Author Topic: துவக்கமும் முடிவும்  (Read 816 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
துவக்கமும் முடிவும்
« on: December 02, 2011, 10:04:48 PM »
துவக்கமும் முடிவும்


வருடமோ மாதமோ வாரமோ நேரமோ மற்ற எதுவாக இருந்தாலும் முடிவும் துவக்கமும் ஒன்றாகத்தான் உள்ளது. முடிவிற்கும் துவக்கத்திற்கும் இடைவெளி இருந்தாலும் ஒன்றின் முடிவில் இன்னொன்றின் துவக்கம் என்பது தான் இதன் தாத்பரியம். எத்தனை முயன்றும் ஒன்றை சாதிக்க இயலவில்லை என்பது முடிவற்றது, முயன்றேன் சாதித்துவிட்டேன் என்பது அம்முயற்ச்சியின் முடிவு.

நினைப்பதும் முயல்வதும் நமது செயல், முடிவென்பது தன்னாலே நடந்து விடுகின்ற ஒன்று. காலப்போக்கில் சில மாற்றங்கள் தானாக உருவாகின்றது இயற்க்கை, மாற்றங்களை உருவாக்கிகொள்வது செயற்கை. வீண் என்பது ஏதுமில்லை, எல்லாவற்றிக்கும் காரணங்களும் காரியங்களும் உண்டு. அவற்றை நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை என்பதால் அவற்றை வீண் என்று கருதக்கூடாது.

சுயநலம் பச்சாதாபமெல்லாம் மனித இயல்பு, கொடூரம் கொலைவெறி என்பதெல்லாம் தர்ச்செயலான அதர்மம். தர்மம் எது அதர்மம் எது என்று அறியாதவனை கொடூரனாக வர்ணிக்க முடியாது. உண்மை என்பதும் பொய்மை என்பதும் மனிதனின் ஆறாம் அறிவின் கண்டுபிடிப்பு.

பொய் சொல்வதென்பது உண்மையை மறைப்பது உண்மை சொல்லுவது பொய்யை நிராகரித்தல். பொய் சொல்லுதல் அதர்ம சிந்தை மெய் சொல்லுதல் தர்ம சிந்தை என்பதுவும் ஆறாம் அறிவின் கண்டுபிடிப்பு.

உண்மை பேசி வாழ்ந்தவனை விட பொய் பேசி நன்கு வாழ்வதே யதார்த்தம். யதார்த்தம் எங்கும் எதிலும் நிறைந்து காணபட்டாலும் நாம் உண்மை பொய் இரண்டில் எதை பேசுவது தகுந்தது என்று ஆராய்ந்து செயல்பட உதவுவது கல்வி. அவரவர்க்கு அவரவர் செய்வது சிறந்தது. ஆனால் எது சரியானது என்பதே கேள்வி. போற்றுதலும் தூற்றுதலும் ஒரே மனிதனின் எண்ணத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவருகிறது.

தாவரங்கள் மற்றும் மிருகங்களைப் போல மனிதன் வாழ்வதில்லை, இயற்க்கைக்கு தானாகவே வாழும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது, மனிதனோ ஒவ்வொன்றையும் தேடி அடைய வேண்டியதுள்ளது. தேடி அடையும் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க போட்டி அதிகரிக்கிறது, போட்டியில் தான் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்கிற சுயநலம் புகுந்து தன்னுடன் போட்டிபோடுபவரை அழிக்க சதி திட்டம் தீட்டி கொடூரமாக அழித்து வெற்றியடைய மனித மனம் வெறிக் கொள்கிறது.

இந்தப் போராட்டத்திற்கு துணையாக பொய், கொடூரம், கொலை என்கிற சுயநலம் உருவாகிறது. முடிவில் எது வெற்றிப் பெற்றது, எது வெற்றிப் பெற்றாலும் வெற்றி என்பதில் ஒரு மனிதனால் பலஆயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவிட முடிவதில்லை