Author Topic: ~ நிஜமாக நீ இருந்தால் நிழலாக நான் இருப்பேன் ~  (Read 2868 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 16



எப்பொழுது தூங்கினோம் என புரியாமலே அவள் தூங்கிவிட இரவு ஒன்பது மணி அளவில் மதி வந்து எழுப்பியதும் தான் எழுந்தாள். ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என குழம்பியவள் பின் நடந்ததெல்லாம் நினைவு வர முகத்தை சுருக்கி அவன் கண்களின் கண்ணீரை நினைத்து பார்த்தாள்.

மதி “என்னச்சு மீரா? ஏன் இப்படி குழப்பமா பாக்குற வா வெளில போலாம்”
மீரா “ம்ம்...இரு கொஞ்சம் முகம் கழுவினு வரேன்”
மதி “ம்ம். சரி சரி நீ வா நான் டினர் எடுத்து வைக்குறேன்...இனிக்கி நமக்கு எல்லாம் இங்க தான் ஸ்ட்டே”
மீரா “ஓ”

ஒற்றை சொல்லோடு அவள் நகர்ந்துவிட வினோதமாக அவளை பார்த்துவிட்டு வெளியே வந்தாள் மதி...மதியின் வினோத பார்வையில் அனைவரும் குழம்பினாலும் மீரா எவ்வாறு ரியாக்ட் பண்ணிருப்பாள் என்ற யுகம் கொண்ட ரிஷியோ என்ன வர போகிறதோ என பயந்தான்.

உள்ளே மீராவின் மனமோ வேறு வகையாக குழம்பி கொண்டு இருந்தது

மீரா ‘இந்த யாதவ் இருக்கனா போய்ட்டனா?”
“நாம பண்ணதுலாம் சொல்லி இருப்பனோ’
‘ஆனா மதி எதும் சொல்லலையே’
‘இவ்வளவு நேரமாகியும் இங்கயே இருப்பானா என்ன?’

இவ்வாறாக யோசித்துகொண்டே வெளியே வந்தவள் அந்த அறையின் பால்கனியில் ரிஷி நின்றுகொண்டு இருந்ததை கண்டு திகைத்தால். என்னடா இது என திருதிருவென முழித்தவள் திரும்பி வெளியே செல்ல போக

ரிஷ “கொஞ்சம் நில்லு மீரா”
மீரா 'ஐயயோ பாத்துட்டானே இவன் இன்னும் போகாம என்ன பண்ணுறான்”
ரிஷ “இன்னும் என்ன பண்ணுறானு தான யோசிக்கிற?”

சிரித்துகொண்டே அவன் கேட்க பேய் முழி முழித்து உண்மையை சொல்லாமல் சொல்லி பின் இல்லை என கூறி அதற்கும் முழித்து வைத்தாள்.

ரிஷ “போதும் முழிச்சது மீரா அப்புறம் உன்னோட முட்ட கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது”
மீரா “நான் போறேன்”
ரிஷ “கொஞ்சம் இரு மீரா...”
மீரா “என்ன”
ரிஷ “ஐம் சாரி....நான் உங்கிட்ட அப்படி சொல்ல சொல்லி சொல்லிருக்க கூடாது தான்...என்ன மனிச்சிரு”
மீரா “ம்ம்...”
ரிஷ “ நீ என்ன நினைக்கிறனு என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனாலும் எனக்கு அப்ப என்ன பண்ணுறது தெரில...”
மீரா “பரவால”
ரிஷ “ஆனா....”
மீரா “புரிது நீங்க வேனும்னு சொல்லலனு...நீ...நீ உன்னோட கண்ணுல இருக்க கண்ணீர பாக்கும்போதே புரிஞ்சிது”
ரிஷ “ஓ”
மீரா “ம்ம்...வெளில எல்லாரும் வைட் பண்ணுறதா மதி சொன்னா போலாமா?”
ரிஷ “ம்ம்....போலாம் வா”

அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே வர அங்கே அனைவரும் குசுகுசு என எதுவோ பேசிகொண்டு இருந்தனர். என்னவென்று ரிஷியின் முகம் பார்க்க அவன் முகமோ எதையும் வெளிகாட்டமாட்டேன் என அடம் பிடித்தது.

மீரா “என்னாச்சு?”
சித்து“அது...ஒன்னுமில்லை மீரா வா வந்து சாப்பிடு செம பசி ல இருக்கோம் எல்லாரும்”
மீரா “ம்ம்....சரி”

பாவம் பசியோடு இருப்பவர்களை காய போட வேண்டாமென அவள் ஓப்புகொண்டு உட்கார்ந்தாள். பின் பார்வையை சுழற்றியவள் அப்பொழுது தான் கவனித்தால் அந்த பெண் அங்கு இல்லாததை...!!!

மீரா “அந்த பொண்ணு எதோ மதி?”

அவள் கேட்டதும் அங்கே ஒரு பலத்த அமைதி நிலவியது. அனைவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க மீரா’விற்க்கு தான் நெஞ்சம் தடதடத்துகொண்டு ஓடியது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 17



அவள் அந்த பெண்ணை பற்றி கேட்டதும் பலத்த அமைதி அங்கே நிலவியது.

மீரா “எ...என்னச்சு?”
“எதாச்சு சொல்லுங்க”

அவள் பதட்டத்துடன் கேட்கவே ஆதி சித்துவின் முகம் பார்க்க அவன் அமைதியாக இருக்க சொன்னான் கண்களால்...!!!

சித்து “மீரா......அவளுக்கு ஒன்னுமில்லை மா”
மீரா “தாங்க் காட் சித்து...அப்போ அவ எங்க? போலிஸ் அவங்களே அவளோட ஸ்டேக்கு அரைன்ச் பண்ணிட்டாங்களா?”
சித்து“இல்ல நான் சொல்லுறேன் ஆனா நீ அமைதியா இருக்கனும்?”
மீரா “ம்ம்....சரி சிக்கிரம் சொல்லு”
சித்து “அந்த பொண்ணு பேரு ரம்யா”
மீரா “ம்ம்....”
“சித்துஅவள கூட்டிட்டு போனது ஃப்ஸ்ட் போலிஸ் ஸடேசன்க்கு தான் அங்க எல்லாத்தையும் சொல்லி கம்பிளைன்ட் பண்ணும்போது தான் அவ..அந்த ரம்யா மயக்கம் போட்டு விழுந்துட்டா”
மீரா “வாட்?”
ஆதி “நீ ஷாக் ஆகாத மீரா”
மீரா “ம்ம்...அவளுக்கு என்னாச்சு?” சித்து“ம்..ஃப்ஸ்ட் எங்களுக்கும் தெரில...அப்புறம் ஆஸ்பெட்டில் கூட்டிட்டு போனதும் தான் தெரிஞ்சிது.......”
மீரா “என்னடா? என்னனு சொல்லு.......”
சித்து“வந்து....எப்படி சொல்லறதுனு தெரில...அது...அந்த அஜய் அந்த பொண்ண...அப்படி...அந்த பொண்ணோட உடலுறுப்புகளையும் விக்கற்த்துக்கு பிளான் போட்டு இருக்கான்”
மீரா “வாட் த ஹெல் என்ன தைரியம் அவனலாம் நடு ரோட் ல விட்டு சாப்பாடே போடாம சாகடிக்கனும்”
ஆதி “மீரா அமைதியா இரு சொல்றேன்’ல ஷ்...”
மீரா “அப்புறம்? அதுக்கு அப்புறம் என்னாச்சு?”
சித்து“ஒன்னும்மில்லை மா அதுக்கான சில பில்ஸ்’லாம் அந்த பொண்ணுக்கு கொடுத்து இருக்கான் அதோட எஃப்க்ட் தான் இது இனி பயபட ஒண்ணும்மில்லைனு சொல்லிட்டாங்க”
மீரா “ஓ...!!!”
ஆதி “ம்ம்...அந்த பொண்ண இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்’ல வெச்சிட்டு டிஸ்சார்ச் பண்ணுறதா சொல்லி இருக்காங்க”

சிறிது அமைதி ஆனவளை சமாளித்து உண்ண வைத்து அவர்களும் உண்டு முடித்ததும் மிதி கதையை கூற ஆரம்பித்தார்கள்...ரம்யா’வை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு வந்தவர்கள் அந்த அஜயை அரஸ்ட் பண்ண உதவி புரிந்து கைதும் பண்ணினர் ரிஷி ஆட்களில் உதவியுடன்...!!!
அவன் வீட்டை முழு சோதனையிடும்பொழுது தான் தெரிந்தது அவன் இதற்க்கு முன்னால் பதின் கணக்கில் பெண்களை இதே மாதிரி செய்ததையும்...கோடிகணக்கான ரூபாய்க்கு போதை பொருள் கடத்தி இருப்பதையும்.
எல்லாவற்றையும் பேசி முடித்தவர்கள் தூங்க அயத்தமாக ரிஷி மட்டும்...!!!

ரிஷி “சரி அப்போ நான் கிளம்புறன்...!!!”
மதி “ஏன்? நீங்களும் இங்கயே இருங்கலாமே?”
ரிஷி “இல்ல மதி...நான் போறன் நீங்க எஞ்சாய் பண்ணுங்க”
ஆதி “கொஞ்சம் இருங்க பாஸ்...ஃபிராங்க்கா சொல்லனும்னா நாங்க எல்லாருமே முதல உங்கள தப்பா தான் நினைச்சோம் ஆனா இப்போ புரிஞ்சிக்கிட்டோம்”
ரிஷி “தாங்க்ஸ் ஆதி”
ஆதி “இனிக்கு நீங்க பண்ணது ரும்ப சரியான விஷயம் தான்...நீங்க இல்லனா இத கண்டுபிடிச்சு இருக்க முடியாது...நிங்க பண்ணுற முறைவெனா தப்பா இருக்கலாம் ஆனா நிங்க பண்ணுறது எல்லாம் ரும்ப நியாயமான விஷயம்”
ரிஷி “ம்ம்...........புரிஞ்சிகிட்டதுக்கு மறுபடியும் தாங்க்ஸ்”
மதி “ம்ம்....இப்படி தாங்க்ஸ் சொல்லியே டைம் வேஸ்ட் பண்றத்துக்கு நீங்க இங்கயே தூங்கலாம் வாங்க வாங்க”
ரிஷி “இல்ல மதி....நான்...சொ”
சித்து“இனிக்குல இருந்து நிங்களும் எங்க காங்’ல ஒருத்துர் சரியா வாங்க...”
ரிஷி “இல்ல சித்து...நான் போகனும் இன்னொரு நாள் பாத்துக்கலாம்”
மதி “அண்ணா.....சொன்னா கேக்க மாட்டிங்களா? இங்கயே இருங்க சொல்லுறோம்’ல?
ரிஷி “என்ன...என்ன சொன்ன? அ..அண்ணா’னா?”
மதி “ஹான் இன்னில இருந்து இந்த அழகான அன்பான மதி என்பவள் ரிஷி யாதவ் என்கின்ற வீரம் மிகுந்த இந்த ஆடவனை அண்ணனாக ஏற்கின்றாள் டொன்டொன்டொய்.........!!!”

இவ்வாறு மதி கூறியதும் அனைவரும் சிரித்துவிட பெண்கள் இருவரும் சேர்ந்து சென்று அந்த பெரிய படுக்கையை எடுத்து வர ஆண்கள் அந்த ஹாலை சுத்தம் செய்து அங்கே அந்த படுக்கையை விரித்து படுத்துகொண்டனர்...!!! மீரா ஒரு ஓரத்திலும் அதற்க்கு அடுத்த ஓரத்தில் ரிஷியும் உறங்கினர்
ரிஷிக்கு இது புதுவிதமான ஒன்று...நண்பர்களுடன் ஒரே அறையில் சாதாரண தரையில் படுத்துகொண்டு அரட்டை அடித்துகொண்டு உறங்குவது இவ்வளவு சந்தோஷத்தை தரும் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கி விட மீராவும் ரிஷியும் நித்திராதேவியின் துணையில்லாமல் தவித்தனர்...!!!

ரிஷி ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு...மீரா என்ன புரிஞ்சிக்கிட்டாளோ இல்லையோ மத்த எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க அது போதும்’
மீரா ‘எப்படி இந்த யாதவ் எல்லாரையும் அவன் பக்கம் இழுத்துக்குட்டான்?’
ரிஷி ‘எப்பா என்ன ஆட்டம் ஆடிட்டா சாமி ஆட்டம்...சரியான ராங்கி’
மீரா ‘பேசி என்னமா அவன் நினைச்சத சாதிச்சிக்கிறான் சரியான சண்டியன்”
ரிஷி ‘இவள சமாளிக்கற்து எவ்வளவு கஷ்ட்டமா இருக்கு...சரியான ராங்கி’
மீரா ‘இவன் பேச்சுல ஏதோ இருக்கு எல்லாரையும் எப்படி சமாளிக்கிறான்’
ரிஷி ‘இவள வச்சிக்கிட்டு...டேய் ரிஷி உன் பாடு திண்டாட்டம் தான்டா’
மீரா ‘இவன் கூட இருக்கவ ரும்ப பாவம்’
ரிஷி ‘சரியான ராங்கி’
மீரா ‘சரியான சண்டியன்’
ரிஷி ‘ராங்கி’
மீரா ‘சண்டியன்’

இவ்வாறாக அந்த ராங்கியும் சண்டியனும் அவர் அவர் மனதுடம் பேசிகொண்டே உறங்கிவிட்டனர். இந்த ராங்கியும் சண்டியனும் இன்னும் என்ன என்ன செய்ய காத்து இருக்கிறார்களோ பார்ப்போம்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 18



மறுநாள் காலையில் அனைவரும் எழுந்துவிட எப்பொழுதும் போல் நம் சித்து மட்டும் நயன்தாரா ஒரு பக்கமும் தமனா வை ஒரு பக்கமும் நிறித்திவைத்து டுயட் பாடி கொண்டு இருந்தான்.

ஆதி “டேய் எழுந்து தொலை டா”
சித்து “ம்ம்...இரு ஆதி கொஞ்ச நேரம்”
வீரா “அவன் எழுந்துக்க மாட்டான் ஆதி...நீ ஏன் கஷ்ட்ட படுற?”
ஆதி “ஹான்...அப்போ இவன எப்படி தான் எழுப்புறது வீரா?”
வீரா “ம்ம்...டெய்லி மதி தான் எழுப்புவா”
ஆதி “ஓ...ஆனா இந்த மீரா ஒட சேர்ந்து உள்ள போனவள இன்னும் கானுமே”
வீரா “என்னனு சொல்லிட்டு போனாங்க?”
ஆதி “ம்ம்....ரெடி ஆகிட்டு வரோம்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் ஆள காணும்”

அவன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு சொல்ல குழம்பி போய் கதவை தட்டினான் வீரா

வீரா “ஹெ கள்ஸ் என்னப்பா பண்ணுறிங்க?”
மீரா “ம்ம்...வரோம் வீரா...கொஞ்சம் வைட் பண்ணுங்க”
வீரா “என்ன மீரா நீங்க போய் ஒரு மணி நேரம் ஆச்சுனு ஆதி சொன்னான் இன்னுமா?”

அவன் வாயை பிளந்துகொண்டு நின்றுவிட்டான்..அவன் நிலையை கண்டு கிட்டே வந்த ஆதியும் ரிஷியும்

ஆதி “ஹெய் வெளில வாங்க அப்படி என்ன பண்ணுறிங்க?”
மீரா “இப்போ என்னடா ஆதி”

வேகமாக கேட்டு கொண்டே வெளியே வந்த மீரா’வை வாயை பிளந்துகொண்டு பார்த்தனர் முவரும்...!!! மீராவை பார்த்த ரிஷி சொக்கி நின்றான் என்றால் அவள் பின்னாடி நின்ற மதியை பார்த்து மயக்கம் போடத குறைதான் நம் ஆதி...!!! ஏனெனில் எப்பொழுதும் ஜின்ஸ் சாட் டாப் குர்த்தி என அணியும் மீரா அன்று வாடாமல்லி கலர் புடவையில் இருக்க தலையில் வைத்து இருந்த மல்லிகையின் மனம் வீடு முழுவதும் பரப்பி கொண்டு அடக்கமாக நிற்க, பின்னாடி நின்றுகொண்டு இருந்த மதியோ அதே வாடாமல்லி கலரில் குர்த்தியும் ஜின்ஸில்லும் போனி டெய்லிலும் அட்டகாசமாக இருந்தாள்.
முதலில் சுதாரித்தது வீரா தான்...!

வீரா “ஹெய் வாட் அ சேன்ஞ் ஒவர் மாமா”
மீரா “ஒய் என்ன கிண்டலா?”

மீரா எகிறிகொண்டு வர

ஆதி“ம்ம்...பின்ன? இப்படி ஓரேடியா மாறினா அப்படி தான் சொல்ல முடியும்”

ஆதி வைத்த கண் வாங்காமல் மதியை பார்த்துகொண்டே கூறயதை கவனித்த மீராவின் கண்களில் விஷமம் இருந்தது...!!! இதுவரை நண்பன் என்ற முறையில் மட்டுமே பார்க்கும் பார்வையில் இன்று வித்யாசம் அதுவும் மதியை பார்த்து மட்டும்...!!! பாவம் இதை கவனித்த மீரா அவளை விழுங்கும் பார்வை பார்த்துகொண்டு இருந்த ரிஷியை கவனிக்க மறந்தால்.

மீரா “அப்படியா ஆதி நாங்க மாறினது சரி உங்கிட்ட ஏதோ மாற்றம் தெரிதே”
ஆதி “ம்ம்...அப்படில்லாம் ஒன்னுமில்லையே”

மீராவின் நக்கலான கேள்வியில் திணறியவன் முகத்தை சுருக்கிகொண்டு சமாளித்து வைத்தான்.

வீரா “சரி சரி...மதிம்மா....கொஞ்சம் வா...அந்த சித்து படுபாவி எழுந்துக்காம உயிர வாங்குறான்..!!”
மீரா “என்ன வீரா சொல்லுற? இன்னும் அவன் எழுந்துக்கலையா?”
ஆதி “இல்ல மீரா...”
மீரா “சரி வாங்க நான் எழுப்புறன் மதி நீ அந்த பாக் எடுத்துட்டு வா..ஆதி நீ அவள்க்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு”

அவர்கள் இருவருக்கும் தனிமை ஏற்படுத்திகொடுத்துவிட்டு இருவரையும் அழைத்துகொண்டு வெளியே வந்தால் இன்னும் அந்த தூங்குமுஞ்சி தூங்கி கொண்டே இருந்தான்.

மீரா “டேய் சித்து எழுந்துடுடா”
சித்து“ம்ம்....போ மதி...கொஞ்ச நேரம் சொல்லுறேன்ல”
மீரா “டேய் நா மீரா... மணி ஒன்பதுடா பக்கி எழுந்துடு டா”
சித்து“ம்ம்....டூ மினிட்ஸ்”
மீரா “இடியட் இது என்ன மாகியா? எழுதுக்கோ”
சித்து“ம்ம்....”

அவன் சினுங்கி கொண்டே மறுபுறம் திரும்பி படுத்துகொள்ள கடுப்பானவள் பக்கத்தில் இருந்த தண்ணிர் பானையிடம் சென்று தண்ணிர் பிடித்தவள் அவன் முகத்திலேயே ஊற்றிவிட்டால்...!!!

சித்து“ஐயோ எரும மாடே எதுக்கு தண்ணி ஊத்தின...ஸ்ஸ்ஸ்....ஜில்லுனு இருக்கே”
வீரா “ஹஹஹஹ”
ரிஷி " ஹெய் மீரா என்ன பண்ணுற”
சித்து“ நல்லா கேளுங்க ரிஷி...டேய் வீரா சிரிக்கவா சிரிக்கிற இரு டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உன்ன வெச்சிக்கிறேன்.”

அங்கே ஆதியும் மதியும்....மதி எதை பற்றியும் கவலை படமால் அங்காங்கே தூக்கி எறிந்து வைத்து இருந்த மீரா’வின் துணியையும் ஒரு ஓரமாய் போட்டு இருந்த அவளின் துணியை முகம் சுளிக்காமல் எடுத்து மடித்துகொண்டு இருக்க அவர்களின் ஒப்பணை சாமான்களை சேகரித்துகொண்டு இருந்தான் ஆதி...!!!

ஆதி “இந்த மீரா இன்னும் சின்ன புள்ள மாதிரி எப்படி எல்லாத்தையும் போட்டு வெச்சி இருக்கால மதி?”
மதி “ம்ம்...அவ இன்னும் சின்ன குழந்தை தான ஆதி நமக்கு? சில சமயம் பெரிய பெரிய விஷயம்லாம் அசால்ட்டா செஞ்சாலும் சில சமயம் நமக்கே அம்மா மாதிரி தான் அவ...அனாலும் எப்பவும் அவ நம்ம எல்லார்க்கும் குழந்தை தான்”

சின்ன சிரிப்போடு சொல்லி கொண்டு இருந்தவளை இமைக்க மறந்து பார்த்துகொண்டு இருந்தான்...

மதி “என்ன ஆதி? ஏன் அப்படி பாக்குற?”
ஆதி “நீ...இன்னிக்கு ரொம்ப வித்யாசமா அழகா இருக்க மதி”
மதி “ம்ம்...எல்லாம் இந்த மீரா தான் தொல்ல பண்ணி இப்படி போட்டுக்க வெச்சா...அவ புடவை கட்டினா கட்டிக்கற்து தான என்னையும் படுத்தி எடுத்துட்டா”
அவள் அவனின் குரல் மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் அவள் இஷ்ட்டத்திற்க்கு பேசிகொண்டே போக நொந்துகொண்டான் ஆதி...!!! சிறிது நேரத்தில் வெளியே வர...அதே சமயம் சித்துவும் வெளியே வர ஹாலில்...

வீரா “ஹஹ செமயா எழுப்புன மீரா அவன இனி நானும் இதே டிரை பண்ணுறன்”
மீரா “ஹஹ பின்ன சொல்ல சொல்ல எழுந்துக்காம இருந்தா?”
வீரா “நீ என்ன தான் அடக்க ஒடுக்கமா சேரி கட்டினாலும் உன்னோட இந்த அறந்தவாள் மட்டும் போகவே மாட்டேன்தே”

அவளையும் சேர்த்து வாரிவிட்டு சிரித்தவனை தூரத்த ஆரம்பித்தாள் மீரா...

மீரா “டேய் உன்ன என்ன பண்ணுறேன் பாரு”
சித்து“அப்படி தான் மீரா என் சார்பா ரெண்டு போடு”
வீரா “அடேய் துரோகி சித்து...கோத்துவிடாம இருடா”
சித்து “என்ன எழுப்பினத பாத்து சிரிக்கவா சிரிக்கிர இன்னிக்கி மாட்டினடா”
மதி “ஐயோ மீரா வேனாம் விட்டுடு மா...பாவம்”
மீரா “ நீ சும்மா இரு மதி”

வெவ்வேறு வகையாக அனைவரும் கத்த..வீராவும் மீராவும் ரிஷியை சுற்றி ஒட ஆரம்பித்தனர். அவர்கள் ஓடியது பத்தாது என அவனையும் ஆட்டி வைத்த இருவரையும் கண்டு சிரிப்பதா அழுவதா என முழி பிதிங்கி நின்றான் ரிஷி...!!! ஒரு பக்கம் இதுவென்றால் மிக அருகில் தெரிந்த மீராவின் முகமும் அவளின் மல்லிபூ வாடையும் வேறு அவனை கிறங்கி அடிக்க செய்தது...!!!
ஒரு வழியாக அவர்களின் ஆட்டம் முடிந்து கிளம்ப அயத்தமானார்கள் வீராவும் மதியும் ஒரு வண்டியில் ஏரி கொள்ள ஆதியும் சித்துவும் ஒரு வண்டியில் ஏரி கொள்ள மீரா அவள் வண்டியிடம் செல்ல...அதுவோ பஞ்ச்ர் ஆன டயரை காண்பித்து ஈ என ஈளித்தது.

ஆதி “மீரா என்னாச்சு?”
மீரா “வண்டி பஞ்ச்ர் ஆதி...”
ஆதி “ஓ...”

அனைவரும் முழித்துகொண்டு நிற்க

ரிஷி “வா மீரா என் கார் தான் இருக்கே வண்டி இங்கயே இருக்கட்டும் யாரச்சு ஒருத்துர் என்கூட வாங்க வேனும்னா”

அவர்கள் எங்கே தப்பாக எடுத்துகொள்வார்களோ என பயந்துகொண்டே கேட்டவன் கூடவும் யாரையாவது அழைத்தான் ஆனால் அவர்களோ பரவாயில்லை என மீராவையும் ரிஷியையும் மட்டும் தனியே வர விட்டனர்...
வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே மீரா பிளேயரில் பாடலை ஒடவிட...!!!

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்குமர காடு வெடிக்குதடி

அவள் கைகள் தாளமிடுவதை ரசித்துகொண்டே வண்டி ஓட்டிகொண்டு இருந்தான்.

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேக்கறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

அவள் உதட்டை சுழித்து பாடலை ரசித்ததை கவனித்தவன் அவள் கைகள் தாளமிடும்போது அவன் மீதும் படும்போது தவித்தான்.

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேட்கல
தவியா... தவிச்சு....
உசிர் தடம் கெட்டு திரியுதடி
தயிலாங்குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி...
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா

அவன்மீது கை பட்டதும்.. நகர்ந்து அமர்ந்தவளை ஓர கண்ணால் பார்த்தான்...அவளின் சிரிப்பில் தன்னை இழந்தவன் வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அவள் கைகளை பற்ற அவள் திகைத்து நிமிர்ந்தால்.

ரிஷி “பிளிஸ் மீரா....என்னால முடில...”
மீரா “ஹான்...”
ரிஷி “இன்னிக்கு இந்த சேரி’ல ரும்ப அழகா இருக்க...”
மீரா “ய..யாதவ்...என்ன இது...விடு...”

அவள் இடுப்பை வளைத்து பிடித்தவனை தடுக்க முடியாமல் திணறி தவித்து பதட்டத்துடன் விட சொன்னாள். அதன் பின்னே சுய நினைவு வந்தவன் போல் தலையை உளுக்கி கொண்டவன்...

ரிஷி “ஐயம் சாரி மீரா...ஏதோ என்னக்கே புரியாம...”

அதற்க்குமேல் என்ன சொல்வது என தெரியாமல் வண்டியை கிளப்பினான்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 19



ஏதுவும் அதற்க்கு மேல் கூற இயலாமல் வண்டியை கிளப்பியவனை அடிகடி திரும்பி திரும்பி பார்த்துகொண்டு வந்தாள் மீரா...!!! பிளேயர் வேறு நிலைமை புரியாமல் சதி செய்தது.

“தோழியா என் காதலியா யாரடி பெண்ணே”
“பூக்களே சற்று ஓய்வெடுங்கள்”
“காதல் கண்கட்டுதே”
“அன்பே அன்பே கொள்ளாதே..”
“என் காதலே என் காதலே என்னை என்ன செய்யபோகிறாய்”

இவ்வாறாக அவன் எவ்வளவு தான் பாட்டை மாற்றி வைத்தாலும் ஒரே காதல் ரசம் அதில் நிரம்பி வழிய ஒரு கட்டத்திற்க்குமேல் பொறுக்காமல் அதன் தலையில் தட்டி அதன் கதறலை நிருத்தி இருந்தான் கோபத்தோடு...!!!

மீரா “எ எதுக்கு இப்போ அதுமேல கோவத்த காட்டற?”
“...........”
“உன்மேல தப்பு வைச்சிட்டு கோவம் வந்து என்ன பிரியோஜனம்”
“..........”

அதற்க்குள் அவர்கள் வீடு வந்து சேர்ந்து இருக்க அவன் அவள் இருங்குவதற்க்காக காத்து இருந்தான்

மீரா “இனி இப்படி பிஹேவ் பண்ணாத..எனக்கு பிடிக்கல... நீ என்ன மனசுல வெச்சிட்டு இருக்கனு புரில ஆனா எதுவா இருந்தாலும் அழிச்சிடு...அதான் நல்லது இல்ல என்னோட முழு கோபத்த நீ தாங்க மாட்ட”

கூறிவிட்டு விடுவிடுவென வீட்டினுள்ளே நுழைந்துவிட்டால்...அவளின் மெரட்டலில் சிரிப்பு வந்தாலும் அவள் என்ன நினைசிட்டு என்று வேறு எதையோ குறிப்பிட்டதை உணர்ந்தவன் முகம் கருக்க சீட்டிலேயே சாய்ந்துவிட்டான்.

மதி “என்ன அண்ணா இங்கயே இருக்கிங்க? மீரா எதோ?”
ரிஷி “ம்ம்...நத்திங்

மதி வந்து எழுப்புவரை அங்கே கண் முடி சாய்ந்து இருந்தவன் அவள் முதல் கேள்விக்கு பதில் கூறி இரண்டாம் கேள்வியை கவனியாததுபோல் காரை லாக் செய்வதில் இடுப்பட்டான்.

மதி “சரி உள்ள வாங்க எல்லாரும் உள்ள போயாச்சு..”
ரிஷி “ம்ம்...”

உள்ளே அனைவரது பெற்றோர்களும் இருந்தனர்...அதை கண்டு சிறிது தயங்கினாலும் நேர்கொண்ட பார்வையுடன் உள்ளே நழைந்த ரிஷியை முதல் பார்வையிலேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது. உள்ளே நுழைந்தவனை அமர வைத்து அவனுக்கு மேங்கோ ஜுஸ் கொண்டு வந்து உபசரித்தார் பரணி.

சேகர் “உங்கள பத்தி கேள்வி பட்டதும் முதல தள்ளி இருக்கனும்னு தான் சொன்னோம் ஆனா உங்களோட நேர்மை, பயமில்லாத அநியாயத்த தட்டி கேட்கற்து இதுலாம் ஆதி சொல்லி தான் எங்களுக்கு தெரிஞ்சிது அதுவும் இல்லமா எங்க குழந்தைகளோட பாஸ் வேற...எப்படி இருப்பிங்களோனு கவலையா தான் இருந்துச்சு ஆனா எந்த ஒரு பந்தாவும் இல்லாம நீங்க பழகற்து நல்ல இருக்கு தம்பி...ரும்ப பெரிய உதவி செஞ்சி இருகிங்க ரும்ப நன்றி”

சேகர் அனைவரின் சார்பாகவும் பேசி தான் வீராவின் தந்தையென நிருப்பித்தார். அவர் பேச பேச முகத்தில் ஒரு சின்ன சிரிப்போடு கேட்டுகொண்டு இருந்தாலும் அங்கே அழகம்மையின் மடியில் படுத்து கொஞ்சி கொண்டு இருந்த மீராவின்மேல் அடிகடி பார்வையை படரவிட்டுகொண்டு இருந்தவன் அவர் நன்றி கூறியது....

ரிஷி “ச்ச் இது என் கடமை ஸ்ர்”
“என்ன?”
“ம்ம்....மீராவை காபதற்து என் கடமை அவள்க்கு ஒரு பிரச்சனைனா நான் அங்க இருப்பேன்”

அவன் இவ்வாறு கூறியதும் அனைவரும் குழம்ப மீரா வெடுக்கென தலை நிமிர்த்தி பார்க்க...

ரிஷி “ஒரு பாஸா அவள பாதுகாகற்து என் கடமை தான?”

மீராவின் முகத்தில் தோன்றிய எரிச்சலை ரசித்துகொண்டே கூறியவன் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் என்ன வர்புறுத்தியும் மதிய உணவிற்க்கு தங்காமல் கிளம்பிவிட்டான்.
பின் அனைவரும் அன்று அலுவலகத்திற்க்கு மட்டம் போட்டுவிட்டு அவரவர் வீடு சென்றனர் ஓய்வெடுக்க...!!! சித்து முதல் ஆளாய் ஒடிவிட அவனை கண்டு சிரித்துகொண்டே தன் அறைக்கு வந்தவள் முகம் கழுவி சாதாரண உடைக்கு மாறி கட்டிலில் சரிந்தாள்.
அவள் கண் முன்னே அவள் இடையை பற்றி அருகிலிழுத்த யாதவே வந்து போனான்.

மீரா ‘என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணினான்...’
‘எப்பவும் எங்கிட இப்படி நடந்துகற்தே இவன் வேலையா போச்சு’
‘இனிமே அவன் அப்படி பண்ணினா இருக்கு’
‘ச்ச்...ஏன் அத பத்தியே மண்டைல ஓடிட்டு இருக்கு’
‘ம்ம்....யாரையும் நெருங்க வடதவ...அப்படி யாராச்சு டிரெய் பண்ணினாகூட உயிர் தவிர வேற எதுமில்லாத மாதிரி ஆக்குறவ ஏன் அவன் வந்தா மட்டும் இப்படி தடுமாறுது இந்த மனசு?’
‘ம்ம்...அந்த இடியட்’அ கூட ஈசியா தூக்கி எரிஞ்சனே இந்த யாதவ் மட்டும் ஏன்’

சிறிது நேரம் பழயதை நினைத்து கண்களில் இரத்தை சுரந்தவள் இனி அவன் இருக்கும் பக்கம் கூட போக கூடாது என தவறான முடிவுடன் கண் முடினாள்.
வீடு போய் சேர்ந்த ரிஷியும் எங்கேயும் போக பிடிக்காமல் நேற்று காலை சென்றவன் இன்று காலை வரும் மர்மத்தை அறிய துடித்துகொண்டு இருந்த மணியையும் லட்சியம் செய்யாமல் யாரையும் தொந்தரவு பண்ண வேனாம் என கூறி அவன் அறையில் சென்று அடைத்துகொண்டான்.

ரிஷி ‘யாரையும் என் வண்டியில ஏத்தாதவன் எப்படி அவள ஏத்தினேன்’
‘அப்படி என்ன உரிமை அவகிட்ட...’
‘இப்படியா நிலையிழந்து போறது?’
‘ச்ச்...எவ்வளவு கேவலமா நினைச்சிட்டா’
‘ஆனா எவ்வளவோ பொண்ணுகளோட பழகி இருக்கேன் அவங்களே மேல வந்து விழுந்தாலும் தள்ளி விட்டு வரவன் எப்படி இவள பாத்தா மட்டும் மதி மயங்கி போறன்’
‘நம்ம இருக்க நிலைமைக்கு இதலாம் தேவையா?’
‘இனி அந்த ராங்கி இருக்க திசைக்கே நம்ம போக கூடாதுடா சாமி’

விதி வலியது! அன்று மாலையே ஐவர் கூட்டம் ரம்யாவை காண மருத்துவமணை செல்ல அங்கே அதே நோக்கத்தோடு வந்த ரிஷி அவர்களை கண்டு தயங்கினான் என்றாள் மீரா தலையில் அடித்துகொள்ளாத குறை தான்.

நன்றாக தூங்கி எழுந்த மீரா மதிய உணவு உண்டுகொண்டு இருந்த வேளையில் ஆதி வந்து மாலை செல்ல போகும் விஷயத்தை கூறிவிட்டு செல்ல மண்டை ஆட்டியவள் உண்டுவிட்டு சிறிது நேரம் கார்டூனை போட்டுகொண்டு உட்கார்ந்துவிட்டு மூன்று மணி அளவில் காலையில் கட்டி அதே சேலையை எடுத்து அணிந்துகொண்டால் ஏனோ அது அவள் உடலை தழுவும்போது காலையில் அவளை அனைத்து காதில் இந்த சேரி ரும்ப அழகா இருக்கு உனக்கு என்று கூறிய யாதவே மனதில் நின்றான்.

அனைவரும் கிளம்பி மருத்துவமனை செல்ல அங்கே போலிஸ் உடன் பேசிகொண்டு இருந்த யாதவ் கண்ணில் பட்டதும் அனைவரின் முகத்தில் ஆச்சர்யம் என்றால் மீராவின் முகத்தில் கடுகும் எள்ளும் வெடித்துகொண்டு இருந்தது. அதை கவனித்த ரிஷி என்ன சொல்வது என தெரியமல் இன்ஸ்பெக்டருடன் தன் பேச்சை தொடர்ந்தான்.

ஆதி.“என்னாச்சு ரிஷி? நிங்க இங்க?”
ரிஷி “அது....”
சித்து“இன்ஸ்பெக்டர் எனி இப்பார்ட்டன்ட் நியுஸ்”
இன்ஸ்பெக்டர் “வந்து மிஸ்டர்.சித்தார்த்...”
ரிஷி “ம்ம்...நான் சொல்லிகிறேன் ஸ்ர்....எக்ஸ்குயுஸ்மீ”

என்றுவிட்டு அவரை கீழே சென்று வழியனப்ப சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே ரம்யாகாக வாங்கி வந்த பழங்களை காரிலேயே விட்டு வந்ததை நினைத்து தலையில் அடித்துகொண்டு அதை எடுக்க கீழே சென்றால் மீரா. முதல் தளத்தில் தான் இருந்தால் என்பதால் லிவ்டை தவிர்த்து படியிலேயே இறங்கிவந்தவள் கவனியாமல் மேலே வந்துகொண்டு இருந்த ரிஷியின்மீதே சரிந்தாள்.

திடிர் என்று தன்மேல் பூசென்டு போல் விழுந்த மீராவை சற்று தள்ளாடி பின் அவள் இடையை இறுக்கி சமாளித்து நின்றான்...!! இருவர் கண்களும் கலந்துவிட்ட நிலையில் சுற்றம் மறந்து நின்றுகொண்டு இருந்தனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 20



அவர்கள் படியில் ஒருவர் பிடியில் மற்றொருவர் நின்றுகொண்டு இருக்க...அந்த பக்கமாக ஸ்டெச்ச்ரை தூக்கிகொண்டு வந்த இருவர் வழிவிட சொல்லி கேட்க ஸ்டெச்சரில் படுத்து இருந்தவனோ

யாரோ “ம்ம்....இப்படில்லாம் லவ் பண்ண பார்க் பீச் போறத விட்டுட்டு ஹாஸ்பெட்டிலையும் விட மாட்டுறாங்களே கலி காலம்”

என புலம்பிகொண்டே அடுத்து தனக்கு நடக்க போகிற சிகிச்சையை பற்றி கவலையில் சென்றுவிட...பதறி விலகினர் இருவரும்.

மீரா “ஏய் எதுக்கு என்ன புடிச்ச அறிவு இல்ல உனக்கு”
ரிஷி “ம்ம்........”

அவள் அவ்வாறு கோவமாக கேட்டதும் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன் கிண்டலாக கேட்க அவள் திருதிரு என விழித்துகொண்டு கீழே ஓடி விட்டாள். அதை பார்த்தும் சிரிப்புடன் பார்த்துகொண்டு இருந்தவன் அவள் காலையில் கூறியது நியாபகம் வர முகம் இருக்கத்துடன் மேலே சென்றான்.

ஆதி “வாங்க ரிஷி ஏன் இன்ஸ்பெக்டர் லாம் வந்து இருந்தாங்க? என்னாச்சு?”
ரிஷி “ஒன்னுமில்லை ஆதி...வந்து....”
ஆதி “ம்ம்... என்னனு சொல்லுங்க ரிஷி”
ரிஷி “அந்த அஜய் வெரும் அம்பு தான் இதுக்கு பின்னாடி ஒரு காங்க்’எ இருக்குனு சொல்லிட்டு போறாங்க”
ஆதி “ஓ”
ரிஷி “ம்ம்....அந்த காங்க்-க்கு இந்த பொண்ணு மேலையும் கண்ணு இருக்காம் இவங்கல கொல்ல பாக்குறாங்க...அதுக்காக ரெண்டு போலிஸ்’அ பாதுக்காப்புக்கு இருக்க சொல்லிட்டு போய் இருக்காங்க”
மீரா “ஆனா அவங்க இருந்தா மட்டும் இவளுக்கு ஏதும் ஆகாதா?”

அதற்க்குள் வந்து விட்ட மீரா யோசனையுடன் கேட்க மெச்சும் பார்வை ஒன்றை அவள் மீது விசியவன் அமைதியாக திரும்பி மற்றவர்களை பார்க்க அவர்கள் முகத்திலும் அதே குழப்பம்.

ரிஷி “ம்ம்....உண்மைதான் அதுக்காக தான் என்னோட ரெண்டு ஆள்’அ உள்ளயே பாதுக்காப்புக்கு வெச்சி இருக்கேன்”
மீரா “என்னது? அவ ஓரு பொண்ணு என்ன இப்படில்லாம்”
ரிஷி “ஹெ...வைட் மீரு...ரா......உள்ள வாங்க பாக்கலாம்”

அவன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல அனைவரும் திருதிருவென விழித்துகொண்டே உள்ளே சென்றனர். அங்கே இருந்த இருவரை பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் திகைத்தனர்.

ரிஷி “இவங்க பேர் சிந்தாமணி இவங்க தனம்...”
தனம் “வணக்கமுங்க”

அவர்கள் இருவரும் திருநங்கைகள்....என்ன கூறுவது என தெரியாமல் கடமைக்கு சிரித்து வைக்க அதை கண்ட ரிஷியின் முகம் மாறியது

ரிஷி “என்ன எல்லாம் திகைச்சி போய் இருக்கிங்க?”
வீரா “ம்ம்....ஒன்னுமில்லை”
ரிஷி “இவங்க பிறக்கும்போதே இப்படி தான்...இவங்க வீட்டுல இருந்து தொரத்தி விட்டுடாங்க....தப்பான இடத்துல மாட்டினவங்கள ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் காப்பாதினோம்....தற்காப்பு கலை கத்துக்குட்டு எங்களுக்கு உதவிட்டு இருக்காங்க”
மதி “யு ஆர் ரியலி கிரேட் அண்ணா.... நாங்கலாம் ஜஸ்ட்....நீங்க எவ்வள்வு பேர்க்கு உதவுரிங்க?”
ஆதி “ஆமா ரிஷி....புரொவுடு ஒஃப் யு”
ரிஷி. “ஐயோ போதும்...விடுங்க நான் எதுமே பண்ணல அவங்களும் நம்மல போல மனிசங்க தான்....ஆனா அத யாரும் சரியா புரிஞ்சிகற்தில்ல...”
சிந்தாமணி “எங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே தம்பி தான்...இவர் எப்பவும் நல்ல இருக்கனும்”

பின் சிறிது நேரம் பேசிவிட்டு ரிஷி கிளம்பிவிட மீரா மற்றும் அவள் நண்பர்கள் அந்த பெண்ணை விழிக்கும் வரை காத்து இருந்து பார்த்துவிட்டு சென்றனர்...ஆனால் அந்த பெண்ணோ யாரையும் அருகில் வர விடமால் கத்தி கூச்சலிட என்ன செய்வது என தெரியாமல் நின்றவர்கள் அந்த பெண் மீராவிடம் மட்டும் ஒன்றிகொள்வதை கண்டு ஆச்சர்யம் அடைய அங்கே வந்த மருத்துவர். அவளை காப்பாற்றிய காரணத்தினால் இருக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக தான் சரி செய்ய வேண்டுமென கூறிவிட்டு சென்றார்.

அனைவரும் கிளம்பி வீடு போய் சேர மீராவிற்க்கு தான் மனம் குழப்பதிலேயே இருந்தது. ஆதி மதியின் புது தோற்றத்தில் சிக்கி தவிக்க ஆரம்பித்தான். மதியோ அதை பற்றி சிறிதும் அறியாமல் இருக்க...ஆதி அவளுடன் டுயட் பாட ஆரம்பித்தான்.

மறுநாள் காலை மீரா எழுத்து கிளம்பி ஆதியிடம் செல்ல அவனோ என்றுமில்லா திருநாளை மிகவும் ஸ்மார்டாக டிரஸ் பண்ணிகொண்டு வந்தான்.

மீரா “என்னடா? ரும்ப ஹான்ட்சம் ஆ இருக்க? ரும்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் குளிச்சியா என்ன?”
ஆதி “ஒய் என்ன கிண்டலா”
மீரா “ச்ச்...ச்ச்....நக்கலு”
ஆதி “அடிங்க்...”
ஆதிம்மா “டேய் பசங்களா போதும் அரட்டை அடிச்சது காலை’லயே ஆரம்பிச்சிட்டிங்களா?”
ஆதி “இல்ல அம்மா இவ தான்”
ஆதிம்மா “போதும் டா சின்ன பையன் மாதிரி இன்னுமும் அம்மா முந்தானைய புடிச்சிட்டு உனக்கே ஒரு கல்யாணம் பண்ணுற வயசாச்சு”
ஆதி “ஐயோ அம்மா...ஒரே ஒரு கல்யாண்ம் தானா?”
மீரா “டேய் உன் முஞ்சிக்கு ஒன்னு கிடைகற்தே பெரிசு”
ஆதிம்மா “விடு மீரா....வா உனக்கு புடிச்ச இடியாப்பம் செஞ்சி இருக்கேன் சாப்புடுவ”
ஆதி “ம்ம்....இந்த வீட்டு புள்ள நானா இவளா எப்பாரு இவளுக்கு புடிச்சதே செய்யுங்க...சரியான சாப்பாடு ராமி”
மீரா “டேய் போடா நீ என்னமோ சாப்பிடாதயே உயிர் வாழுற மாதிரி பில்டப் தர...அப்படி ஒன்னும் நீ சாப்பிட வேனாம் நானே சாப்பிட்டுகுறேன்.”
ஆதி “அடியேய் நீ செஞ்சாலும் செய்யுவ...எனக்கு பசிக்கிது கொஞ்சம் கொடுடி...”

அவள் பிளேட்டையே பிடிங்கி இவன் சாப்பிட ஆரம்பிக்க அதில் உப்பை கொட்டி அவன் சாப்பிடுவதை கெடுத்துவிட்டு இவள் ரசித்து உண்ண ஆரம்பித்தால்...இவ்வாறாக எப்பொழுதும் போல் குறும்புடன் அவர்கள் கிளம்ப என்றுமில்லா வித்யாசமாய் ஆதி....

ஆதி “வாயேன் மீரா...சித்து வீட்டுக்கு போய்ட்டு போலாம்?”
மீரா “ஏன்? என்ன திடிர்ன்னு?”
ஆதி “சும்மா தான்”

சரியென ஒத்துகொண்டு அவளும் அவனுடன் செல்ல அங்கே மதி சித்துவின் தலைமுடியை இழுத்து அவனை எழுப்ப படாதுபாடு பட்டுகொண்டு இருக்க....விஷயம் புரிந்த மீரா நமுட்டுசிரிப்புடன் ஆதியை பார்க்க அவனோ முப்பதி இரண்டு பற்களையும் காண்பித்து இளித்துவிட்டு மதியை சைட் அடிப்பதை தொடர்ந்தான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 21



மீரா.“என்ன ஆச்சு மதி இன்னிக்கும் ஸர் சிக்கிரம்மா எழுந்துக்களையா?”
மதி “ஹாய் மீரா ஆமா டி எழுந்துக்க மாட்ரான்”
மீரா “சரி நீ குட் பொண்ணா எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்து வருவியாம் நான் இவன எழுப்பிக்கிறேன்.”
மதி “ஹான்...சரி மீரா”
மீரா “டேய் ஆதி நீ போய் ஸோட்ர் ரூம் ல பிச்சி இருக்கும் எடுத்து வாடா”

கிட்சனை தாண்டி தான் ஸோட்ர் ரூம் போக வேண்டும் என தெரிந்தே அனப்பி வைத்தாள்

வீரா “என்ன மீரா அதிசயமா இங்க வந்துருக்கிங்க”
மீரா “ஏன் நாங்கலாம் வர கூடாதோ?”

அவள் ஆதியை மாட்டி விட மனமில்லாமல் வம்பு இழுத்துகொண்டே சித்துவை எழுப்பி விட அவன் திருதிரு என முழித்துவிட்டு பின் உர்ர் என்ற முகத்துடன் பாத்ரூமிற்க்குள் நுழைத்தான்.

வீரா “ச்ச்ச் அப்படில்லாம் இல்ல மீரா காலைல நீங்க ரொம்ப பிசியா இருப்பிங்களே அதான் கேட்டன்”
மீரா “சும்மா டா... இனிக்கு தான் கொஞ்சம் ஃபிரியா இருந்தோம் அதான்...10 போல ஆபிஸ் போனா போதும் டா”
வீரா “ஓ அப்படியா சரி சரி”

அங்கு மதியின் பின்னாலையே பூனைக்குட்டி போல் சென்ற ஆதி அவளுக்கு உதவுகின்றேன் பேர்வழியென்று அவளின் அழகில் மூழ்கியவனாய் அவளை சைட் அடித்துகொண்டு இருந்தான். இதை எதையும் அறியாத நம் மதி அவன் நெளிவதை பார்த்து

மதி “என்னாச்சு ஆதி? புழுக்கமா இருக்கா? நீ போய் ஹால்’ல அவங்களோடு போய் உட்கார்...நா காபி போட்டுட்டு பிஸ்கட் எடுத்துட்டு வரேன்”
ஆதி “அதல்லாமில்லை அம் ஆல்ரைட் நான் போய் பிச்சி..ச்ச்...பிஸ்கடை எடுத்துட்டு வரேன்”

அவள் அதற்க்கு மெல்லிய சிரிப்பை பரிசளித்தவள் டிகாஸனை பாலில் ஊற்ற ஆதியோ என் மனசில் இருக்குற புழுக்கத்த பத்தி தெரியாம என்ன இப்படி இம்சை பண்ணுறாலே என புலம்பி கொண்டே பிஸ்கடை எடுத்து வந்தான்.

மதி “அதுக்குள வந்துட்டியா?”
ஆதி “ஏன் ஸ்டோர் ரூம் என்ன 10கிலோமீட்டர் தள்ளியா இருக்கு?”
மதி “இல்ல...மீரா சொல்லிருக்க உங்கிட்ட ஒரு வேலை சொன்ன அத முடிக்கர்த்துகுள்ள பொழுதே விடிஞ்சிடும்’னு”
ஆதி “எர்ர்ர்...இந்த மீராக்கு என்ன டேமேஜ் பண்ணுறதே வேலையா போச்சு”
மதி “ஹஹஹ விடுடா...”
ஆதி.“ம்ம்...என்ன திரும்பியும் சாரிக்கே மாறிட்ட?”
மதி “ஐயோ அந்த ஜீன்ஸ் எனக்கு எனமோ மாதிரி இருக்கு ஆதி”
ஆதி “ஓ சரி தான்”
மதி “ஏன்? எனக்கு சாரி நல்லா இல்லையா?”
ஆதி “ஒரு உண்மைய சொல்லவா? உனக்கு சாரி தான் ரும்ப ரும்ப நல்ல இருக்கு...மார்டன் டிரஸ்’அ விட”

என்று சொல்லிகொண்டே அவளின் கன்னத்தில் ஒரு விரலால் கோடுழுத்தான். அதனின் மென்மையில் தவித்தவன் எதுவும் கூறாமல் டிரேயை எடுத்துகொண்டு வேகமாக வெளியேறினான். அவன் சைகையில் விக்கித்து நின்றவள் தனக்குள் ஏற்படும் மாற்றத்தின் காரணம் புரியாமல் கன்னத்தின் சிவப்பை மறைத்துகொண்டு ஆதி விட்டு சென்ற பிஸ்கட்டுகளை எடுத்துகொண்டு வெளியே வந்தாள். அங்கு சித்துவும் வந்துவிட சிரித்து பேசிகொண்டே நேரம் கடந்த்து.

ஆதி “எரும...வரும்போது தான அத்தனி இடியாப்பதை முழுகின? இங்க வந்தும் ஒரு பாக்கட் பிஸ்கடையும் காலி பண்ணுற?”
மதி “போட உனக்கு பொறாமை”
ஆதி “ஐயோ உனோட இந்த புட் டாங்க்’அ பாத்து எனக்கு பொறாமை வேறையா? என்ன கொடுமை சித்து இது?”

ஆதி பிரபு பானியில் கூற அங்கே சிரிப்பலை பரவியது...அப்போது

ஆதி “ஆமா வந்தும் கேக்கனும்னு நினைசன் சித்து அப்பா அம்மா எதோடா?”
சித்து “ரம்யா இருக்க நிலைமைய பத்தி எந்த பிளாக் கேட்’ஓ போட்டு கொண்டுத்துடுச்சு மீரா”

சித்து வீராவை பார்த்துகொண்டே சொல்ல..அவன் திருதிருவென முழித்து மாட்டிகொண்டான்.

வீரா “இல்ல...அப்பா அம்மா கிட்ட எதுக்கு மறைக்கனும்னு தான் சொன்னேன்”
மீரா “அதுக்கு இல்ல வீரா அந்த பொண்ணே எப்படி இருக்கா பாத்திங்கல? இப்போ இவங்களாம் அவள பாக்கனும்னு சொல்லுவாங்க என்ன பண்ணுவ?”
மீரா அம்மா “கரெக்ட்...நாங்க அத தான் சொல்லாம்னு நினைச்சி வந்தோம்”

என கூறி கொண்டே உள்ளே நுழைந்த தத்தம் பெற்றோரை பார்த்தவர்கள் ஒரே நேரத்தில் வீராவை முறைத்தனர். அதை கண்ட அவன் அமைதியாக சென்று மீராவின் அன்னையின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

மீரா “ஆது என்ன எதாச்சு தப்பு பண்ணா எங்க அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிற?”
வீரா “ஆது...எல்லாரையும் சமாளிக்கலாம் உன்ன...ம்ம் என்னால முடியாது அதான் இவங்க உன்ன சமாளிப்பாங்க”
மீரா “உன்ன....”
மீரா அம்மா “இப்போ எதுக்குடி அவன அடிக்க வர? எங்க கிட்ட எதுக்கு மறைக்கறிங்க?”
மீரா “அது இல்லமா இப்போ அந்த பொண்ணு யாரையும் பாக்குற நிலைமைல இல்ல...அதான்”

என அவள் கூறி கொண்டு இருக்கும்போதே அங்கு ரிஷி புயல் போல் உள்ளே நுழைந்தான்...அவன் முகம் இருக்கிபோய் இருப்பதை பார்த்து அனைவரும் கலவரமாக...அவன் சொன்ன வாக்கியத்தில் அனைவரும் ஒரு நிமிடம் என்ன செய்வது என தெரியாமல் கலங்கி நின்றன...!!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 22



உள்ளே நுழைந்தவனை அனைவரும் கலகத்துடன் நோக்க அவனோ சில நேரம் அனைவர் முகத்திலும் இருக்கும் உணர்ச்சிகளை கவனித்தவன் மெதுவாக மிக மெதுவாக

ரிஷி “ரம்யா பைத்தியமில்லை...தெளிஞ்சிட்டா”

கூறிவிட்டு மீராவை ஆழ்ந்து பார்த்தவன் நிதானமாக சென்று ஜக்கில் இருந்து தண்ணிரை எடுத்து பருகினான். பெரியவர்கள் அனைவரும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள சிரியவர்களோ அவன் கூறியதை புரிந்துகொள்ளவே அவர்களுக்கு சில நேரம் பிடித்தது.

மீரா “ஹெ என்ன சொல்லுற நீ”
ரிஷி “ஆமாம் மீரு..ரா உண்மை தான்”
மீரா “அப்போ எப்படி? என்னாச்சு?”
சித்து“மீரா ஜஸ்ட் ரிலாக்ஸ்”
மீரா “என்னனு சீக்கிரம் சொல்லுங்க ரிஷி”
ரிஷி “அவங்க மனநிலை லாம் பாதிக்க படல அந்த அஜய் தான் அவங்களுக்கு சாக்க் டிரிட்மென்ட் கொடுத்து அவங்கள...”

அவன் சொல்லிகொண்டே போனவன் நிறுத்திவிட்டு மீராவின் முகம் பார்க்க அவள் முகம் கோவத்தில் சிவந்து இருப்பதை பார்த்தவன் மதிக்கு கண் ஜாடை காட்ட அவள் மீராவின் அருகில் சென்று அவள் தோளை பற்ற மீராவின் கண்களில் இருந்த தீயின் ஜுவாளையை கண்டு பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்தவள் ஆதியின் தோளில் சாய்ந்து நின்றுகொண்டாள்.

மீரா “நான் அந்த பொண்ண பாக்கனும்...இப்போவே”
ஆதி “ம்ம்....இப்போ நீ ரொம்ப டென்சன்’அ இருக்க மீரா இவனிங் போலாம்”
மீரா “நான் இப்போவே பாக்கனும் ஆதி பிளிஸ்”
“பரவால நாம தான் கூட இருக்கோமே பாக்கலாம் ஆதி”
வீரா “சரி அப்போ கிளம்பலாம்”
மீரா “இல்ல நானும் ரிஷியும் போதும் நிங்களாம் அப்புறம் வாங்க”
மதி “ஆங்...இல்ல மீரா நீ மட்டும் எப்படி”
மீரா “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் மதி சோ ஹொப் யுவில் அண்டர்ஸ்டான்ட்”
மீரா ஆப்பா “பத்திரம்டா மீரா மா”
மீரா “சரிப்பா கண்டிப்பா”

இதை அனைத்தையும் ரிஷி அமைதியாக பார்த்துகொண்டு இருந்தான் அவனால் மீராவின் மனதில் என்ன இருகின்றது என கண்டு பிடிக்க முடியவில்லை. இருவரும் கிளம்பிவிட வீரா ரிஷிக்கு மீராவை பத்திரமாக பார்த்துகொள்ளும் படி ஒரு குறுஞ்செய்தி அனப்பினான்.
மருத்துவமனை செல்லும் வரை காரில் ஒரு விதமான அமைதியே நிலவியது. மீரா அந்த அஜயின் மேல் உள்ள கோபத்தில் இருக்க ரிஷி மீராவின் எண்ணவோட்டங்களை தெரிந்துகொள்ள முயற்சித்துகொண்டு இருந்தான்.
மருத்துவமனை வந்ததும் மீரா எதுவும் பேசாது ரிஷியை பின் தொடர்ந்து ரம்யா இருக்கும் அறைக்குள் நுழைந்தனர். அங்கே கண்ட ரம்யாவை பார்த்து குழைம்பி போய் ரிஷியை பார்த்தாள்.

ரிஷி “என்ன?”
மீரா “இல்ல...எதோ சேஞ்சஸ் அவகிட்ட...அதான்”
ரிஷி “ம்ம்...யு ஆர் கரக்ட்...அவளுக்கு சில விஷய்ம்லாம் நியாபகமில்லை..”
மீரா “யு மீன்?”
ரிஷி “அவள கடத்திட்டு போனது ரெண்டு நாள் அவள ரூம் உள்ளயே அடைச்சி வைச்சது மட்டும் தான் தெரியும்...அவளுக்கு நடந்த கொடுமைலாம் தெரியாது...”
மீரா “தாங்க் காட்”
ரிஷி “நொ...இது அவளுக்கு யாராச்சு சொல்லி தெரிய வந்தலோ இல்ல...அந்த நியாபகங்கள் நினைவுக்கு வந்தலோ இவ சுத்தமா நினைவிழந்துடுவா இல்ல கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பிருக்குனு டாக்டர் சொல்லிட்டு போனாங்க”

ரிஷி சொன்னதை கேட்டு அவள் சிலையென நின்றுவிட உள்ளே இருந்து ரம்யா தங்களை கவனித்துகொண்டு இருப்பதை உணர்ந்தவன் மீராவிடம் தட்டி உள்ளே அழைத்து சென்றான்.

ரிஷி “ஹாய் ரம்யா”
ரம்யா “ஹெலோ சார்”
ரிஷி “ஹவ் ஆர் யு நவ்?”
ரம்யா “அம் பிலிங் குட்...இவங்க”
ரிஷி “ம்ம்...இவங்க உன் லைஃப்’அ காப்பாதி கொடுத்தவங்க”

அவன் புன்னகையோடு சொல்ல அவள் தாவி வந்து மீராவை அனைத்துகொண்டாள்

ரம்யா “ரும்ப ரும்ப தாங்க்ஸ்”
மீரா “ஹேய் அது என் கடமை மா”
ரம்யா “ம்ம்...நேத்து நைட் ஃபுல்லா...ரிஷி சார் உங்கள பத்தி தான் சொல்லிட்டு இருந்தாங்க..”
மீரா “ம்ம்...”
ரம்யா “நீங்க ஜர்னலிஸ்’அ இல்ல கடவுளா இருந்து என்னோட லைஃப்’அ காப்பாத்தி இருக்கிங்க ரும்ப ரும்ப தாங்க்ஸ்”
மீரா “இட் ஸ் ஒகே ரம்யா”
ரிஷி “ம்ம்...நிங்க பேசிட்டே இருங்க நான் போய் டாக்டர்’அ பாத்துட்டு வரேன்”

ரிஷி மீராவிற்க்கு கண் ஜாடை காண்பித்துவிட்டு சென்றான்.

ரம்யா “நீங்க ரும்ப கிரேட் இவ்ளோ தைரியம் யார்க்கும் வராது...அந்த அஜய் கிட்ட மாட்டி இருந்தா... நீங்க அவ்ளோ தான்”
மீரா “அப்படியெல்லாமில்ல மா”
ரம்யா “ரிஷி சார் சொன்னாங்க உங்களுக்கு ஜர்னலிஸம் உயிர்னு”
மீரா “ம்ம்...”

மீரா அமைதியாக இப்படி துறுதுறு என்று இருக்கும் பெண்ணை எந்த கதிக்கு ஆலாகிவிட்டான் அந்த படுபாவி என நினைத்துகொண்டே ரம்யா கூறி கொண்டு இருந்ததை கேட்காமல் விட...அவள் அவளை உள்ளுக்கி கொண்டு இருந்தான்.

ரம்யா “மீரா மேம்....”
மீரா “ஆங்....சொல்லும்மா”
ரம்யா “என்ன மேம் நான் சொன்னத கேட்டதும் டிரிம் லாண்ட் போய்டிங்களா?”
மீரா “சாரி...என்ன சொன்ன?”
ரம்யா “சரியா போச்சு....உங்கள பத்தி பேசும்போது ரிஷி சார் கண்ணுல அப்படியே ஒரு ஸ்பார்க் வருதுனு சொன்னேன்...இப்போ கூட உங்கள பாக்கும்....அச்சசோ வாங்க”

ரம்யா கதவருகில் நின்றுகொண்டு இருந்த ரிஷியை கவனித்து கூற அவனுக்கு முதுகாட்டி அமர்ந்து இருந்த மீரா அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

மீரா ‘என் மானத்த வாங்கனும்னே கங்கனம் கட்டிட்டு அலையுறானா? எரும’
ரிஷி ‘ஐயோ இப்படியா என் முகத்துல எல்லாம் தெரியுர மாதிரி நடந்துக்குறேன்? இந்த மீரா’வால எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்’
ரம்யா‘அச்சசோ இப்படி உளறிட்டோம்மே..என்ன ரெண்டு பேரும் இப்படி முறைக்கிறாங்க’

மூவரும் மூன்று விதமாக மனதில் நினைத்துகொண்டனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அத்யாயம் 23



மூவரும் மூன்று விதமாக முழித்துகொண்டு இருக்க அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர் நம் நட்பு குழு.

ஆதி “என்ன மூணு பேரும் பேய பாத்த மாறி முழிச்சிட்டு இருகிங்க?”
ரம்யா “மேம்...யாரு இந்த பேய்?”

ரம்யா சிரியஸாக முகத்தை வைத்துகொண்டு கண்களில் குறும்பு மின்ன கேட்க ஆதியின் முகம் அஸ்டகோணலாய் மாறியது. அனைவரும் கொல்லென சிரித்துவிட மேலும் சோகமானவனை பார்த்து மதியின் முகமும் கும்பிவிட்டது.

மதி “அவன் ஒன்னும் பேய் மாதிரில்லாம் இல்ல ரம்யா”

கோபமான குரலில் கூறியவளை அனைவரும் திகைப்பாய் பார்த்தனர். இதுவரை கோப பட கூடிய விஷயத்திற்க்கு கூட கோப படாதவள் கேலிக்காக சொல்ல பட்டதற்க்கு கூட கோப படவே என்ன என்று அனைவரும் மதியை பார்க்க அவளோ எதுவும் கூறாமல் வெளியே வந்துவிட்டால்.

ஆதி “சாரி ரம்யா அவ ஏதோ பாட் மூட்ல இருந்தா போல”
ரம்யா “பரவால என்னால புரிஞ்சிக்க முடியுது அண்ட் சாரி”
ஆதி “ம்ம்...இருமா வரேன்”

ஆதி மதியின் பின்னாலேயே ஓட மீரா மட்டும் ஒரு இளம்புன்னகையுடன் நின்றுகொண்டு இருந்தால். அவள் பக்கத்தில் சென்ற ரிஷி

ரிஷி “அதியும் மதியும் லவ் பண்ணுறாகளா”
மீரா “ம்ம்...அது...இல்லயே”
ரிஷி “அப்படியா? ம்ம்....”
மீரா “எப்படி...ம்..ஏன் அப்படி கேக்குற”
ரிஷி “ஒன்னுமில்ல...”
வீரா “என்ன நடக்குது இங்க?”
மீரா “என்னடா?”
சித்து “அவ என்னமோ கோச்சிட்டு போறா ஆதி அவ பின்னாடியே போறான் இங்க நிங்க முனுமுனுனு உங்களுக்குள்ளயே பேசிக்கிறிங்க?”
மீரா “ஹெஹெஹெ ஒண்ணுமில்லயே”
வீரா “நம்பிட்டோம்”

அவர்கள் பேசி கொண்டே ரம்யாவையும் அறிமுக படுத்திவிட அனைவரும் அரட்டையில் இறங்க அங்கே

ஆதி “ஹெ மதி என்னாச்சு உனக்கு”
மதி “என்ன?”
ஆதி “ஏன் திடிர்னு கோவ படுற?”
மதி “அவ யாரு உன்ன பேச?”
ஆதி “அவங்க ஏதோ கிண்டலுக்கு சொன்னாங்கமா”
மதி “அது என்ன? பாத்த முதலே அவளோ அட்வான்டேஜ் எடுத்துகுறது?”
ஆதி “அவ என்ன தான சொன்னா? உனக்கு என்ன?”
மதி.“என்னது எனக்கு என்னவா? என் பிரண்ட் நீ உன்ன சொன்ன எனக்கு கோவம் வராதா?”
ஆதி “அப்படியா? இதே போல வீரா’அ இல்ல சித்து’வ சொல்லிருந்த என்ன பண்ணிருப்ப?”
மதி “ஹான்...அவங்களையும்...இல்...ம்ம்..”
ஆதி “சரி வா போலாம்”
மதி “இல்ல நான் வரல”
ஆதி “ஏன்?”
மதி “எனக்கு அவள பாக்கவே பிடிக்கல”
ஆதி “மதி எப்பவும் மெச்சுயுர்டா நடந்துக்குற நீயா இது?”
மதி “அப்படில்லாமில்ல”
ஆதி “வா மா...அவங்க தப்பா நினைச்சுபாங்கல?”
மதி “ம்ம்..”

முகத்தை தூக்கி வைத்துகொண்டு வரும் அவளை பார்க்க சிரிப்பாக வந்தது..அவனுக்காக மட்டு எடுத்துகொள்ளும் பாசத்திலும் அக்கறையிலும் அவன் நெகிழ்ந்து போனான் கூடிய சீக்கிரம் அவளை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் வரவே எகிறி குதித்தவன் சீட்டி அடித்துகொண்டெ அவள் பின்னால் சென்றான். உள்ளே இவர்கள் வந்ததும் ரம்யா அமைதியாகி விட மதி அவளிடம் சென்றவள் கிழே குனிந்துகொண்டே சாரி உரைத்தவள் அமைதியாக சென்று மீராவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

ரிஷி “சரி அப்போ நான் கிளம்புறேன்”
சித்து“ஏன் இப்போவே?”
ரிஷி “இல்ல அதான் நிங்களாம் வந்தச்சே மீரா’அ நிங்க பாத்துபிங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதான் கிளம்புறேன்”
மதி “இல்ல...”
ரிஷி “சாரிமா பாய் எவிரிஓன்”

யாரையும் பேச விடாமல் கிளம்பிவிட்டான் அவன் மொபைலில் வந்த செய்தியை பார்த்ததும்.