பணி முடிந்தது வீடு வருகிறேன்
கூறி அரை நாழியானது
எங்கே அவர் !
அடிக்கடி வாசலை நோக்கி
நடந்து நடந்து களைத்தன கால்கள்
நகரும் உருவங்கள் அனைத்தும் அவரோ
என தேடி தேடி களைத்தன விழிகள்
வரட்டும் வரட்டும் என செல்லமாய்
சிணுங்கி கொண்டன இதழ்கள்
சட்டென்று வருடியது ஒரு தீண்டல்
பின்னிருந்து என் விழிகளை ஒரு கை மூட
என்னவனின் ஸ்பரிசம் 🌹
பஞ்சாய் கரைந்தது மனம்
முகத்தில் மட்டும் சிறு போலி கோபம்
'என்னவாம்' என கேட்டுத்தான் வைத்தேன்
மன்னிப்பாயா என அவர் வினவ
அடுத்த பத்து நொடி அமைதி
என்னை பாடாய் படுத்த
மன்னிப்பா
அதிகம் நச்சரிக்கிறாய்
இனி நீ வேண்டாம் என சொல்வாரோ ..
அதிகம் பேசுகிறாய்
இனி நம்மிடையிடையே பேச்சு
வார்த்தை இல்லை என சொல்வாரோ ..
நிம்மதி வேண்டும்
உன் அன்னை வீடு செல் என்பாரோ ..
உன் மீது ஈர்ப்பு போனது
புது துணை வேண்டும் என சொல்வாரோ..
இனி நீ எனக்கு தேவையே இல்லை
என சொல்லித்தான் விடுவாரோ ..
உள்ளே எண்ண அலைகள் என்னை கொன்று குவிக்க
இதய துடிப்பு இமய மலையையும் தாண்டி எகிற
"தாமதம் ஆனது அன்பே அதனால் ஒரு மன்னிப்பு
என் அன்பு மனைவிக்கு சிறு அன்பளிப்பு "
சாந்தமாய் அவர் தொடர
வயிற்றில் பாலை வார்த்தாய் என் இறைவா !
புயலாய் வெளியேறியது பெருமூச்சு !
அன்பளிப்பா
வாசமிகு மலரோ
அன்று கேட்ட சுடிதாரோ
புதிதாய் வந்த கைபேசியோ
மாமா கடை பிரியாணியோ
எனக்கு பிடித்த இன்னடோ
இல்லை வெறும் ஏப்ரல் "fool" oh
என மனம் மீண்டும் எதையோ நினைக்க
என் கையில் அழுத்தினார்
அழகான இளம்சிவப்பு பெட்டி
வசீகரமாய் சிரித்தது உள்ளே
விலைமதிப்பில்லா மெட்டி
கண்களின் கண்ணீரை துடைத்து கொண்டு
நாணத்தோடு அவரை நோக்க
இன்னும் கோபமா.. அடியே !
ஏன் ஒன்றும் பேச வில்லை என்றவரிடம்
"Nothing" என்றபடி இறுக கட்டியணைத்தேன்
இந்த பெண்களின் நொதிங் (Nothing) யை புரிந்தவர்
இன்றும் உலகத்தில் யாருமில்லை
என்றபடி கன்னத்தில் இட்டார் மீண்டும் ஒரு பரிசை ❤️
VethaNisha.M