன்
காதலுடன்  இருந்த நம்மை காலனுக்கு பிடிக்கலையோ
சேற்றில் புதைந்து   செத்து மடியுங்களென்று
வீச்சு அரிவாளால்  வெட்டியே  வீழ்த்தினனே

முகில் என்னும் துகிலுக்குள் முகம் புதைத்து நானிருக்க
கரு நிழலாய் பின் தொடர்ந்து கண்களை நீ பொத்திடுவாய்
பித்தன் அவன் சடை முடியில்  இருந்தது போதும் என்றேன்
என் அத்தானின் சட்டையில் பொத்தானாய் நானிருப்பேன்

கண்ணுக்குள் மணியாக காலமெல்லாம் நீ வேண்டும் 
காதலி நான் காதோரம் கொஞ்சல் மொழி பேசவேண்டும்
தோழோடு  தோழ்  சேர்த்து நெடுநடை நாம் போகவேண்டும்
 அடிக்கடி  மறக்காமல் நாம் I ilove  you  சொல்லவேண்டும்.


என் அலைபாயும் நெஞ்சத்தில்  அணையாத விளக்கானாய்
நிலை கொண்டு வாழ்வேன் உன் நினைவுகள் புரையோட
கலையாத  நினைவுகளை  மூச்சோடு பிணைத்திருப்பேன்
தொலைதூரம்  சென்றாலும் துளிகூட உனை மறவேன்

குற்றால அருவியிலே குளித்தது போல்
வற்றாத  ஆனந்த  கண்ணீரில் குளித்திடுவோம்   
கண்  விழியாய்  என்றும்  உனக்காக  காத்திருப்பேன் 
கண்மடலாய் எனைக்காக்க  விரைந்தே வந்துவிடு





 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: DoRa on June 05, 2018, 02:34:38 AM
கனவு கலையும் போதும்
விழிகள் விழித்திடும் போதும்
விடியல்   பிறக்கும்   என்ற  நம்பிக்கையில்
உனக்காக
என் விழிகளை மூடாமல்
காத்துக்கொண்டிருக்கிறேன் ....
உன்னிடம் வரம்  வாங்கவல்ல
உன்னையே வரமாக பெற ....

என் விழிக்குள் உன் விழியை
வைத்திட வருவாயா
என் அன்பே ....
எனக்குள் புத்தம்புதியதாய்  ஒரு உணர்வு
உன் விழிகளை பார்க்கும் போது ...
என் அன்பே ....
நேற்று நீ எங்கே இருந்தாய்
இன்று எப்படி என்னுள் வந்தாய்
என் அன்பே ....

நீ பேச மொழிகள் தேவையில்லை
உன் ஒற்றை பார்வை போதும்
என்னுள் பலகோடி பூக்கள் பூக்கும்
புரியாத புதிர்களுக்கு விடை புரியும்
என் அன்பே ....

என் அன்பை உடையவனே
உன் இருகண்கள் என்றும்
என் உயிரின் கரு மச்சங்கள் ...
உன் கண்கள் கலங்கினால்
என்  இதயத்தில் ரத்தம் கசிந்திடும்
என் அன்பே .....

உன் விழிகளில் சிக்கி கொண்டேன் ..
மீள விரும்பாமல் மீண்டும் மீண்டும்
உன் விழிகளிலே தொலைந்து போகிறேன்
உன் விழிகள் போதும் அன்பே
நான் உயிர் வாழ ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 187
Post by: KaBaLi on June 06, 2018, 03:03:32 PM
வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு,
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...
 
காதல்  பேசிய கண்கள்
இப்போது -
கண்ணீர்  குளத்தில்  கவலைகிடமாய்  !!

தண்ணீர் சிந்தும் மேகமே என் கண்களை பாருங்கள்
உன்னை போலவே என் கண்களும் இன்று மாறிவிட்டன..!!
நீ நினைக்கும் வேலை   தண்ணீர் சிந்துவாய்
ஆனால்
தினமும் என் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன
அவள் நினைவுகள் என் இதய துடிப்பில் நினைவானதால்..!!

கண்ணோரம் நதியானது கண்ணீர்
கண்ணீரோடு விளையாடுது என் காதல்..
காதலோடு கலந்தது அவள் நினைவு
அவள் நினைவுகள் உறைந்தது என் இதயம்
இதயம் வாழ்வது என் உடலில்
உடலினில் வாழ்வது என் உயிர்
என் உயிரினில் வாழ்வது அவள்
இறுதி கண்ணீர் துளியை
உனக்காகவே சிந்தும் என் விழிகள்..!!!

இறுதி துடிப்பை துடித்து தன் துடிப்பை
நிறுதிகொள்ளும் வேளையில்
இந்த இறுதி துடிப்பில் கூட
உன் பேயரை உச்சரித்திடும் என் இதயம்...

பார்வை இழக்கும் நேரத்தில் கூட
உன் முகத்தை தேடிடும் என் விழிகள்
பார்வையின்றி தோன்றியது என் காதல்
உன்னை பார்க்கும் வரை அழுகிறது விழிகள்
காதலோடு கரைகிறது என் இதயம்
உன்னை காலந்தோரும் நினைத்திடும் என் உயிர்

தினம் தினம் அழுது கண்களில் உப்பு உறைந்து
ரத்தமாய் வெளிவருகின்றது!

கடவுளின் மறுபெயர் தான்  நண்பன் என்னவோ
முகம் தெரியாது முகவரியும் தெரியாது
ஆனால் உன் கைகொடுத்து  என்னை தாங்கினாய்
 இதுக்கு தான் நான் கண்ணீர்  சிந்த வேணும் !!
 
ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்
ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு

காதலை விட நட்பு சிறந்தது , காதல் சில காலம் தான் இனிக்கும்
ஆனால் நட்பு உயிர் உள்ள வரை இனிக்கும்..!!

காதல் என்பது காற்றாடி போல பறந்து விடும்
ஆனால் நட்பு என்பது நடைபாதை போல தொடர்ந்து வரும் ...!!!!

என்றும் என்னை  தங்கி புடிக்கும்
என் நண்பனின் நட்பே  உலகத்தில்  சிறந்தது
 
கடவுள் கூட சில நேரம் நம்மை சோதித்து பார்ப்பார்
ஆனால் நட்பு ஒன்றும் மட்டுமே யாருனு கூட தெரியாமல் வாழ்நாள் முழுவதும்
நட்புக்காக கைகள்  ஓங்கும் ..!!

"உலகத்தில் சிறந்தது  நட்பு ஒன்றே"