FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on January 16, 2024, 03:04:38 AM

Title: ❤️❤️ நிரந்தரம் ❤️❤️
Post by: VenMaThI on January 16, 2024, 03:04:38 AM


எதுவும் நிரந்திரம் இல்லை

அன்பும் நிரந்திரமில்லை
அழுகையும் நிரந்திரமில்லை...
இன்பமும் நிரந்திரமில்லை
இம்சையும் நிரந்திரமில்லை....
சிரிப்பும் நிரந்திரமில்லை
சிக்கலும் நிரந்திரமில்லை...
இளமையும்  நிரந்திரமில்லை
வறுமையும் நிரந்திரமில்லை...
வளர்ச்சியும் நிரந்திரமில்லை
வீழ்ச்சியும் நிரந்திரமில்லை..
காதலும் நிரந்திரமில்லை
காமமும் நிரந்திரமில்லை..
பெற்றோரும் நிரந்திரமில்லை
உற்றாரும் நிரந்திரமில்லை...

வாழ்க்கையும் நிரந்திரமில்லை
வாழும் இந்த நொடியைத்தவிர....



☺️☺️☺️☺️

]
Title: Re: ❤️❤️ நிரந்தரம் ❤️❤️
Post by: Vethanisha on January 16, 2024, 08:36:40 PM
நிரந்திரமில்லா
இந்த வாழ்க்கையின் நிரந்திரம்
மாற்றம் ஒன்றே 😎

மாற்றங்களோடு ஒன்றினைவோம்
வாழும் ஒவ்வொரு நொடியையும்
 இரசித்து வாழ்வோம் - வா என் 
அன்பு தோழியே ❤️
Title: Re: ❤️❤️ நிரந்தரம் ❤️❤️
Post by: Ishaa on January 17, 2024, 05:50:01 PM
வாழ்க்கையும் நிரந்திரமில்லை
வாழும் இந்த நொடியைத்தவிர....
-- sariya soneenga sis 😇

நிரந்தரம் என ஏதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
இருந்திடும் வரை போராடலாம்
எரிமலையிலும் நீராடலாம்
- Song lyrics

Sis unga kavithai vasicha appuram inthe song my mind'layae stuck achu sis. Especially this line. Netraikkum indaikkum oru 100 vathi keddu irupen🙈