Author Topic: உலக விலங்குகள் தினம்  (Read 1003 times)

Arul

  • Guest
உலக விலங்குகள் தினம்
« on: October 04, 2013, 01:42:37 PM »
விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. உலகில் பல வித விலங்குகள், நமக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது; அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்., 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "அனிமல்' என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து உருவானது.

இத்தாலியைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது. விலங்குகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகள், பாலூட்டி வகையை சேர்ந்தவை. சில விலங்குகள் உணவுக்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை "ஊன் உண்ணிகள்' என அழைக்கப்படுகின்றன.

அழியும் புலிகள்:

புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகமாக பெருகி காடுகளின் வளம் குறையும். இதனால் தான் புலிகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. புலிகளில் பல இனங்கள் அழிந்து விட்டன. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே தற்போது புலிகள் வாழ்கின்றன.

எப்படி காப்பாற்றுவது:

விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று பிண்ணிப் பினைந்துள்ளன. சில விலங்குகள் கடல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைத் தான் வாழ்வாதாரமாக கொண்டுள்ளன. இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது; விலங்குகள் வேட்டையாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இயற்கை வளம் சீராக அமையும். இது அனைவருடைய கடமை.