Author Topic: கின்னஸ் சாதனை புத்தகம் வரலாறு  (Read 3409 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உலகத்தில் இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் சாதிக்கத் துடிக்கும் அதீத ஆர்வத்தை தினம்தோறும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதனை வெறும் வார்த்தைகளில் மட்டும் நின்று போகாமல் இந்த உலகத்தில் மனிதன் வாழும் வரை நிலைத்திருக்கும் அளவிற்கு சாதனைகளின் பொக்கிஷமாக ஒரு புத்தகம் உருவாக்கி வைத்தார்கள் நம் முன்னோர்கள் அதுதான் கின்னஸ். நம்மில் அனைவரும் இந்த சாதனை சிகரத்தை எட்ட முடியாமல் போனாலும் இந்த புத்தகம் யாரால் எப்பொழுது உருவாக்கப் பட்டது என்பதைப் பற்றியாவது தெரிந்துகொள்ளலாமே ஆர்வத்தின் முடிவுதான் இந்தப் பதிவு என்று சொல்லலாம் .

கின்னஸ் புத்தகம் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நதிக்கரையில் தோன்றிய ஆச்சரிய சந்தேகத்தில் விதை ஊன்றப்பட்டதுதான் இந்த கின்னஸ் புத்தகம் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..!அயர்லாந்து நாட்டை சேர்ந்த ‘சர்க்யூ பீவர், என்பவர்தான் இந்த கின்னஸ் புத்தகத்தை உருவாக்க வி(தை )டை தேடியவர் என்று சொல்லலாம் . பலருக்கு இவர் யார் என்ற சந்தேகங்களும் வாசிப்புடன் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கக் கூடும் அதையும் சொல்லிவிடுகிறேன்.
அயர்லாந்து நாட்டில் இருந்து கின்னஸ் வாட் என்ற சாலையின் நிர்வாக இயக்குனராக இருந்தவர்தான் இந்த ‘சர்க்யூ பீவர், என்பவர் .இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில்  வேட்டைக்கு செல்வது வழக்கம் . இப்படித்தான் அன்றையப் பொழுதும் நதிக்கரை ஓரமாக வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஏதோ ஒரு தங்க நிற ஒளியுடன் வானத்தில் வரிசையாக ஒரு கூட்டம் தன்னை நோக்கி வருவதை அறிந்தார் சற்று நேரம் செல்ல செல்ல அவை ஒரு பறவை இனம் என்று அறிந்த பீவர் அந்த பறவைகளில் ஒன்றை வேட்டையாட எண்ணி தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து நிமிர்ந்து பார்த்தபோது அந்த பறவை கூட்டம் பார்வைகளுக்கு எட்டாத தூரத்தில் எங்கோ சென்றிருந்ததாம் .
அப்போது இவரின் மூலையில் தோன்றிய அந்த சந்தேகம் உலகத்தில் மிகவும் வேகமாக பறந்து செல்லக் கூடிய பறவை இனம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற ஆச்சரியம்தான் இன்று உலகத்தில் பல உயிர்களையும் பொருட்படுத்தாமல் சாகசங்கள் நிகழ்த்தி இடம்பெறத் துடிக்கும் இந்தக் கின்னஸ் புத்தகத்தை ஏற்படுத்தியது என்றால் பார்த்துகொள்ளுங்கள். அன்று அவரையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்ற பறவைகளின் பெயர் கோல்டன் ப்ளவர் என்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்தான் அவருக்கே தெரிய வந்ததாம். தான் ஒருவனாக இந்த ஆச்சரியம் குவிந்த புத்தகத்தை உருவாக்க இயலாது என்று உணர்ந்த பீவர், அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.




தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். இன்னதக் கின்னஸ் புத்தகத்தின் சிறப்பைபோலவே இதில் சில மர்மங்களும் மறைந்திருக்கிறது கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளியிடவில்லை இதற்க்கானக் காரணங்கள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த சாதனை புத்தகம் இன்று நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் வெளிவருகிறது. இதில் இன்னும் மிகவும் வியப்பிற்குரிய தகவல் என்னவென்றால் ஐக்கிய அரபு நாடுகளின் போது நூலகங்களில் இருந்து இந்தப் புத்தகங்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக திருட்டு போகிவிடுவதாக அந்த அரசாங்கங்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தில் புதைந்து கிடக்கும் ஆச்சரியத்தின் ஆர்வத்தை .



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்