FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 02, 2018, 12:07:13 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: Forum on December 02, 2018, 12:07:13 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 206
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetie (a) JO  அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/206.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: JasHaa on December 02, 2018, 11:32:41 AM
￰சிட்டுக்குருவி பேசுகிறேன் !

மானிடர்களே !
நான்தான் உங்கள் சிட்டுக்குருவி..
உங்கள் வருங்கால சந்ததியின்
வாழ்வியல் சாட்சி நான்...

ஆலமர கிளையில்
ஆர்ப்பரித்த ￰உங்களது
பிள்ளைப்பருவம் எனதானது

களத்துமேட்டில் உங்கள்
நெல்மணிகளை களவாடிய
உங்கள் செல்லபிள்ளை
நானாகிறேன்   ...

ஆற்றாங்கரையினில் உங்கள்
காதலுக்கு சாட்சியான காதல்
குருவி நானாகிறேன்  ..

முற்றத்தில் இருக்கும் தானியங்களை
கொத்தித்தின்னும் எங்களை
தங்க தந்தட்டி வீசி  ஓட்டிடும்
உங்கள் அப்பத்தா ...

ஆனால் இன்று...
உங்கள் அலைபேசி் அலைவரிசைக்கும்
உங்கள் சொகுசு வாழ்க்கைக்கும்
உங்கள் ஆடம்பர வாழ்வியலின் நகர்தலுக்கும்
என் சந்ததியை பலியிடப்பட்டு  வருகிறேன் ..
என் மானுட சமூகமே ....
பிளாஸ்டிக் எனும் உயிர்கொள்ளியில்
சிறுதானியமும், நீரும் என் பசியை போக்கிடுமோ ..

சுயமாய் கூடு கட்ட தெரிந்த
ஐந்தறிவு ஜீவன் நான்
ஆறறிவு ஜீவனே ...என் சமூகத்தை அழித்துவிடாதே!
காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் -
என்றான் பாரதி
நானும் உன் இனம் !
உன் சந்ததி காணவேணும்  என்னை உயிர்ப்பித்துவிடு !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: Guest on December 02, 2018, 02:40:15 PM
சோற்றுப்பருக்கைகள்
************************

வாங்கிய ஓரு பொட்டலம்
சோற்றில் இருவர்
உண்டபின்பும் மிச்சமானது
ஓரு கைப்பிடி சோறு.....

இலைகளை குட்டைக்குள்
வீசும்முன் அதில்
ஓட்டியிருந்த எச்சில் சோற்றையும்
சேர்துக்கொண்டேன்
மீதமிருந்த சாதத்தோடு......

ஜந்தாவது மாடியில்
ஏது கொல்லை - சதா
தொல்லைகளாய் ஆகிப்போன
கண்ணாடி ஜன்னல்களினூடே
சிறகடித்து உறுமுகிறது
சில மாடப்புறாக்கள்.......

ஜன்னல் திறக்கையில்
பயத்தின் உச்சம் கொள்கின்றன
அழகு புறாக்கள் - இரண்டோ
மூன்றோ வட்டமிட்டு மீண்டும்
வந்தமர்கிறது அப்புறத்து
திறக்காத ஜன்னலின் கைவரியில்.....

என் கையிலிருந்த
தட்டிலிருந்து தட்டப்பட்டது
சோற்றுக்கவழம் - நேற்று நான்
கொட்டிய சோற்றை சுத்தமாய்
தின்று முடித்த அதே இடத்தில்....

மீண்டும் சில வட்டமிட்டு
வந்தமர்ந்தது கைவரியில்
என் ஜன்னல் பூட்டப்பட்டதை
உறுதி செய்துகொண்டு.....

ஊரில் ஓரு நாள்
யாரோ சில வயோதிக
பிச்சைக்காரர்கள் எச்சில்
இலைகளை தூளாவுவதை
நானும் பலரோடு வேடிக்கை
பார்த்து குமட்டிக்கொண்டேன்.........

ஆங்கே சாக்கடைக்குள்
காலூன்றி சோற்றப்பருக்கைகளை
பொறுக்கியவர்களின்
முகத்தில் வரையப்பட்டிருந்தது
துரத்தப்பட்டதின் கோப வரிகள்.......

வீட்டு முற்றத்தில் யாரோ
பழையசாதம் கேட்டனர் - அதுவும்
அந்நேரப்பசி அடங்க
கிடைக்காத சோற்றுப்பருக்கையின்
தேவையின் வலிகள்......

மானுடம் வழி பிழைக்கிறது
சில பலநேரங்களில் - யாசிப்பவனின்
இதயங்களில் வேறு என்ன
புதிதாய் இருந்துவிடப்போகிறது
அடுத்த வேளை உணவின்
தேடுதல்பற்றிய எண்ணம் தவிர.......

ஓ மானுடமே.....!!

உன் பானைக்குள்
உனக்கும் உன்னவர்களுக்கும்
தவிர ஒரு கவளம்
சோற்றை மீதம் வை - யாரோ
ஒருவரின் தந்தையோ
நீ அறியாத தாயோ கூட
அந்நேரம் வரலாம்

சில சோற்றுப்பருக்கைகளுக்காய்.......
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: KoDi on December 02, 2018, 05:42:48 PM
எவ்வுயிரும் தம்முயிர்போல்

பூக்களில் மறைந்திருக்கும் 
செந்தேனை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பம் கண்டுணர்ந்த 
பொறியாளர் சிட்டுக்குருவிகள்

பாஸ்ப்போர்ட் பயணமின்றி
ஜி பி எஸ் துணையுமின்றி 
துரிதமாய் செய்தி சேர்க்கும் 
மின்னஞ்சல்  புறாக்கள்

குயிலதன்  முட்டையை 
தனதென காத்து
கிடைப்பன  பகிர்ந்துண்ணும்
கம்யூனிஸ்ட் காகக்கூட்டம் 

புவிஈர்ப்பை பொய்யாக்கி 
தன்னொற்றைச்  சிறகடிப்பில்
வான்வெளி அளக்கும்
விண்வெளி ஓட கழுகினம்

கிளைத்தவறி  வீழினும்
கீறல்கள் ஏதுமின்றி   
பாதுகாப்பாய் களமிறங்கும் 
பாராசூட்  அணில்கள் என 

பறவையும் மிருகமும்
பாசமாய் ஒருத்தட்டில் 
பண்புடன் பசியாறும் 
சமபந்தி விருந்தொன்று

தானுண்டால்  போதாதென
மண்ணுயிர்கள் அனைத்திற்கும்
அமுதுபடைக்கும் மானுடம் கண்டு
வியக்கின்றேன் ஒரு பாமரனாக !
 





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: thamilan on December 02, 2018, 05:50:15 PM
இருப்பதை  பகிர்ந்துண்டு வாழ்பவர்கள் நாங்கள்
ஒரு பிடி சோறோ ஒரு கை தானியமோ
தனித்துண்பதில்லை   நாங்கள்
பகிர்ந்துண்டு வாழும் நாங்கள்
மனித  ஜாதி இல்லை

பதுக்கி வைப்பதும்
பாதி சாப்பிட்டு மீதியை வீசியெறிவதும்
மனிதரின் செயல்
ஆடம்பரத்துக்காக பலவித உணவை
விலை கொடுத்து வாங்கி
விறல் நுனிப்படாமல் பேருக்கு சாப்பிட்டுவிட்டு
மீதியை வீசி எறியும்
ஆடம்பர மனிதர்கள் நாங்கள் இல்லை

கிடைப்பதை ஆளுக்கு ஒரு பருக்கையானாலும்
ஆனந்தமாய் பகிர்ந்துண்டு வாழும்
பறவை இனம் நாங்கள்
நாளைக்கு  என்று சேர்ப்பதும் இல்லை
நாளையை பற்றிய கவலையும்
எமக்கு இல்லை

ஒரு வாய் சோற்றுக்கு வழி இல்லாமல்
ஒரு  கூட்டம்
இருப்பதை வீணே விரயம் செய்யும்
இன்னொரு கூட்டம்
மிஞ்சியதை இல்லாதவர்களுக்கு கொடுத்திட
மனமில்லா இன்னும் ஒரு கூட்டம்
இது தான் ஆறறிவு படைத்த மனித இனம்
எங்களுக்கோ ஐந்தறிவு தான்
என்றாலும் ஒற்றுமை பகிர்ந்துண்டு வாழ்தல் என
பல அறிவுகளை
படைத்தவன் எங்களுக்கு அருளியிருக்கிறான்

இந்த மனித  ஜென்மம் 
என்றும் வேண்டாம் எங்களுக்கு
பறவைகளாகவே இருந்து விட்டு போகிறோம் நாங்கள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: JeSiNa on December 03, 2018, 06:43:07 PM
கிடைத்ததை  பகிர்ந்து உண்ணும்
ஐந்தறிவு கொண்ட விலங்கினம்...!!
உலகையே சுற்றி வரும்
இதுவும் ஒரு உயிரினம் ...!!

அம்மாவின் அரவணைப்பால்
அப்பாவின் பாசத்தால்
தாத்தா பாட்டி அன்பால் ...!!
பிணைந்து பகிர்ந்து உண்ட
காலம் உண்டு...!!

ஆறு அறிவு கொண்ட மனிதனின்
அறிய கண்டுபிடிப்புகளால்
சோம்பேறியாகிறோம்..!!
ஆன்லைனில் ஆர்டர் செய்து
தனித்து உண்ணுகிறோம்..!!

நாம் சுயநலவாதிகளாக
வாழ்கிறோமே என்று வருந்தினோம் ..!!
அடுத்த நிமிடமே ஆண்ட்ராய்டுக்கு
அடிமை ஆகிறோம் ..!!

மனிதர்கள் யாரும் மாறவில்லை
இந்த சூழல் நம்மை
மாற்றி விடுகிறது  ...!!
இனி வரும் தலைமுறையை நினைத்து
கண் கலங்குகிறது...!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: regime on December 03, 2018, 10:29:02 PM
இவ்வுலகில்  அனைத்துமே அழகானதுதான்
நீர், நிலம், காற்று ஆகாயம்..!

இவையனைத்துமே  பஞ்ச பூதங்கள் ,  அழகுதான்
அடுத்த நிமிடம் யாருக்கும் நிரந்தரம் மில்லை 

உழைத்து உழைத்து சேர்க்கும் பணமும்,
சாகும் வரை ஏந்தாத கையும் சிறப்பு

பணத்தை மட்டும் நம்பி ஓடும்- நீ
சேர்த்து வச்ச சொத்தும்
ஓடி ஓடி உழைத்த பணமும்
நீ போன பின்பு உன்னோடு வரப்போவதில்லை


உன்னை புதைக்கும் அந்த  ஏழு அடி கூட சொந்தமில்லை
கிடைப்பதை பங்கிட்டு  அன்பின் மழையில் நனைவோம்

நான் என்பதை மறந்து
நாம் என்று நினைத்தால்
இல்லை என்ற சொல்
மனிதர்கள் நம்மில் இல்லாது  போகும்
தேவைக்கு அதிகமானதை
தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதால்
நம் மகத்துவம் மாண்புபெறும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: பொய்கை on December 04, 2018, 07:34:12 PM
வஞ்சகம் நிறைந்த மனிதர்கள்
வைத்தது  வான்பறவைக்கு
வயிற்றினை நிரப்புமா?

நெஞ்சம் பதைக்க கழுகுக்கு
அருகே தானியம் பொறுக்கும்
சிறுகுருவி  மகிழ்ச்சியை
வல்லூறுதான்  பொறுக்குமா?

அழகிய புறாவை அரிதாய்
அருகில் காணும் காகத்தின்
கரைதலும், கருமையும்
இதனால் உடனே மாறிடுமா?

கோடுகள் கொண்ட சிறிய
அணிப்பிள்ளை இவற்றின்
பிள்ளை ஆகிடுமா ? அவற்றின்
கூட்டில்ஒன்றாய் வாழ்ந்திடுமா?

மண்ணில் புரண்டாலும்
விண்ணில் பறந்தாலும்
உங்கள் பேதைமைதான்
என்றும் மாறிடுமோ ?   

மனிதர்கள் வைத்த
பொறியினில் மாட்டும்
வாயில்லா பிராணிகளே!
மாலைநேர உணவுவிடுதியில்
தினம் மாமிசம் ஆகிடும் ,
அருகி வரும் பட்சிகளே!
மனிதஅழிவின் சாட்சிகளே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: Evil on December 04, 2018, 09:36:24 PM
பட்டினியாய் இருந்தாலும் பழைய சோறு 
பாதி வைத்த மன்னரே
நாங்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணுவோம் பாருமையா...

பாசமுள்ள பட்சிகள் நாங்கள் எங்களின்
சோகத்தை கேட்க வாருமைய்யா...

மரங்களை அழித்து எங்களை
மண்ணிலே புதைத்த மனித பிறவிகளே கேளுமையா ...

காடுகளை கட்டிடங்களாக்கி
எங்களின் வாழ்க்கையை மயானமாக்கி
கலங்க வைத்ததை கேளுமையா
இயந்திரலோகத்தில் இயந்திரமாய்
எங்களை எண்ணி எண்ணி
எங்கள் இனத்தையே அழித்தது ஏனைய்யா ?

எரி குளங்களை அழித்து அழித்து
எங்ககளை எண்ணெய்  ஊற்றி 
எரிய விட்டது ஏனைய்யா ?

விண்ணில் பறந்து பறந்து
விண்மீன்களோடு  போட்டியிடும்
வீரர்கள் எங்களை
மண்ணில் மறைத்து புதைத்தது  ஏனைய்யா ?

தாவித்  தாவி செல்லும் தங்கத்தை
தண்ணீர் தண்ணீர் என்று தாக்கத்திலே 
கண்ணீர் சிந்த விட்டது ஏனைய்யா ?

ஒற்றுமை ஒற்றுமை  என்று கூறும் நீங்களே
எங்களின் ஒற்றுமையை பாருமையா 
பாகுபாடு இன்றி பகிர்ந்து  உண்ணுவோம்  நாங்களைய்யா.

கண்களில்  கவலைகள் இருந்த போதிலும்
கனவாக எண்ணி
கவலைகளை  மறந்திடுவோம்   நாங்களைய்யா...

எங்களின் சோகத்தை உங்களிடம் கூறி
விடை பெறுகிறோம்  நாங்களைய்யா
என்றும் உங்களின் செல்ல பிராணிகளைய்யா
இயற்கையின் இன்றியமையா
தோழர்கள் நாங்களைய்யா.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 206
Post by: SweeTie on December 05, 2018, 07:24:07 AM
ஒரு தட்டில்  ஒன்றாக  ஒற்றுமையாய் உண்போம்
வேற்றுமைகள் ஏதுமின்றி  வாழ்ந்திடுவோம் இங்கே
சொகுசாக  வாழுகிறான்  சோம்பேறி மனிதன்
காட்டாறு போன்று நம்மை  அழிக்கின்றான் பாரீர்

கூட்டாகவே  சேர்ந்து  கரைந்துண்ணும்  காக்கை
தன்னலமே இல்லாத  தனிப்பிறவி  காணீர்
பகட்டாகவே பேசி திகட்டாமல்  உண்பான்
பசியென்று கையேந்தும்  ஏழை முகம் பாரான்.

மதில் மீது  குடிகொள்ளும்  மாடப்புறாக்  கூட்டம்
துளி கூட  அஞ்சாது நோட்டம் விடும் நம்மை
ஒரு கவளம்  சோற்றை உணவாக கொடுங்கள்
குறையேதுமின்றி  குலம்  காப்பான் இறைவன்

ஸ்ரீ ராமன்  இட்ட  மூன்று கோடு முதுகில் சுமக்கும்  அணில்கள்
மரப்  பொந்துகளில் வாழும்  தன் குஞ்சுகளை காக்கும்
மரத்தை வெட்டி வீடு கட்டும் மனிதன் இவன் செயலால்
அணில் இனமும் நாளடைவில்  அழிகிறதே  காணீர்

பறந்து பறந்து இரை  தேடும் சிட்டுக்குருவி  பாரீர்
வானில் வட்டமிடும்  பருந்தோடு உண்ணுவதை காணீர்
ஓடி ஓடி உழைத்து  பதுக்கி வைக்கும்  மனிதா
இல்லை என்று வருபவருக்கு  கிள்ளி கொஞ்சம் போடு