FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: செல்வன் on July 13, 2011, 02:05:57 AM

Title: கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்
Post by: செல்வன் on July 13, 2011, 02:05:57 AM
நாம் புதிதாக கணினி வாங்கிய போது இருந்த வேகத்தை விட தற்போதைடய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்

1.  கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள்.
 2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.

3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5) 

4.  Desktop இல் நிறைய Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை எடுத்துக் கொள்கிறது.

5.  அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.

6.  Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.

7.  மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.

8.  AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள். 

9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க் -இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின் வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.
Title: Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்
Post by: Global Angel on July 13, 2011, 05:44:51 AM
nice selvan.. en lappy ku ennaguthunu etho koncham purinchaa poola eukku.. THANKS selvan..nam friendsku piriyosanamulla nalla thagavalkal kodutherukireenga.. thodanthum ipadiyana thagaval pariatangalai unkalidamirunthu ether paarkirom  :D
Title: Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்
Post by: Anu on July 14, 2011, 08:53:25 AM
பயனுள்ள தகவல் செல்வன்..பகிர்ந்தமைக்கு நன்றி
Title: Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்
Post by: suresh on July 15, 2011, 10:52:25 AM
very informative... thx for sharing...