தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

முரண்பாடுகள்

(1/1)

thamilan:
இந்த உலகத்தை படைத்த இறைவன் ஏன் துன்பதை படைத்தான் என்று கேட்கிறார்கள். மனிதன் இன்பத்தை முழுமையாக அறிந்து கொள்ளவே இறைவன் துன்பத்தை படைத்தான்.

துன்பம் என்ற ஒன்று இல்லாவிட்டால், இன்பம் என்ற ஒன்றை எப்படி அறிவது? இருள் என்று ஒன்று இல்லையென்றால் வெளிச்சத்தை எப்படி அறிந்து கொள்வது?

இன்பத்தின் சுவை துன்பத்தில் தெரிகிறது. வெளிச்சத்தின் மகிழ்ச்சி இருளால் உண்டாகுகிறது.

இந்த உலகம் முரண்பாடுகளால் ஆனது. அதனால் தான் அது சுவையுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இரவும் பகலும் கண்ணாமூச்சி ஆடுகின்றன. நாள் பிறக்கிறது.
எதிரும் நேரும் இணைகின்றன, மின்விளக்கு எரிகிற‌து.

ஆணும் பெண்ணும் இணைகின்ற‌ன‌ர், வாழ்க்கை பிற‌க்கிற‌து.

தொட‌க்க‌ம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்றிருக்கும்.
பிற‌ப்பு என்று ஒன்றிருந்தால் இற‌ப்பு என்று ஒன்றிருக்கும்.

விழிப்புக்கு ச‌க்தியூட்ட‌த்தான் உற‌க்க‌ம். உற‌க்க‌த்தை சுக‌மாக்க‌த்தான் விழிப்பு.

வாழ்க்கைக்கு ஆர்வ‌ம் ஊட்டத் தான் ம‌ர‌ண‌ம்.

வச‌ந்த‌த்தை கொண்டாட‌த் தான் இலையுதிகால‌ம்.

வாலிப‌த்தை அனுப‌விக்க‌த் தான் வ‌யோதிப‌ம்.


வெயில் இல்லை என்றால் நிழ‌லின் அருமை எப்ப‌டித் தெரியும்?

நோய் தான் ந‌ல‌த்தின் இன்ப‌தை உண‌ர்த்துகிற‌து
.
பிரிவு தான் கூட‌லில் ப‌ர‌வ‌ச‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

முட்டாள் தான் அறிஞ‌னை உய‌ர்த்துகிறான்.

அடிமைத்த‌ன‌ம் தான் விடுத‌லையின் ஆன‌ந்த்த‌த்தை உண‌ர்த்துகிற‌து.

ந‌ர‌க‌ம் தான் சொர்க்க‌த்தை அர்த்த‌ப்ப‌டுத்துகிற‌து.

முர‌ண்க‌ள் இர‌ட்டைபிற‌விக‌ள். ஒன்றில்லாவிட்டால் ம‌ற்ற‌து இல்லை.

Yousuf:
மிகவும் சிறப்பான பதிவு தமிழன் மச்சி...!!!

உங்கள் பதிவுகள் தொடரட்டும்...!!!

thamilan:
நன்றி யூசுப் மச்சி

Global Angel:
உண்மைதான் முரண்பாடுகள்தான் நமக்கு சிலதை புரிய வைக்கிறது ....  நல்ல பதிவு தமிழன் .. ;)

Navigation

[0] Message Index

Go to full version