வணக்கம் மக்களே ,
போட்டி போட்டு சிறப்பா இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Tinu & மண்டகசாயம் and தன தனித்துவமான Bgm மற்றும் editing மூலம் நிகழ்ச்சியை மெருகேற்றும் Tejasvikku என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ரொம்ப நாள் அப்புறம் IT கு முதல் பதிவு செய்ய முடிஞ்சது மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் நான் தெரிவு செய்த பாடல்
திரைப்படம் : பீமா
பாடல் : எனதுயிரே எனதுயிரே..
பாடகர்கள் - sadhana sarkam , chinmayi மற்றும் nikil mathew
வரிகள் : யுகபாரதி
இசை அமைப்பாளர் : Haris Jeyaraj
தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச 2 songs சொல்லுன்னு கேட்டா கூட நான் கண்டிப்பா இந்த பாடல் சொல்லுவன். பல போராட்டங்களுக்கு அப்புறம் ஒன்றாக சேர்ற காதலர்களின் கண்ணீர் கலந்த சந்தோசத்தின் வெளிப்பாட்டை இந்த பாடலை விட அருமையா இன்னொரு பாடலால் வெளிப்படுத்த முடியுமா னு தெரியல.வரிகள், பின்னணி இசை , பாடங்களின் குரல் வளம் , காட்சியமைப்பு , நடிகர்கள் னு perfect musical treat இந்த பாடல். இதுல எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்
இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளறலும் எனக்கு இசை
இந்த பாடலை இந்த பாடல் பிடிச்ச எல்லாருக்காகவும் நான் dedicate பண்றேன்.