Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 316  (Read 2298 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 316

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline ShaLu


என்னுயிர் தோழியே..!!!
என் வாழ்வை அலங்கரிக்க வந்த தேவதை நீ
அர்த்தமற்ற வாழ்கையின் அர்த்தமாய் வந்தவள் நீ
என் இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர எனக்கென இருக்கும் என் உன்னத நட்பு நீ
என் கவலையின் மருந்து நீ சோர்வுக்கான தீர்வு நீ

என்னிடம் குறைகள் பல காண்பினும்
செல்லமாய் அதைத் திருத்தி என் வாழ்வை
சூரியன் போல் பிரகாசிக்கச் செய்தவள் நீ
தோல்வியால் துவண்டு இருக்கையில்
தோழி நானிருக்கிறேன் என்று தோள்கொடுத்தவள் நீ
வாழ்க்கை எனும் கடலில் தத்தளிக்கையில்
கலங்கரை விளக்காய் வந்து எனைக் கரை சேரச்செய்தவள் நீ

ஜாதிமத பேதம்பார்த்து பழகும்
மானிடர்களுக்கிடையில் பாகுபாடின்றி
நட்பொன்றே என் ஜாதி என்றுரைத்தவள் நீ
போலியான சொந்தங்களுக்கிடையில்
போலியற்ற உண்மையான சொந்தமாய்
கிடைத்தவள் என் அன்பு தோழி நீ
ஆணும் பெண்ணும் பழகினால்
காதலன்றி வேரோன்று மில்லை என்றெண்ணும் இச்சமூகத்தில்
நட்பிற்கிலக்கணமாய் நல் உவமையாய்
நட்பாய் இருக்க நட்பொன்றே போதுமென
இவ்வுலகை உணர வைத்தவள் நீ

இனிமையாய் மனதை வருடிச்செல்லும் தொலைதூர இன்னிசை பாடல் நீ
அரியக் கிடைக்கா பொக்கிஷம் நீ
பல்லாயிரம் விண்மீன்களுக் கிடையில்
ஒளிரும் முழுமதியாய்  நீ
இன்னொரு அன்னையாய் எனைத் தாங்க எனக்கென கடவுள் கொடுத்த வரம் நீ
எதையும் எதிர்பாராதது தாயன்பு என்பர் - அவ்வாறே என் தோழியின் அன்பும்
எதிர்பார்த்த தில்லை என்னிடம் எதையும்

உயிர்வாழ ஆக்சிஜன் எவ்வளவு
இன்றியமையாததோ
அங்ஙனமே என்னுயிர் வாழ இன்றியமையாதது
என் தோழி உந்தன்  நட்பு
கடவுளை நித்தமும் வேண்டிடுவென்
காலமதை என் தோழியவள்
கரம் பிடித்தே கடந்திட..!!!


« Last Edit: July 20, 2023, 02:09:29 PM by ShaLu »

Offline Minaaz

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 247
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பல சில்லறைகளை ஒன்று கூட்டி அதன் பெறுமதியை உணர்ந்தவுடன் அடையும் களிப்பின் உச்சத்திற்கு ஈடானது ஆண், பெண் நட்பு...

பேசி பழகியவுடன் உதிப்பதில்லை, பேசி பழகி புரிந்துணர்வுகள் தடம் பதிக்கும் போது தானாய் துளிர்விட்டெழுவதே நட்பு...

ஆண் பெண் நட்புக்குள் பாதுகாப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை, சண்டைகளும் ஓய்வதுமில்லை, நீ பெரிது நான் பெரிது என்ற பெருமைப் பேச்சுக்கு இடமும் இருந்ததில்லை...

சண்டைகள் பல வீர நடை போட்டாலும் அடுத்த நொடி சிறு புன்னகை கொண்டு துடைத்தெரியும் கலைதான் அந் நட்புக்குள் அழகு...

ஊரார் தூற்றினாலும் உள்ளம்தான் எண்ணங்களின் பிறப்பிடம் என வாதாடும் காட்சிகளும் அப்பப்போ நிகழ்வதுண்டு அதைத் தாண்டி ஆழமான நம்பிக்கைகளே அந் நட்புக்குள் கைகோர்த்து நிற்கும்..

பரிசுகள் எதிர்ப்பார்ப்பதில்லை, பாராட்டும் எதிர்ப்பார்ப்பதில்லை தன் முகத்தில் ஒளி வட்டமாய் காட்சியளிக்கும் களிப்பு எந் நொடியும் அமர்ந்திட வேண்டும் என்பதே இலக்கு...

கவலைகளின் காவலனாய், வரம்போரம் முளைக்கும் களைகளை அகற்றுவது போன்று தன்னுள் தவழ்ந்தாடும் கவலைகளை அகற்றும் ஆறுதலாய் என்றும் நிலைத்திருக்கும்..

வயதுகள் வரையறைகள் இல்லை, மதங்களையும் ஏற்றதில்லை, மாறுபாடுகள் பிறப்பதுமில்லை...

பல வண்ணங்கள் நிரப்பிய வானவில்லென வர்ணமயமாய் பரந்த வாழ்வில் சிறு பக்கமாய் ஒதுக்கப்பட்டிருக்கும் அன்பை நிலையாக்கி...

அதிக இனிப்பு தெகிட்டிவிடும் ஆனால் அக்கறையில் ஒவ்வொரு நாளும் தெகிட்டாது அதிகமென முன்னேறி பயணிக்கும் ஓர் மாயம் நிறைந்த வலை ஆண் பெண் நட்பு...

அன்னையின் தாலாட்டையும், தந்தையின் அரவணைப்பையும் தேடியோடும் பிள்ளைகளென நட்புக்குள் கலந்திருக்கும்...

இங்கு நட்பை நன்கு நல்லதாய் கணிப்பதால் ஆண் பெண் என்ற வேறுபாடு கண் முன் கலைந்திடுமே...

கரைகானா ஆழத்தில் அன்பை தொடர நட்பு எனும் ஆழ் கடல் முத்தால் அலங்கரித்திட வேண்டுமடா... நீயும் நானும் என...♥️!

Offline KS Saravanan

நட்பே உனக்காக..!

நட்பு பாராட்டினாய் என்னிடம்
நானும் நட்பு கொண்டேன் உன்னிடம்..!

உனதன்பின் அரவணைப்பில் மூழ்கவைத்தாய்
நானும் உச்சி குளிர்ந்து மூழ்கினேன்..!

பெற்றவை யாவையும் பல மடங்காக தந்தேன்
அதை நீ மதிக்க மறந்தாய்..!

தன்னடக்கம் என்று சமாதானம் கொண்டேன்
அதில் என் தன்னிலையை மறந்தேன்..!

காலங்கள் பல கடந்தன..!

காட்சிகள் இன்னும் மாறவில்லை
அனால், மாறியது தன்னடக்கம்..!

பாராட்டிய நட்பு இங்கே பாராமுகமாக இருக்க
வெப்பத்தின் விளிம்பில் நான்..!

உனது சுட்டெரிக்கும் செயல்களை எண்ணி
மனது தீக்குளிக்கின்றது..!

அடை மழையாலும் தணிக்க முடியாத
பாலைவன தீப்பிழம்பாய் மாறுகிறது..!

செல்லும் பாதை அறியாமல்
செக்கு மாடாய் நிற்கின்றேன்..!

நட்பில் புதியரொரு அனுபவம் எனக்கு
புதியதாக பிறந்தது..!

புதிய பாதையும் பிறக்குமென்று
கண்ணை மூடி நடக்கிறேன்..!

நினைவிலுள்ள கார்மேகங்களும் கரையுமா..?
கண் திறந்தால் உன் நினைவுகள் அழியுமா ..?

நட்பே, அழியும் நினைவை நீ தரவில்லை
அழியப்போவது நட்பும் இல்லை..!

மாற்றங்கள் பல இருந்தாலும், நட்பே
மாற்றிக்கொள்பவன் நானில்லை..!

இதை புரிந்துகொள்வாய் என நம்புகிறேன்
நட்பை புதுப்பிக்க ஏங்குகிறேன்..!

அழியா நினைவுகளுடன் என்றென்றும்
நான்..!

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

ஓயாத அவள் நேசம்
ஆழ்மனதில் புதைந்திருக்கும்
காதலை பொங்கி வழியசெய்யும்
சிறு சிறு கிறுக்கல்கள் கூட
கவிதையாய் ஒளிரும் !

பூச்சோலை கூட
வேண்டாம்
அவள் சிறு புன்னகை
போதும்
பூவாய் வாசம் தரும் !

விசிறி கூட
வேண்டாம்
அவள் தண்டட்டி அசைவு
போதும்
சிலுசிலுவென்று காற்று வீசும் !

மன்னிப்பு கூட
வேண்டாம்
அவள் மௌனம்
போதும்
என் கோபம் கரைந்து போகும் !

கேளிக்கை கூட
வேண்டாம்
அவள் அழும்புகள்
போதும்
என் பசியும் தூக்கமும் தோற்று போகும் !

நா(னும்) முத்துக்குமார்
போல் உணர்கிறேன்
என் தாய்கிழவி  என்றுமே
பேரன்பின் ஆதி ஊற்று .

எந்த ஒரு உறவிலும்
நேசம் நிஜமென்றால்
நாம் வாழும் வாழ்க்கை
ஒரு அழகான கவிதையே !



« Last Edit: July 21, 2023, 10:58:26 AM by சாக்ரடீஸ் »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கருவிழிகளில் நீர் ததும்ப நான் தேம்பியழ..
பாலர் பாடசாலையில் என் கரம் கோர்த்து..
அழாத நான் இருக்கிறேன் என நீ கூறும்போது
இருவருக்குமே வயது ஆறு..

வயதுடன் சேர்ந்து நம் நட்பும் சேர்ந்தே வளர்ந்தது..
உன் பிரிய உணவு என் உணவு பெட்டியில் இடம் பிடிக்குமளவு
இருகுடும்பமும் நம் நட்பினால் இணைந்திருந்தன

மதம், இனம் , மொழி என்ற எல்லா விரிசல்களும்
நம் நட்பெனும் பிணைப்பில் காணாமல் போயிருந்தன
உன் பண்டிகைகள் நானும் என் பண்டிகைகள்
நீயும் சேர்ந்தே கொண்டாடினோம்..

உன் முதல் காதல் கடிதத்தின் எடிட்டர் நான்..
உன் முதல் காதலின் தூது நான்..
உன் காதல் தோல்விகளின் ஆறுதல் நான்..
உன் இன்ப துன்பங்களின் முதல் வாசகி நான்..

கண் மூடி திறப்பதற்குள் கல்யாண வயதை எட்டியிருந்தோம்
திடீரென திருமண பேச்சுக்கள் என் வீட்டில் பலப்பட..
ஒரு நாள் பயத்துடன் கேட்டாய்..
"கல்யாணம் ஆனா பிரிஞ்சுடுவமா பேசாம நாம கல்யாணம் பண்ணிடலாமா?"
தாங்க முடியாத சிரிப்புடன் மண்டையில் தட்டி கூறினேன்
கருவாயா நம்ம நட்பை காப்பாத்த கல்யாணம் வேணுமாடா? என்று

இரு வேறு கண்டம் இருவரும் வாழும்போதும்..
இன்றும் நம் நட்பு வாழ்கிறது ..
அவ்வவ்போதான whatsapp பேச்சுக்களில் சுகநலம் பரிமாறுகிறோம்..
நம் நட்பை காப்பாற்ற கல்யாணம் தேவைப்படவில்லை..
திடமான மனமே தேவைப்பட்டது.. 
« Last Edit: August 04, 2023, 09:47:48 AM by Madhurangi »

Offline SweeTie

வானில்  கண் சிமிட்டும்  நட்சத்திரங்கள்
என்மீது  பொறாமை  கொள்கின்றன
உன் மடிமீது  நான் துயில்கையில்

கண்ணே  கவிதையடி  நீ எனக்கு !
உன் நீலோற்பழ  விழிகளுக்கு  ஈடாகுமா 
இந்த  நட்சத்திரக் கூட்டம் ?

பெண்ணே என் பெரும் சுமைகள் 
குறைந்து  போக நீயும்  ஒரு சாட்சி என்று
பேருவகை  கொண்டேன் 

சுகம் கண்டேனடி!  கண்ணாடி குவளையில்
 நிரம்பிய பழரசத்தை  இருவரும் ஒரு குழாயில் 
மாறி மாறி    உறிஞ்சிக்  குடிக்கையில் 

நீ வரும்  வழி நெடுக பூத்திருக்கும்
அந்த  மல்லிகை  மலர்களின்  வாசனையை 
மிஞ்சிவிடும்  உன் மேனியின்  நறுமணம்   

தித்திக்கும் தேனுக்கும்   மேலான உன் குரல்
நித்திரையில்  கிடக்கும் என்னை 
தட்டி எழுப்புவதில்  எத்தனை இன்பம்

குரல்  எவ்வாறு தட்டி எழுப்பும் என கேட்கிறாயா?
அலாரத்தில்  இருப்பது உன் குரல்தானே
என்  பொன்மகளே

அந்தி மாலையில்  சிந்தும் உன் புன்னைகை
ஆரா அமுதம்  என்பேன்   ....நீயோ 
அத்தான்  பருகுங்கள் என்று அமுதத்தை நீட்டுகிறாய்

உன் கண்களில்  வழியும்  காதல் அமுதத்தை
தினமும்  பருக நான்    துடிப்பதை  அறிந்தும் 
அறியாதவள்போல்   நடிப்பதில் நீ கதாநாயகியடி 

காதலை  பகிர்ந்து கொள்ளும்  நம் விழிகள்
அதில் தெரியும்  ஆயிரம்  அர்த்தங்களுக்கு
விடைதெரியாமல் தவிக்கும்  நம் இதழ்கள்     

தத்துதிமித்தா   போடும்  நம் கை  விரல்கள்
இணைப்போமா   வேண்டாமா  என பதறும்
நினைவுகளைக்   கட்டிப்போடும் மனம்கள்

உறங்கி கிடக்கும்  நம் காதலின் கறைகள்
இதயத்தில்   புரியாத  இன்பத்தின்  ஆணிவேர்கள் 
என்றுமே  அழியாத   இனிய  வலிகள்

அர்த்தமில்லா   என் வாழ்க்கைக்கு  அடிநாதமாய்
 நானிருக்க பயமேன்  என்று
தட்டிக்கொடுத்தவள் அல்லவா நீ !

உன் தோளோடு   தலைசாய்க்கையில்   
என்  கவலைகள்  மறந்து 
உன்னுள்  நான்  காணாமல்  போகிறேன்

சோர்ந்துபோன  இதயம்  மீள்நிரப்படைந்து 
நீளாதா   இக் கணங்கள் என ஏங்குவதை
எப்படி  நீ  அறிவாய் ?

உன் காதல்  எனக்கு தேனோடு கலந்த தெள்ளமுதம்
காதலின்  தீபமாய்  காலமெல்லாம் ஒளியேற்ற
நீ வேண்டும்   என்றும்    என்னோடு !!!
 

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 810
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
"உனக்கு ஒரு துன்பம் நேருகையிலே துடிக்கும்  நெஞ்சம் நான் தானே .
நீ ஒரு வெற்றி காண்கையிலே   மகிழ்ச்சியில் குதிப்பதும் நான் தானே ! "
(original credits to song lyricist)

இந்த பாடல் நம் நட்புக்கு ஒரு கீதம் ஆகி விட்டது .

என் வாழ்க்கையில் கேட்காத ஒரு வரம்
உன் ரூபத்தில் எனக்கு கிடைத்தது
என் கஷ்டத்திலும்
என் இன்பத்திலும்
நீ இருந்தாய் ! எப்போதும் இருப்பாய் !

என் ஒரு வார்த்தை வைத்து தெரிந்து கொள்வாய்
என் மனநிலையை
என் மனவலியை
என் மௌனத்தை கூட ஏற்றுக்கொள்வாய்
ஏதும் ஒரு கோபம் இல்லாமல் .
மறுபடியும் பேசினால்
ஒரு துளி பாசமும் குறையாமல்
ஏந்திக்கொள்வாய் என்னையே .

என் வாழ்க்கையின் குழப்ப நிலையில்
மண்டையில் கொட்டி
என்னை கையில் பிடித்து
வழி காட்டினாய் சில நேரம்

ஆனா நீயே நீச்சல் பழகிக்கோ
என்று தண்ணிக்குள்
தள்ளி விட்ட நிகழ்வு தான் அதிகம் .
நான் நீந்தி வருகிறேன் .
கரையில் நீ நிட்பாய் என நம்பிக்கையில் .

நம் நட்புக்கு அங்கீகாரமா
நீ என்னை உன் திருமணத்துக்கு
சாட்சியாய் தேர்வு செய்தாய்
அதில் நான் பெரும் பெருமை கொள்கிறேன்

வயதால் நான் மூப்பு என்றாலும்
மனதால் நீயே என்னை விட மூப்பு .

உன்னை விட என்னை புரிந்தவனும் இல்லை
என்னை விட உன்னை புரிந்தவளும் இல்லை
இவ்வுலகில்.