Author Topic: ~ வெஜிடபிள் பக்கோடா ~  (Read 117 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வெஜிடபிள் பக்கோடா ~
« on: July 13, 2016, 10:38:00 PM »



தேவையான பொருட்கள்

மேல் மாவிற்கு
கடலை மாவு – 1 கப்
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
காய்கறிகள்
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது – 1 – 2
உருளைக்கிழங்கு 1 /4 ” அளவு நறுக்கியது – 1
மல்லித்தழை பொடியாக நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
காளிபிளவர், சிறிய பூக்களாக பிரித்துக் கொள்ளளவும் – 1 சிறியது
பசலைக்கீரை இலைகள் – 1
வெங்காயம், இரண்டாக அரிந்து நீளமாக வெட்டிக் கொள்ளவும் – 1 1 /2 கப்

செய்முறை

நறுக்கிய உருளைக்கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்.
மேல் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து மிக்சியில் 2 -4 நிமிடங்கள் வரை அடித்துக் கொள்ளவும். மாவை
1/2 மணி நேரம் வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும்.
காய்கறிகளை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். மாவில் சிறு சிறு பகுதியாக எடுத்து எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும் (ஒரு கல் பக்கோடா பொரிப்பதற்கு 4 – 6 நிமிடங்கள் வரை ஆகும்).
புதினா சட்னி அல்லது மல்லி சட்னியுடன் பரிமாறவும்.