Author Topic: தீபம் ஏற்றும் திசையும், எண்ணிக்கையும்  (Read 1672 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தீபத்தை தினமும் ஏற்ற வேண்டும். இருளை போக்கி ,வெளிச்சத்தை தரும். வெளிச்சம் என்பது நம் கஷ்டங்கள் நீங்குவது, சுகம் உண்டாவது, செல்வம் பெருகுவது என்று பல பொருள் உண்டு. எதையும் விளங்கச் செய்வது என்று பொருள்படவே விளக்கு என்று பெயரிட்டனர் ஆன்றோர்.
குத்துவிளக்கின் அடிப்பகுதி பிரம்ம அம்சம், நடுப்பகுதி விஷ்ணா அம்சம், மேல் பகுதி சிவ அம்சம், ஜோதி மூன்று தேவியர்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதியின் அம்சம். அதன் திரி பிந்துவாகவும், ஊற்றப்படும் எண்ணெய் நாதரூபமாகவும் உள்ளது.
தினமும் சிறிய விளக்கையாவது ஏற்ற வேண்டும் .அவ்வாறு ஏற்றும் போது ஜோதியின் திசைக்கேற்ப பலன்கள் மாறுகிறது.
கிழக்கு திசை ----மக்களிடையே நன்மதிப்பு ஏற்படவும், துன்பங்கள் நீங்கவும் ஏற்ற வேண்டும்.
மேற்கு நோக்கி ஏற்றுவது---கடன் தொல்லை நீங்கி ,சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
வடக்கு குபேர திசை ,அத்திசை நோக்கி ஏற்றுவது சகல வளமும், செல்வமும் கூடும்.
தென் திசை எமனின் திசை , இறந்த முன்னோர்களுக்காக சிரார்த்த காலத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் ஏற்றுவது பாவம் சேர்க்கும். பிரம்மஹத்தி தோஷத்திற்கு நிகரானது.

பயன்படுத்த ஏற்ற திரிகள்
பஞ்சுத் திரி-- அனைத்துவித நன்மைகளும் தரும்.
தாமரைத் தண்டு திரி-- செல்வ வளம் சேர்க்கும். மகாலட்சுமிக்கு உகந்தது.
வாழை த்தண்டு திரி--- குழந்தைப் பேறு தரும். ஆரோக்கியம் தரும்.
வௌ்ளெருக்கு திரி--- செய்வினைகள் நீக்கும். தம்பதிகளுள் ஒன்றுமை கூடும்.
புது மஞ்சள் துணியில் திரி--- திருமணத்தடை நீக்கி, கல்யாண பாக்கியம்
தரும்.
புது வௌ்ளை துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கிட--- அனைத்து வித கஷ்டங்களும் நீங்கி குல தெய்வத்தின் அருள் கூட்டும்.

தீபங்களின் எண்ணிக்கை
ஒரு விளக்கு ஏற்றுதல் கூடாது.
2 விளக்கு ஏற்ற சௌபாக்கியம் கிட்டும்.
4 விளக்கு ஏற்ற குடும்பத்திற்கு சகல நன்மைகளும் ஏற்படும்.
9 விளக்கு ஏற்ற நவகிரக தோஷம் நீங்கும்.
11 விளக்கு ஏற்ற திருமண பாக்கியம்.
18 விளக்கு ஏற்ற சித்தர்களின் அருள் கிடைக்கும். மந்திர சித்தி ஏற்படும்.
21 விளக்கு ஏற்ற மூன்று தேவியரும் வசமாவார்கள்.
48 நாட்கள் 21 விளக்கேற்றி வழிபடுவார்கள் யோகத்தில் வித்தகனாகி, அஷ்டமா சித்திகளும் தேவியின் அருளால் கிட்டும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்