Author Topic: இயற்கையை அழித்து மகிழலாமா  (Read 2933 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இயற்கையை அழித்து மகிழலாமா


பட்டு புடவைகள் மேல் மோகம் வைப்பது பெரும் தவறு, பட்டுபுழுவை உற்ப்பத்தி செய்து பின்னர் அதனை சுடும் நீரில் போட்டு அழித்த பின்னர் தான் மெல்லிய பட்டு நூல் தயாரிக்க படுகிறது.

பட்டுபுழுவை அழித்து தயாரிக்கும் நூலினால் செய்யப்படும் சேலையை விலை அதிகம் கொடுத்து வாங்கி அணிவதில் நாம் பெருமை அடையும் அதே நேரத்தில் எத்தனை பட்டு புழுக்களை அழித்து பின்னர் இத்தனை விலை கொடுத்து வாங்கி உடுத்தி கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்க மறந்து விடுகின்றோமே?

ஆடு மாடு கோழி பன்றி என மிருகங்களை அழித்து உணவாக சாப்பிடுவதில் "பாவம்" என்று பேசும் நாம் ஏன் இந்த பட்டு புழுக்கள் சாகடிக்கப்பட்டு பின்னர் தயாரிக்கப்படும் உடைகளை அணிவதில் மட்டும் பெருமிதம் கொள்கிறோம்? இதில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான செய்தி என்னவென்றால் என் தோழி ஒருத்தி சொன்னாள், பட்டு புடவையை உடுத்துவதால் அவர்கள் எந்த இடத்திற்கும் போகலாமாம், அதாவது பட்டு உடுத்திக்கொண்டு போவதால், பலவிதமான தோஷங்களும், இன்னும் பல "ஒதுக்க" படவேண்டியவர்கள் அருகில் உட்காருதல் அவர்கள் மீது தங்களது கை கால் பட்டாலோ எந்தவித (ஆச்சாரம்) பிரச்சினையும் கிடையாதாம்.

அழகிய வண்ணங்களில் கண்களுக்கு விருந்துபடைக்கும் ஒரு ஜீவனை அழித்துதான் புடவை கட்டிகொள்ளவேண்டுமா என்று தோன்றுகிறது.

வண்ணத்து பூச்சியின் இன்னொரு வகைதான் பட்டு புழுக்களும், இவை கொஞ்ச நாட்களே வாழும் ஜீவராசிகள், என்றாலும் அதனை அழித்து ஒரு துணி அணியவேண்டுமா?