Author Topic: நூறு பசுக்கள்.  (Read 2876 times)

Offline Anu

நூறு பசுக்கள்.
« on: May 21, 2012, 08:08:59 AM »
ஒரு ஊரில் அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது. அந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது. அதில் பால் கறந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தான். மிஞ்சியதை வியாபாரம் செய்தான். சந்தோஷமாக வாழ்ந்தான். ஆனால் 99 பசுக்களை வைத்திருந்த அவனுடைய அண்ணன் சந்தோஷமாக இல்லை. அவன் எப்படியாவது இந்தப் பசுக்களை நூறாக மாற்றிவிடவேண்டும் என்ற கவலையிலேயே இருந்தான். அதற்காக தம்பியைப் பார்க்க வந்தான்.

"தம்பி, உன்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு பசுதான். திடீர்ன்னு அது தொலைந்து போனால் நீ என்ன செய்வாய்..? நீ ஒரு பசுவை வைத்திருப்பதும், பசுவே இல்லாம இருக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான்! என்கிட்ட இன்னும் ஒரே ஒரு பசு இருந்தாப் போதும், நூறு பசுக்களுக்குச் சொந்தக்காரன்னு ஊர்ல எல்லோரும் என்மேல பெரிய மரியாதை செலுத்துவாங்க. இல்லையா..?"

"ஆமாம்ண்ணா.. வேணும் என்றால், நீ என்னோட பசுவை எடுத்துக்கொள்..!" என்றான் தம்பி.

(இது திபேத்தியர்களின் கிராமியகதை. நம்மிடம் நிறைய இருந்தால், மனது இன்னும் நிறைய வேண்டும் என்று விரும்பும், குறைவாக இருந்தால், அதையும் விட்டுக் கொடுத்து விடுவதற்குத் தயாராக இருக்கும்.! அந்த மனதுதான் உயர்ந்தது என்பதற்கு அவர்கள் கூறும் கதை


Offline Yousuf

Re: நூறு பசுக்கள்.
« Reply #1 on: May 23, 2012, 10:46:33 PM »
Quote
(இது திபேத்தியர்களின் கிராமியகதை. நம்மிடம் நிறைய இருந்தால், மனது இன்னும் நிறைய வேண்டும் என்று விரும்பும், குறைவாக இருந்தால், அதையும் விட்டுக் கொடுத்து விடுவதற்குத் தயாராக இருக்கும்.! அந்த மனதுதான் உயர்ந்தது என்பதற்கு அவர்கள் கூறும் கதை

நிதர்சனமான உண்மை அணு அக்கா!

பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி!

Offline Anu

Re: நூறு பசுக்கள்.
« Reply #2 on: May 24, 2012, 11:19:53 AM »
Nandri. kathaiku ninga thara quotes kooda romba nalla iruku yousuf :)


Offline Yousuf

Re: நூறு பசுக்கள்.
« Reply #3 on: May 24, 2012, 11:58:28 AM »
நன்றி அணு அக்கா!