Author Topic: ~ முடி பராமரிப்பு ~  (Read 352 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முடி பராமரிப்பு ~
« on: May 18, 2013, 07:33:18 PM »
முடி பராமரிப்பு




* தினமும் காலையும், மாலையும் குறைந்தது 25 தடவையாவது கூந்தலை வாரி விடுங்கள்.

* டென்ஷன் கூந்தல் வளர்ச்சியின் முதல் எதிரி. எனவே அனாவசிய விஷயங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆவதை தவிர்த்துவிடுங்கள்.

* தினசரி பத்து நிமிடங்களாவது ஏதேனும் உடற்பயிற்சி செய்யப் பழகுங்கள். அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

* முடிந்தவரை கூந்தலை இயற்கையான முறையில் உலர்த்தப் பாருங்கள். ஹேர் டிரையர் வேண்டாம்.

* உணவில் அன்றாடம் ஏதேனும் பச்சைக்காய்கறிகள் அல்லது பழ சாலட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* வாரம் ஒரு முறையாவது தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

* ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே கூடியவரை கெமிக்கல் டையைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கும் மருதாணிக் கலவையால் டை போடவும். பக்கவிளைவுகள் இல்லாதது.

* கூந்தலை அழகுப்படுத்துவதற்காக ஹேர் ஜெல், ஸ்பிரே போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

* கரிசலாங்கண்ணிக் கீரையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருகருவெனவும் வளரும்.

* கூடியவரைக்கும் தலைக்கு ஷாம்பூ போடுவதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான சீயக்காயுடன் காய்ந்த எலுமிச்சை தோல், வெந்தயம், பூந்திக்கொட்டை போன்றவற்றைச் சேர்த்துக் காய வைத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கூந்தலுக்கும், உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.