Author Topic: நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.  (Read 854 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் வாழும் அனேகமான தமிழ்க் குழந்தைகள் தமிழை படித்து வரும் இன்றைய நாளில், தமிழ் நாட்டில் உள்ள குழந்தைகள் ஆங்கில மூல கல்வி என்று தெரிவித்து தமிழை பேச வெட்கப்பட்டும் சரியாக தெரிந்து கொள்ளாமலும் தவறான உச்சரிப்பிலும் வாழும் இந் நாளில், பல இன உணர்வாளர்கள் இந்த அவல நிலையை எடுத்துரைத்தும் கூட பல பெற்றொர்கள்  தமிழை படிப்பது கேவலம் என எண்ணுவதை நாம் காண்கிறோம்.சமீபத்தில் இரண்டு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரிலேயே இந்த அவல நிலையை கண்டோம்.

இந்த இணையம் தமிழில் இருப்பதால் உங்களுக்கு தமிழ் நன்றாகவே தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் மிக சுலபமான சில கேள்விகள். 80 % திற்கு மேல் மதிப்பெண்கள் கிடைத்தால் நீங்கள் தமிழர்கள் தான் என்பதை குரலை உயர்த்தி சொல்லுங்கள்.இல்லையேல் சிறிது கற்றுக் கொள்ளுங்கள். எனது புதுவருட பொங்கல் விடுமுறையின் போது தமிழ் நாட்டில் இருந்த போது, ஆங்கில மொழிக் கல்வி பெறும் மாணவர்களிடம் பொழுது போக்காக கேட்கப்பட்ட கேள்விகள் தான் இவை.ஆனால் கிடைத்த பதிலோ....?

1.புகழுக்காக இன்று அனைவரும் அலைகிறார்கள்.இந்த புகழுக்கு எதிர் சொல் என்ன?

2.திருக்குறள் எந்த எழுத்தில் தொடங்கி எந்த எழுத்தில் முடிவடைகிறது?

3.மலர்களால் தூவி மண்ணை வணங்குவது எது?

4.தமிழன்னையை ஆபரணங்களால் அணிவித்து அழகு பார்த்த தமிழ் நூல்கள் எவை?

5.தமிழில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?அந்த எழுத்துக்கள் எழுத்து குறியீடுகளை கொண்டவை எவை?

6.தமிழில் உயிர் எழுத்திற்கு ஏன் உயிர் எழுத்து என்று பெயர் வந்தது?

7.தமிழ் எழுத்தில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உள்ள மெய் எழுத்து எவை?

8.வழமையாக நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லின் பொருளை எதிரான பொருளுக்காக பயன்படுத்துகிறோம்.அந்த சொல் என்ன?

9.வெட்க்கம்,முயற்ச்சி என்ற சொற்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா?

10.தமிழ் தாத்தா யார்?

11.தமிழனின் மறை நூல் எது?

12.முச்சங்கங்கள் எவை?

13.சங்க இலக்கிய நூல்கள் அனைத்தையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.அப் பிரிவுகள் எவை?

14.தமிழ் இலக்கணம் தந்த முதல் நூல் எது?

15.இந்து மதம் ஒரு மதம் அல்ல.அது தமிழர்களால் தழுவப்பட்ட சமயமும் அல்ல.அப்படியானால் தமிழ் நாட்டில் சங்க காலத்திற்குப் பின் இருந்த சமயங்கள் எவை?

16.அறிவினா அறியாவினா என்பதன் பொருள் என்ன?

17.தருமியின் பாடலுக்கு நக்கீரன் கொடுத்த பதிலின் உட்பொருள் என்ன?

18.தீர்ப்பு தவறியதற்காக உயிரை விட்ட மன்னன் யார்?

19.ஆண்மையின் மிடுக்குக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயிலை சொல்வது போல்,அதே காலத்தில் உருவான இன்னொரு கோயிலை பெண்களின் மென்மைக்கும் அழகுக்கும் எடுத்துக் காட்டாக சொல்வார்கள்.அது எந்தக் கோயில்?

20.இத்தாலியில் இருந்து 18 ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்து 30 அகவைக்குப் பின் தமிழை கற்று தமிழையும்,தமிழ் இலக்கியங்களையும் உலகறிய செய்ததுடன்  23 நூல்களையும்,ஒரு சிறந்த கலைக் காப்பியத்தையும் தந்த இந்த வெளி நாட்டவர் யார்?

21.நாநிலம்,நான்கு பருவ காலங்கள் எவை?

22.யாது ஊரே யாவரும் கேளீர்,தீதும் நன்றும் பிறர்தர வாரா, என்பதை சொன்னவர் யார்?

23.நீராடும் கடல் உடுத்து.... என்ற தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் யார்?

24.இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பை மறைமுகமாக தெரிவித்து,புதிய உலகளாவிய தமிழ் தாய் வாழ்த்தை உருவாக்கப் போவதாக கூறிய பிரபல தமிழக கவிஞர் யார்?

25.எந்த நாட்டில் தமிழர்களை வைத்தே தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்?

26.கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக வடிவமைத்தவர் யார்?

27.2008 ல் Microsoft Certified Professional (MCP) பட்டத்தை பெற்ற தமிழ் பெண் யார்?

28.திருக்குறளில் எத்தனை அத்தியாயங்கள்,எத்தனை பாடல்கள்?

கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டீர்களா? பதில்கள் விரைவில்
;) ;) ;)

« Last Edit: January 21, 2012, 04:11:05 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Shur naan tamil vazhi kalvi thaan katren aanalm paditha palavatrai naan maranthuvitten ithil ennal oru sila kelvikalukku mattum thaan pathilalikka mudikirathu. Ithu migavum varunthathga visayam

Tamilarkal thaaimozhiyayum, tham varalaatrayum maranthu varuvatharkku ithu oru utharanam

Inaiyaththin uthaviyun kudiya viraivil intha kelvikalukku vidai ariya muyarchikiren