Author Topic: மீன்தொட்டியை கிளீன் செய்த பிறகு, அந்த தண்ணீரை என்ன செய்றீங்க?  (Read 1447 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள்.

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்

மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம்.

வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும்

பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.

உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும்.