Author Topic: ஒரே நேரத்தில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்பு காணப்படுமா?  (Read 2809 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

உலகில் ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறந்தாலும் அவற்றிற்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்புகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் நவாம்சம், தசாம்சத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இதேபோல் அந்தக் குழந்தைகளின் கைரேகையைக் கொண்டும் மிகத் துல்லியமான மாற்றங்களை கண்டறியலாம்.

சில நொடி இடைவெளியில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு கூட ஜாதகத்திலும், கைரேகையிலும் வித்தியாசம் இருக்கும். ஜோதிட ரீதியாகப் பலன் சொல்வதற்கு முன்பாக ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை மட்டுமல்ல, இடத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என பண்டைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பல குழந்தைகள் பிறந்தாலும் அவர்களின் ஜாதக அமைப்பில் மாற்றம் இருக்கும் என்பது ஜோதிட விதி. அட்ச ரேகை, தீர்க்க ரேகை போன்றவை ஜாதகம் கணிப்பதற்கு மிக முக்கியமாகும்.

உதாரணமாக வெவ்வேறு தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளில் ஒன்று மருத்துவமனையிலும், மற்றொன்று வீட்டிலும், 3வது குழந்தை வயல்/தோட்டப் பகுதியிலும் பிறக்கின்றன என வைத்துக் கொண்டால், அந்தக் குழந்தைகள் வெவ்வேறு கிரகங்களின் ஆளுமைக்கு உட்படுகின்றன.

இதில் மருத்துவமனை செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் வருவதால் அங்கு பிறந்த குழந்தைக்கு செவ்வாயின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். அடுத்ததாக சுக்கிரனின் ஆதிக்கத்திற்குள் குடியிருப்புகள் வருவதால் அங்கு பிறக்கும் குழந்தைக்கு சுக்கிரன் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும்.

மூன்றாவதாக வயல்/தோட்டம் உள்ளிட்ட கரடு முரடான பகுதிகள் சனியின் கட்டுப்பாட்டில் வருவதால், அங்கு பிறக்கும் குழந்தைக்கு சனியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும். இதே போல் பிரயாணத்தின் போது பிறக்கும் குழந்தைகளுக்கு ராகு/கேதுவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.

ஒரே நேரத்தில் பிறந்தாலும், கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அவர்களின் வாழ்க்கையில் மாறுதல்கள் காணப்படும்.

இங்கே மற்றொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். எந்த ராசிகள் (பெற்றோர்) சேர்ந்து இந்த (குழந்தை) ராசி உருவானது என்பதையும் கணிக்க வேண்டும். உதாரணமாக மேஷம், ரிஷபம் சேர்ந்த கடகம் பிறந்திருக்கிறதா அல்லது மிதுனம், சிம்மம் சேர்ந்து கடகம் வந்ததா என்பதையும் கருத்தில் கொண்டால் ஒரே நேரத்தில் பிறந்த ஜாதகர்களிடம் உள்ள மாற்றத்தை கணிக்க முடியும்.