தமிழ்ப் பூங்கா > கதைகள்

காதல் தந்த காயங்கள்

(1/3) > >>

DuskY:
கல்லூரிக் காலம் என்பது அனைவரின் வாழ்விலும் வசந்த‌ காலமே.. புதிய கனவுகள்
புதிய நட்புகள் , பழக்கம் என நம் வாழ்வின் முக்கிய‌திருப்பு முறையாக அமைந்து
விடுகிறது.‌அன்று கல்லூரியின் முதல் நாள் செல்வி பள்ளிப்படிப்பு முடித்து உலக
அனுபவம் ஏதுமின்றி பேருந்து பயணம், புதிய  நட்பு என‌ அனைத்தும் புதிதாகவே
இருந்தது அவளுக்கு.அவளின் இந்த வெகுளியான‌ குணத்திற்குக் காரணம்
குடும்ப சூழலே .தந்தை கரடு முரடான குணம் உடையவர் குழந்தைகள்
குற்றம் செய்தால் சொல்லித் தருவதே பெற்றோர் வளர்ப்பு .ஆனால் செல்வியின்
தந்தை மற்றவர் முன் நின்று அவமானப்படும்படியாக குழந்தைகளைக் கண்டித்து
அவர்கள் மனது புண்பட்டே பழகிப் போனது. தாயோ மிக மன‌உளைச்சலுக்கு
ஆளானவர். பேச்சு வார்த்தை ,கற்றுக் கொடுப்பது,அண்ணன் தங்கை உறவு ,
அப்பா பிள்ளை உறவு என ‌எல்லாமே அவரது குணத்தால் பாதிக்கப் பட்டது.


பள்ளியில் நண்பர்கள் உடன் கூட செல்வி பேசிப் பழகி இருக்க மாட்டாள். ஏனெனில்
உலக அறிவு மிகவும் குறைவு எனவே அனைவரிடமும் பேசவே சிரமப் பட்டாள்
கல்லூரியின் முதல் வகுப்பு அன்று யாரேனும் தெரிந்தவர் இருந்தால் நன்றாக இருக்கும்  என வகுப்பிற்குள் நுழைகிறாள். அனைவரின் முதல் பார்வையிலேயே அவள் வெகுளியாகத் தென்பட்டாள். முதல் வகுப்பு என்பதால் அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர். யாரிடம் பேசுவதென்றே தயங்கி
அமர்ந்திருந்தாள். பேராசிரியர் பகுப்பினுள் வந்து அனைவரின் அறிமுகத்தை பெற
விரும்பினார்.அப்போது ஓர் குரல் நான் உள்ளே வரலாமா என அனுமதி‌‌ கேட்கவே,
செல்வியின் முகம் சற்றே மலர்ந்திருந்தது. அது அவள் பள்ளித் தோழி மலர் தான்.
அதன் பின் வகுப்பு முடிந்ததும் இருவரும் பேசிக்கொண்டனர்.அப்போதுதான் தெரிந்தது மலர் செல்விக்காவே அந்தக் கல்லூரியில் சேர்ந்தாள் என்பது. அதன் பின் செல்விக்கு மலரை மிகவும் பிடித்துப்போனது. பள்ளியில் அவளின் அமைதியான
குணத்தைக் கண்டே மலருக்கு செல்வியைப்பிடிக்கும்.இப்போது இருவரின்
அடுத்த கட்ட வாழ்க்கை இக்கல்லூரியில் இருந்தே ஆரம்பமாகிறது.


வகுப்பில் இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பர். செல்வி சற்றே குழந்தைத்தனமாக
நடந்து கொள்வாள். வகுப்பு நடக்கும் தருவாயில் கூட சிறு சிறு விளையாட்டுகளை
விளையாடுவர். இருவரின் இந்த போக்கு அனைவரின் ஆர்வத்தையும் பெற்றுத்தந்தது.‌ஏனெனில் வகுப்பில் மொத்தமே இருபது நபர்கள் மட்டுமே இருந்தனர்.‌ஆகையால் யார் எங்கு என்ன உரையாடினாலும் அனைவரும் கேட்கலாம்.மலருக்கு இரு சகோதரர்கள் எனவே அனைவரிடமும் எளிதாகப் பழகினாள். செல்விக்கு அவ்வளவு எளிதாக யாருடனும் பழக்கம் ஏற்படவில்லை.
அவளுக்கு மலரின் நட்பு வட்டங்களினால் சிறிது மனவருத்தம்.தன்னிடம்
பேச எவரும் ஏன் முற்படவில்லை என எண்ணத்தொடங்கினாள்.நட்பு கிடைக்க
வேண்டுமெனில் சிறிது பேச்சாற்றல் கூட வேண்டும் என்ற உண்மை புரிந்தது
அவளுக்கு.

 தினமும் காலையில் தன் தோழிக்காகவே விரைவில் கல்லூரிக்கு வரும் செல்வி
அன்றும் வந்து கொண்டிருந்தாள்.ஆனால் அன்றோ மலருக்கு புதிய நண்பர்களிடம்
நேரம் கழிக்க வேண்டி இருந்தது. அதனைக் கண்டு வருத்தம் அடைந்ந அவள்
கண்டு கொள்ளாதது போல் வகுப்பிற்குள் சென்று விட்டாள். மலர் அவளின்
சிறு பார்வைக்கு கூட அர்த்தம் புரியும். ஏன் அவ்வாறு சென்றாள் என்பதைப் புரிந்து
கொண்டாள்.தகுந்த சமயத்தில் அவளை அழைத்து உரையாடினாள்.பழக்கங்கள் என்பது உரையாடினால் மட்டுமே கிடைக்கும் மனித உறவு, நட்புகள் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் தேவையானது. கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது என்பதை அவளுக்கு உணர்த்தினாள். அதன் பிறகு அவளும் தன் நட்பு வட்டத்தை பெற விரும்பி
பழகத்துவங்கினாள். அவளின் சிறுபிள்ளைத்தனம் கூட சிலருக்கு மிகப்பிடித்திருந்தது. எளிமையான அமைதியான சுபாவம் ஆண் நண்பர்களைக்கூட
பெற்றுத்தந்தது.இனிதே அவர்களின் நட்பு வட்டம் அதிகரித்தது.எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் பன்னிரண்டு பேர் அடங்கிய அவர்களைக் கண்டு சற்றே ஆச்சரியம். கல்லூரி வாழ்க்கையை இனிதே செலவிட்டனர்.............
     
         

                                                                          தொடரும்............

எஸ்கே:
வாழ்த்துக்கள் தோழி அரசி  👏
மிக அருமையான தலைப்பு 👍
எளிமையான வார்த்தைகள் 🤗
கதை மிகவும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது 🤗

அடுத்த பகுதிக்கு ஆவலாக உள்ளேன் 👍
மேலும் உங்கள் படைப்பை எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தோழன்  YesKay  👼

DuskY:
இனிதான வாழ்க்கையில் சில கசப்பான சங்கடங்களும்
நடக்கத்தானே செய்யும் . மலர் மற்றும் செல்வி இருவர் நட்பு
 போன்றதுதான் மதிவண்ணன் மற்றும் சரத்தின் நட்பு . அதே வகுப்பில்
அவர்களுடன் படித்தவர்கள்.மதி மற்றும் மலர் இருவரின் பரஸ்பர
நட்பு அழகான ஒன்று. மதி அவளை எவ்வளவு எள்ளிநகையாடிய
போதும் மலரும் அவனுக்கு இணையாக பேசுவாள். அதேபோல்
செல்வி மற்றும் சரத்தின் நட்பும் சற்றே வித்தியாசமானது. இருவருக்கும்
தாய் தந்தை உறவின் அன்பு முழுதாய் கிடைத்ததில்லை. எனவே 
இருவருக்குள் அதீத பிரியமும் பரிந்து கொள்ளும் தன்மையும்
உண்டானது. ஆனால் செல்விக்கு அவனின் கேளிப்பேச்சும்
கிண்டலான பார்வையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
 
சரத் வீட்டி மூத்த பையன் . அடுத்து ஒரு சகோதரன் அவன் அன்னை
அவனுக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் தீக்காயம்
ஏற்பட்டு இறந்தார். பின் அவர் தந்தை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். அதுவும் அவர் ஒன்றரை வயது குழந்தைக்காகவே. சிறு
வயதில் மாற்றாந்தாய் வளர்ப்பில் சற்று சிரமப் பட்டே வளர்ந்தவன் சரத்.
எனவே அப்பாவின் பிடியில் இருந்து தனித்து வாழ்வே விரும்பினான்.
சரத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் செல்வி அர்த்தம் புரிந்து வைத்திருப்பாள்.
இதுவரை ஆண் நட்பே கிடைத்திடாத செல்விக்கு சரத் மற்றும் மதியின்
நட்பு ஒரு வரமாக இருந்தது . அனைவரும் குழுவாகப் படிக்கும் பழக்கத்தை
மேற்கொண்டனர்.நாட்கள் செல்ல செல்ல சரத்தின் நடவடிக்கைகள்
 மாறத் துவங்கியது.அழகாக தென்பட்ட சரத் செல்வியின் நட்பு மாறியது.
செல்வி வேறு நபர்களுடன் பழகும் போது சரத்தின் முகம் மிகவும் வெம்பி
விடும். அவளின் பிரியம் தனக்கு மட்டும் என்பதை அழுத்தமாக அவளிடம்
கூறினான். அவளும் சரத்திற்கு என்ன உணவு பிடிக்குமோ அவற்றைக்
கற்று செய்து வருவாள். சில சமயம் அனைவரும் அவள் சாப்பாட்டை
அவளுக்கே தெரியாமல் காலி செய்வதுண்டு. இது எல்லா நட்பு
வட்டங்களிலும் நடப்பதுண்டு.அதன் பின் சரத் அவளை யாரிடமும்
பேச அனுமதிப்பதில்லை.அவளின் அனைத்து நேரங்களையும்
அவனுடனே செலவிட விரும்பினான். இவனின் இந்த போக்கு
மற்றவரின் நட்பையும் பாதித்தது. மலர் செல்வியின் நட்பும்
பாதிக்கப்பட்டது. அம்மா இல்லாததால் இப்படி நடந்து கொள்வான்
என அனைவரும்‌ அவன் போக்கிலே விட்டனர்.
காலையில் மலருக்காக நேரம் செலவிடும் செல்வி போல் தற்போது
செல்விக்காக கல்லூரிக்கு விரைவில் சென்றான் சரத். அவனிடம்
பழக பழக தனக்கே தெரியாமல் போன விஷயங்களை சரத்திடம்
இருந்து தெரிந்து கொண்டாள் . அவள் எப்போது கல்லூரிக்கு முதலில்
 புடவை அணிந்தாள், எந்த பேருந்திலிருந்து வரும்போது அவளின்
முதல் பார்வை பேச்சு தன்னிடம் வருமென அனுதினமும்
எதிர்பார்த்திருந்த விஷயங்கள் அனைத்தும் உரைத்தான்.
தினமும் சந்திக்கிற போது அவனின் முதல் பார்வையும்
மந்திரம் போன்ற சிரிப்பும் அவளுக்கு விசித்திரமாக இருந்தது.
தற்போதெல்லாம்‌ வகுப்பில் எதேர்ச்சையாகத் திரும்பினால்
கூட‌ சரத்தின் பார்வை அவளை நோக்கியே இருந்தது.
செல்விக்கு எதோ நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது.
மலரை தனியே சந்தித்து பேச விரும்பினாள்.
  மலரிடம் அவனின் நடவடிக்கைகள் மற்றும் உரையாடல்கள்
பற்றிக்கூறினாள். ஆரம்பத்திலே சிறிது பொறி தன் கண்களில்
தென்பட்ட போதும் காட்டிக்கொள்ளாத மலருக்கு என்ன
நடப்பதென்று புரிந்தது.அவளுடன் முடிந்த வரை நேரம்
 செலவிட்டாள்.
செல்விக்கு ‌இது காதல் என்று புரிந்து கொள்ளவே
ஒரு வருடமானது. அதற்குள் சரத்திற்கு அவள்
மீதான பிரியம் அதிகரித்திருந்தது. இருவரும் என்ன
சண்டையிட்டு பேசாமல் இருந்தாலும் மறுநாள் காலை
கவலை தோய்ந்த‌ அவனது முகத்தைப்பார்த்ததும்
அத்தனை கோபத்தையும் மறந்து போவாள். அவளுக்கும்
சரத்தின் மீது அதீத‌பிரியம் . இதுவரை யாரிடமும் இவ்வளவு
பிரியமாகப் பழகியதில்லை அவள்.எப்போதும் போல் ஒரு
நாள் காலை வகுப்பிற்கு இருவரும் விரைவாக வந்திருந்தனர்.
அன்று காலை வந்த முதலே அவன் செல்வியை விட்டு
 நகரவில்லை. சரத் ,செல்வி ,மலர் மூவர் மட்டுமே இருந்த
வகுப்பில் அவனது நடவடிக்கைகள் புரிந்து கொண்ட மலர்
நூலகத்திற்கு செல்வதாகக்கூறி சென்றுவிட்டாள்.
அன்றுதான் அவன் கண்களில் அவ்வளவு காதலை அவள்
 பார்க்கிறாள். எங்கே சொல்லி விடுவானோ என்ற பயத்துடனே
உரையாட ஆரம்பித்து ஏதோ கேளி கிண்டலுக்கு ஆளானாள்.
அதில் அவனை விளையாட்டாக அடிக்கச் சென்றவள் கைகளை
அவன் இறுகப்பிடித்துக் கொண்டான் . முதல் முறை நாணம் வந்த
அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.தினமும்
இவ்வாறு அவளுடன் இனிமையான நினைவுகள் சேகரிக்கவே
விரும்பினான் சரத். செல்வியோ அவனின் காதல் புரிந்தும்
கேட்டு விட்டால் என்ன கூறுவது என்ற பயத்துடனே
இரண்டாம் ஆண்டு படிப்பு முடிந்து போனது......
                   தொடரும்.........

எஸ்கே:

செம்ம வாழ்த்துக்கள் அரசி 👏
விறுவிறுப்பான கதை சொல்லும் பாங்கு மிக அருமை 👍
அடுத்த பகுதி எப்போது வரும் 👼

DuskY:
இரண்டு வருட வசந்த கால கல்லூரி வாழ்க்கை சிறிது சிறிதாக மாறத் துவங்கியது .ஒவ்வொரு விழா கல்லூரியில் நடக்கும் போதும் அனைவரும் இணைந்து
செயல்படவே விரும்புவர். விழா நடைபெறும் போதோ அல்லது விழா முடிந்த
பின்போ செல்வி யார் அருகில் அமர்ந்தாலோ யாரிடம் பேசினாலோ சரத்தினால்
தாங்கிக் கொள்ள இயலாது. அவளின் சுதந்திரம் முழுதும் அவனால் கட்டுப்
படுத்தப்படுவதைப் போல் உணர்ந்தாள். யாரிடமும் பேசாமல் எவ்வாறு பொது
இடங்களில் ஒரு மாணவியாக இருக்க முடியும்? இவளின் நிலை புரிந்தும்
சிலர் தன் இஷ்டத்திற்கு வதந்திகளை பரப்ப ஆரம்பித்தனர். வாழ்க்கையே
நரகமாவதைப் போல் இருந்தது. இங்கு இவ்வாறு இருக்க சரத் செல்வியை
சந்திக்கும் போதெல்லாம் அலாதி பிரியத்துடனே நடந்து கொள்வான்.
அவளுக்கு என்ன பிடிக்குமோ அனைத்தும் கேட்காமலேயே வாங்கி வந்து
விடுவான்.ஒருவர் இப்படியும் கூட அன்பு வைப்பார்களா ? என வியக்கும்படி
நடந்து கொள்வான். செல்வி சற்று முகம் வாடினால் கூட காரணம் அவனால்
புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அன்பும் வளர வதந்திகள் பேச்சும்
சேர்ந்தே வளர்ந்தது .
செல்வி ஓர் முடிவிற்கு வந்திருந்தாள் என்ன நடந்தாலும் இந்த வதந்திக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அவள் எண்ணம். அவன் கட்டுப்
பாட்டிற்குள் இருக்க அரவே அவளுக்கு விருப்பம் இல்லை என்ற போதும்
அவ்வளவு பிரியத்தை இதுவரை யாரிடமும் அவள் உணர்ந்ததில்லை.
விரும்புகிறாயா ? இல்லையா? என்று கேட்டு விட்டு இனி விலகி இருக்கலாம்
என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.மனதிற்குள்' ஒருவேலை அவனும் விரும்பவதாகக்கூறினால் வதந்திகள் உண்மையாகி விடுமே ' என்ற நெருடல் இருந்தபோதும்' என் பெயர் இவ்வாறு கெட்டுப்போகும் அளவு அவன் நினைக்க
மாட்டான் '  என்று நம்பிக்கையுடன் சரத்திடம் கேட்டு விட்டாள். அவனுக்கோ
இந்த கேள்வி அவளிடமிருந்தே வருமா என ஆச்சரியத்தில் இருந்தான் .
என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை. இல்லை என்று கூறிவிட்டால்
அடுத்து அந்த உறவிற்கு அர்த்தமில்லை என்று நினைத்து 'நான் விரும்பிக்
கொண்டுதான் இருக்கிறேன்' என்று உரைத்தான். இந்த பதில் கூறும்போது
அவன் முகத்தில் அவ்வளவு புன்னகை மகிழ்ச்சி இருந்தது . இந்த
பதிலை எதிர்பார்க்காத அவள்' நம்மை சுற்றி என்னென்ன வதந்திகள்
 வருவதென கேட்டுதான் பேசுகிறாயா?' என்ற கேள்வியை முன் வைத்தாள்.
'மற்றவர் பேச்சுதான் நம் வாழ்க்கை என எண்ணினால் அதுவாகத்தான் இருக்க
வேண்டும் நாம் நம்மைப்பற்றி யோசித்தால் மட்டும் போதும்' என்றான்.சற்றும்
யோசிக்காமல்' நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா ?' என்ற கேள்வியை
முன் வைத்தான். செல்விக்கு இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று
முன்யோசனை எதுவுமில்லை. பதில் கூறவும் விரும்பவில்லை அதே சமயம் அவன்
மகிழ்ச்சியை கெடுக்கவும் நினைக்கவில்லை.'இதை நாளை பேசிக் கொள்ளலாம்' என மழுப்பலாகக் கூறி வந்துவிட்டாள். ' தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக்
கொண்டோம் ' எனப்புரிந்தது. ஆனாலும் நம்மை புரிந்து கொண்ட உறவு இனி
நமக்கு கிடைக்காதே என்றும் குழம்பத்தொடங்கினாள்.
 
சரத்திடம் கோபப்படும் குணமும் கோபத்தின் பின்னனி என்ன என்பதை
மறைக்கும் குணமும் அதிகமாகவே இருந்தது.அத்துடன் அவளை யாருடனும்
பழக அனுமதிக்காமல் இருப்பது அவளை மிகவும் வருந்த வைத்தது .
எப்படியோ இரண்டு நாட்கள் பதில் கூறாமல் சமாளித்து விட்டாள் . இன்றும்
பதில் கூறாமல் போனால் வீண் வாக்குவாதம் கூட நடக்கலாம் என
பயத்துடனே சென்றாள். சரத்தும் அவளின் பதில் வாங்காமல் விடுவதில்லை
என்ற எண்ணத்துடனே அவளை நேரில் சந்திக்கச் சென்றான்.செல்விக்கு
ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை குணம் ஒத்துபோகுமா? வீட்டில் அப்பா
என்ன நினைப்பார்? ஏற்றுக்கொள்வாரா? சாதி என்று ஒன்றைப்பற்றி
அவளுக்கு அதுவரை தெரியாது. இவ்வாறு பல எண்ணங்கள் வந்து
கொண்டிருக்க அவனோ மகிழ்ச்சி கலந்த குழப்பத்தில் காத்துக்
கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பின் அவள் மனம் அந்த மாய
உலகிற்குள் செல்ல ஆரம்பித்தது .யாருக்கும் கிடைத்திடாத அரிதான
தோற்றம் ,அழகான சிரிப்பு, மெய் மறக்கும் அன்பு இதை விட அவன் குறைகள்
பெரிதாகப்படவில்லை அவளுக்கு. அவளும் சம்மதம் என்றே கூறி
விட்டாள். ஆனால் அவள் தந்தையைப்பற்றி சிறிது பயம் மட்டும் அந்த கணம்
முதல் தொற்றிக்கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க
ஆரம்பித்தனர். ஆனால் அப்பாவைப் பார்க்கும் போது மட்டும் அவ்வபோது
குற்ற உணர்வு ஏற்படும் என்ன பேசுவாரோ உண்மை தெரிந்தால் என்ற
பயம் இருந்தது. அதன் பின் இருவர் வாழ்விலும் ஒவ்வொரு நிமிடமும்
இனிமையான தருனமாகவே இருந்தது.இருப்பினும்  செல்வி அவனைத் தவிர
வேறு ஆடவருடன் பழகினால் மட்டும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
சரத்திற்காக மற்ற நண்பர்களை இழக்க வேண்டிய சூழல் .சரத் அவன்
அப்பாவிடம் செல்வியைப்பற்றிய உண்மையைக் கூறி நேரில்
அழைத்து வந்து கல்லூரியில் வைத்தே இருவரையும் சந்திக்கும்படி செய்தான்.
செல்விக்கு அவன் அவசரப்படுகிறான் எனப்புரிந்தது.படித்து முடிக்கவில்லை
வேலை என்று ஒன்று அமையவில்லை அதற்குள் பெற்றோருக்கு
தெரிய வேண்டிய அவசியமில்லை என எண்ணினாள்.
அவளுக்குத் தெரிந்தவரை சரத் படித்து வளர உதவி செய்தது எல்லாம்
சரத்தின் ஆசிரியை என்னும் அம்மா ஒருவர் தான் . அப்பா உதவியை
துளி அளவும் நாட மாட்டான்.அம்மா மனம் வருந்தும் படி ஒரு காரியம்
கூட செய்வதில்லை.அவரும் பெறாத மகனாக இருந்தாலும் அளவு கடந்த
அன்பினை அவன் மீது காட்டுவார். சரத்திற்கு உணவு , டியூசன் சென்டர்
என அவனை அடுத்த தரத்திற்கு கொண்டு செல்ல எண்ணினாள்
 அந்தத் தாய். அவர்களுக்கும் செல்வி பற்றிய விஷயம் அவன் நண்பர்கள்
மாணவர்கள் மூலம் தெரிய வந்தது.இருப்பினும்  சரத் அவள் எனது நல்ல
தோழி எனவே கூறிவிட்டான்.
ஒரு நாள் எப்போதும் போல செல்வியிடம் மிகவும் கடுமையான
சொற்களால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டான் சரத். செல்வியுடன் சேர்ந்து
அவனது தோழன் பாடம் நடத்தும் படியான பொறுப்பை பேராசிரியர்
வழங்கி இருந்ததுதான் இதன் காரணம்.அதற்கு அவளால் என்ன
செய்ய இயலும் ?சொன்னதை முடித்தால் தானே ஆசிரியர் மதிப்பெண்
வழங்குவார் என பொறுமையாகக் கூறிப்பார்த்தாள். இந்த சாதாரண
 விஷயத்தைக் கூட இவ்வளவு பெரிதாக்குகிறானே ! வாழ்க்கை முழுதும்
இவனுடன் சரிவருமா ? என குழம்ப ஆரம்பித்தாள்‌. அவனும் அடங்குவதாய்
இல்லை . செல்வியும் கோபப்பட ஆரம்பித்தாள். 'யாரிடமும் பழகாமல்
இருக்க நான் உன் அடிமை கிடையாது எனக்கு என்ன தேவை யாரிடம்
எப்படி பேசனும் எல்லாம் எனக்கும் தெரியும் . உன் நண்பன் கூட பாடம்
 எடுப்பது அவ்வளவு பொறாமையா உனக்கு?  அப்படிதான் பேசுவேன் என்ன பண்ணனுமோ பண்ணு ' என்று முதல் முறை பொறுமை இழந்து பொங்கி
விட்டாள். அதன் பின் சரத் 1 வாரமாகியும் கல்லூரிக்கு வரவில்லை.
'எது நடந்தாலும் சரி அவனிடம் இரக்கம் காட்டி பேசக் கூடாது ' என்றே
தீர்க்கமாக எண்ணினாள் செல்வி.....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version