Author Topic: அம்பிகாபதி அமராவதி காதல்!!!  (Read 6036 times)

Offline Global Angel

அம்பிகாபதி அமராவதி காதல்!!!



ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்று நாம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பன் பெருமான். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங்கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி.இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று நீங்கள் கேட்க நினைப்பது  புரிகிறது.



அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கிப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் .
 

இவர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கும் எட்டியதாம் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டாராம். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள்,
 
சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச்  செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது.


சபையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம் . அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.
 

இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி பிழையாக ஒரு மலரைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.
 

100  பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற
 
எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகில் மயங்கி சற்றே ”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே” என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டாராம். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள்.ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறந்துபோனாலாம்


இந்த உண்மையான காதலுக்காகத்தான் நாம் அனைவரும் அவர்களை காதலின் சிகரங்களாக இன்றும் நம் இதயங்களில் வைத்திருக்கிறோம் .