Author Topic: ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரங்கள்:-  (Read 2202 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரங்கள்:-




                         1). தஞசாவூர் மாவட்டம கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு திருநாகநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவரிற்கு பாலாபிசேகம் செய்து சர்ப்ப தோசநிவர்த்தி அர்ச்சனை செய்ய சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
                        2). திருப்பதி அருகேயுள்ள வாயுத்தலமான திருக்காளகஸ்த்தியில் மூலவரான காளகஸ்தீஸ்வரரிற்கு வில்வத்தினால் அர்ச்சனை செய்து, பச்சைக் கற்பூர அபிசேக தீர்த்தத்தினால் அபிசேகம் செய்து அந்த தீர்த்தத்தைப் பெற்று வந்து அந்த தீர்த்தத்தை பதினெட்டு நாட்கள் தொட்ர்ந்து சாப்பிட்டு வர சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
                         3). தர்ப்பை, அருகு, பஞ்சலோகம் ஆகியவற்றைக் கொண்ட தாயத்து செய்து நூற்றியெட்டு நாட்கள் அதை அணிந்திருந்து பின் ஓடுகின்ற நீரில் விட்டு விட சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
                       4). பிரதோச நாட்களில் பிரதோச வேளையில் சிவனிற்கு வில்வ பத்திரம் கொண்டு அபிசேகம் அர்ச்சனை செய்து, நந்தி தேவரிற்கு வில்வமும் அருகும் சேர்த்த மாலை செய்து அணிந்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
                       5). மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
                      6). மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும் சர்ப்ப தோசம் நீங்கும்.
                     7). குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப தோசம் நீங்கும்.
                    8). வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர் விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும்
                   9.) இவற்றையெல்லாம் விட கீழ்க்கண்ட பரிகாரமே சிறப்பான பரிகாரமாக கருதப்படுகிறது.
                 கரும்பாம்பு(இரும்பு) செம்பாம்பு(செம்பு) செய்து, (இரும்பில் பாம்பு செய்யமுடியாவிட்டால் வெள்ளியில் பாம்பு செய்யலாம்) அவற்றை ஒரு இரும்பு அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அவை முழுகும் வரை நல்லெண்ணை ஊற்றி பூசை அறையில் வைத்து, மலர் தூவி, தூப, தீப, ஆராதனை செய்து (சாம்பிராணி தூபம், நெய் தீபம, கற்பூர தீபம் காட்டி) ராகு கேதுவை நினைத்து வழிபடவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி; சிகப்பு அரலிப்பூவினால் (சிகப்பு அரலிப் பூ கிடைக்காத பட்சத்தில் விபூதியினால் மந்திரம் சொல்லலாம்) வழி படவேண்டும். இந்த பூசை இரவு 6 மணிக்கு மேலேயே செய்யப்படவேண்டும்.

ராகு மந்திரம்----
                 ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
                      தன்னோ ராகு ப்ரயோதயாத் (108 தடவை).

                     ஓம் ஹிறியும் ராகுவே நம . (108 தடவை)

கேது மந்திரம்----
                ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
                    தன்னோ கேது ப்ரயோதயாத் (108 தடவை).
     
                   ஓம் ஹ{ம் கேதுவே நம. (108 தடவை)

                 ஒவ்வொரு தடவை மந்திரம் சொல்லும் போதும் ஒரு சிகப்பு அரலிப்பூ போட்டு வழிபட வேண்டும். தூப தீபம் காட்டி பூசையை முடிக்கவும். பின்னர் ராகு, கேதுக்களே உங்களினால் எனக்குண்டாண சகல தோசங்களும் நீங்கி நான் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டி பூசையை நிறைவு செய்ய வேண்டும்.
                 9 நாட்கள் இவ்வாறு பூசை செய்த பின் 10ம் நாள் அரிசி, பருப்பு, தேங்காய், காய் கனிகள் (vetablels and Friuts) உடன் உரிய தட்சனை வைத்து ஒரு பிராமணரிற்கு தானம் கொடுக்கவும். (அப்படி முடியாத பட்சத்தில் பூசை செய்த பொருட்களை பிள்ளையார் கோவிலில் வைத்து விட்டு தானத்தை ஒரு பிராமணரிற்கு கொடுக்கவும்.) பின்பு பிள்ளையாரிற்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும். நான்கு சன்னியாசிகளிற்கு உரிய தட்சணையுடன் உணவளிக்கவும்.

                 இந்த பரிகார பூசை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் முதலில் வினாயகர் பூசை செய்ய வேண்டும். பஞ்ச முக தீபம் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து வினாயகரிற்கு மலர் தூவி, தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து பின்

                ஓம் வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்பிரப
                    நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா (16 தடவை)

என்று வினாயகரை வழிபட்ட பின்னரே சர்ப்ப தோச பரிகார பூசையை செய்ய வேண்டும்.

குறிப்பு:- பொதுவாக ராகு – கேதுக்கள் எங்கிருந்தாலும் தீமையையே செய்வார்கள் (அவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதி, ஆதிபத்தியம் இவற்றைக் கணக்கிற் கொள்ள வேண்டும்) எனவே சகலரும் ராகு, கேதுக்களிற்கான சர்ப தோச பரிகாரத்தினை வாழ்வில் ஒரு தடவை செய்வது சிறப்பாகும்.



சர்ப்ப தோச நிவர்த்தி செய்து வாழ்வில்

சகல நலமும் வளமும் பெற்று வாழ்வோமாக.

 

 

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
 

வாழ்க வளமுடன