FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 17, 2019, 10:49:18 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: Forum on February 17, 2019, 10:49:18 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 209
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/209.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: JasHaa on February 18, 2019, 07:33:58 PM
உலமெங்கும் காதலர்தின  கொண்டாட்டம்
பகிரப்பட்ட காதலுடன் குதூகலத்தில்  -  ஆனால்
என்றோ ஸ்பரிசிக்க  பட்ட முத்தச்சுவையின் 
ஈரத்துடன்  காதலி இல்லத்தரையிலும்
கடமையை நெஞ்சிலும் , கண்ணிலும் 
கொண்ட காதலன் எல்லைப்பகுதியிலும்

நள்ளிரவு அதிர,   திசைகள்  தடுமாற, 
அஃறிணையும்  கண்ணீர்  சிந்த 
வெடித்து  சிதறிய  எரிபொருட்கள் 
நீ வீசிச்சென்ற  வெஞ்சினமா  ?

எங்களது  மனக்காயம்  -  உனக்கு
மகிழ்ச்சியை  தரலாம் 
எங்களது  வேதனை  -  உனக்கு
வேடிக்கையாய்  இருக்கலாம் 
எங்களது  வலிகள் -  உனக்கு
வாழ்க்கையாய்  இருக்கலாம் 
எங்களது   கண்ணீர் உனக்கு
களிப்பை  தருவதாக  இருக்கலாம்
மீண்டு எழும் நாங்கள் தரும் வலிகள்
எங்கள்  வேதனையின்  சாட்சிகள்  -  அது
வார்த்தைகள்  இட்டு  நிரப்ப முடியாத 
வெற்றிடங்கள் !!

மோகங்கள் பலவிதம் 
மதுபானத்தில்  மோகம்  சிலர்க்கு 
தங்கத்தின் மீது  மோகம்  சிலர்க்கு
மாதுவின் மீது  மோகம் சிலர்க்கு
மடிவெடியின்  மீதா  நீ  மோகம் கொண்டாய்  ?
உன் தாயின் கருவறை  கற்பித்த மோகமோ  இது

எதை காக்க இந்த போராட்டம் ?
உங்கள் மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ள
பிணங்கள் தேவையா ?  இல்லை
விழுந்த பிணத்தின் மீது  உங்கள் சகாயங்களை 
நிறைவேற்றி கொள்ளவா  ?

முடிவுகளற்ற  உங்களது  வெஞ்சினமும் 
ஆதாயம்  தேடும்  எங்களது   
சுயநலவாதிகளுக்கும்   இடையில்  ஊசலாடும் 
என்  சகோதரர்களின் உயிரும்  …
என் சகோதரிகளின் மாங்கல்யமும் …

மரணம் கொண்டாட்டத்திற்குரியது அல்ல
கொண்டாடும் நீ ?
மிருகம் எனச்சாடி அவற்றை 
இழிவுபடுத்த விரும்பாத  நான் …

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: RishiKa on February 20, 2019, 03:52:40 PM

பூக்களின் இதழ்களில்  இன்று புல்லட்டுகள் !
பூகம்பங்கள் சொல்லிவிட்டு வருவதில்லை !
கார் மீது குண்டுகள் வீசி ..
காவலர்களை கொன்ற பாதகர்கள் !

தீ மழை பொழிந்த தீவிரவாதிகளே !
தீதும் நன்றும் பிறர் தர வாரா !
திகைக்க வைக்கும் பதிலடி தவறாமல் வரும்  !
திகிலோடு தயாராய் இருங்கள்!

ஊன் உறக்கம்  மறந்து..உறவுகளை துறந்து..
நாடு காக்க பனிக்குளிரில் இருந்து...
பணி புரிந்த காவல் தெய்வங்களின் உயிரை
பறித்தது என்ன படுபாவிகள் !

மகனை இழந்த பெற்றோர்களே !
தந்தையை இழந்த குழந்தைகளே !
கணவனை இழந்த மனைவிகளே !
காதலனை இழந்த காதலிகளே!

உங்களுக்கு எலாம் ஆறுதல் சொல்ல ..
எம்மிடம் வார்த்தைகள் இல்லை !
எங்கள் கண்ணீர் அவர்களின் குருதிக்கு
ஈடு ஆகாது என்றும் தொழுவோம் !

தியாகிகள் சொல்லி கொள்வதில்லை !
நாங்கள் மெழுகுவர்த்திகள் என்று !
தாய் திரு நாடே !உன்னை காக்க  வந்த
எம் மக்களை என்றும் காப்பாற்றிடு !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: சாக்ரடீஸ் on February 21, 2019, 03:34:13 PM
தீவிரவாதம்
 
மனித நேயம்
மனிதாபிமானம்
இரண்டையும் நாம் இழந்துவிட்டோம்
இதன் வெளிப்பாடுதான்
தீவிரவாதம்

தினம் தினம்
தொடரும் குண்டு வெடிப்புகள்
இங்கு
மனிதன் மட்டும் இறப்பதில்லை
நாம் மனிதன் என்ற உணர்வும்
துணையாய் இறக்கின்றது

தீவிரவாதத்தின்
தேடல் தான் என்ன?
மத வெறியா?
இன வெறியா?
விடை தெரியாத  வினா ...

ஒரு பக்கம்
மதத்தை முன்நிறுத்தி
செய்யும் படுகொலைகள்
என்ன ஒரு விந்தை!
மனிதனே அல்லாத ஒருவன்
உருவாக்கிய மதத்திற்கு
இவ்வளவு மதவெறியா
எதற்கு?

மறு பக்கம்
இனத்தை முன்நிறுத்தி
செய்யும் இனபடுகொலைகள்
என்ன ஒரு வியப்பு!
மனிதஇனம் ஒன்று தானே..
இதில் இனப்படுகொலை
எதற்கு?

என்ன ஒரு அவல நிலை
நமக்கு!
மனிதனே மனிதனை ருசி பார்க்கும் கொடூரம்
மனிதனே மனிதனை
கொன்றால் எங்கே அன்பு கிட்டும்
மனிதன் இருந்தால் தானே
அன்பு பிறக்கும்...

இமைகள் மூடாமல்
நெஞ்சில் துணிவோடு
ரணங்களை பொறுத்து
அன்னம் மறந்து
உறக்கத்தை தொலைத்து
ரத்தத்தை சிந்தி
உயிரை துச்சமாய் எண்ணி 
எல்லைகளை பாதுகாத்த
ராணுவ வீரர்களை கொலை செய்த
காவி கூட்டமே !
யாருடைய சுயலாபத்துக்கு செய்தாய் இதை
எதை திசை திருப்ப இந்த சதி?

தீவிரவாதம்
காவிகளின் கூடாரம்..
யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
பூக்கள் உதிர வேண்டிய மண்ணில்
இன்று
தோட்டாக்களை உதிர செய்து
எங்கள் சகோதரர்களின் 
செங்குருதியை  பதம் பார்க்கும்
காவி கூட்டமே !
உன் தீவிரவாதத்தின் ஆயுள் காலம்
முடியும் நேரம் வெகுதூரத்தில் இல்லை.....
எங்கள் கண்முன்
சூரிய வெளிச்சமாய் பிரகாசமாய்
தெரிகிறது ..

நிச்சயம்  ஒரு நாள் உங்கள்
காவியின் சாயத்தை
துவைத்து வெளுக்க செய்வோம்!!!

 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: Yogi Babu on February 21, 2019, 06:01:02 PM
எத்தனை தோட்டாக்கள் பாய்ந்தாலும்
மடிவது என்பது உயிருள்ள தேகம் மட்டுமே
மடியாது உயிர் பெறுவது அவனது தியாகமே
மக்களின் மனதில் விழிப்புணர்வை வித்திட்ட சதிகாரர்களே
உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லவேண்டும்
நீங்கள் இல்லாவிடின் ஒரு விருட்சமாய் விரியாது தேசப்பற்று
அவர்களது கடைசி மூச்சில் சூறாவளியை தூண்டிய சாணக்கியர்களே
நாளை நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்  ...மக்களின் கண்ணீருக்கு


பயங்கரவாதிகளின் மறுபக்கத்தை யாரும் பார்ப்பதில்லை
பார்க்கவும் விரும்புவதில்லை ….
அவர்களது  கோரிக்கைகளை, அபிலாஷைகளை
ஒரு நாளும் செவி மடுத்து கேட்டதில்லை....
அவரகள் தோன்ற யார் காரணம் என்றும் சிந்தித்ததில்லை
ஒவ்வொரு பயங்கரவாதியும் சாதாரண குடிமகனே
அவனை பயங்கரவாதியாக்கியது இந்த சமுதாயமே
அவன் பிறந்த நாட்டில் அவனே அந்நியனாக இன்று  !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: JeGaTisH on February 21, 2019, 06:25:58 PM
பிள்ளையை காக்கும் தாய்போல
எம் பிரஜைகளை காக்கும் வீரனே  !

எதிரிகள் எதிர்த்தாலும்  நீ எதிர்த்து நின்று
ஏவுகணைகளை ஏற்றுக்கொள்கிறாய்
உன்னை நினைப்பதட்கு ஓர் நாள் தகுமோ !

நான் நிம்மதியான நடை பயில
உன்னுடைய காவல் தான் காரமோ !

கழுகின் பறவையும்
அழுத்தி பிடித்த சுடுபொறியும்
எனக்கு தைரியம் சொல்கிறது !

உன் விரல் பிடித்து நடந்தால்
பயம் இல்லை நெஞ்சில்
காற்றும் கேட்டிடுமோ
என்னை தழுவ கொஞ்சம் !

உன்னாலே நான் இங்கு சுகத்திரமானே
உன் உயிர் பொய்யும்  என்
உயிர் காக்க துடிக்கும் நீயே!
என் அன்னையிலும் மேலான
அன்பு அண்ணனே!!!
உன் ஆத்மா சாந்தியடைய
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் !!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: Evil on February 21, 2019, 09:29:08 PM
நாட்டின் எல்லைக்காக
அதில் வாழும் மக்களின் நலனுக்காக
நாளும் பாடுபடும் நாடோடிகள் நாங்கள் !!!

நாட்டின் மண்ணை காக்க
போர்க்களம் சென்று
போர் புரியும் கருவிகள் நாங்கள் !!!

நாடுவிட்டு நாடு ஊடுருவும்
தீவிரவாதிகளை
அழிக்க பிறந்த
ஆயுதங்கள் நாங்கள் !!!

தாய்நாட்டை காக்க
கைகளில் ஆயுதம் ஏந்திய
எந்திரங்கள் நாங்கள் !!!

எங்களின் சக்தியை பார்த்து
அந்நிய சக்திகளும்
அஞ்சி நடுங்கிட
செய்தவர்கள் நாங்கள் !!!

இயற்கை சீற்றங்களில்
இன்றியமையா
பணிகள் புரியும்
படை வீரர்கள் நாங்கள்  !!!

போர்க்களத்தில்
தோட்டாக்களை
பதக்கங்களாக எண்ணி
நெஞ்சை நிமர்த்திய
மாவீரர்கள் நாங்கள் !!!
 
என்றும் உலகம் அமைதியை காக்க
அன்பை துறந்த துறவிகள் நாங்கள் !!!
 

என்றும் மனம் மாறாத
மண்ணின் மைந்தர்கள் என்பதால் தானோ
மண்ணுக்குள் அணைத்து கொண்டால் எங்கள் அன்னை

இப்படிக்கு
நாங்கள்
***இராணுவ வீரர்கள்***
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: பவித்ரா on February 21, 2019, 10:12:14 PM
என் இறைவா , கேளாயோ
என் குமுறலை அனைத்து
உயிர்களும் இன்புற்றிருக்கவே
படைத்தாய் இப்பூவுலகை !!!

வெள்ளை காகிதத்தில் துளி மையில்
அதனழகு கெடுத்தார் போல்
மனிதனுக்குள் ஏன் விதைத்தாய்
பேராசையை ?

கல்வி தடையில்லை மனிதாபிமானத்திற்கு
முன்னே வழிகாட்டி ஆட்சி அமைத்து
அமைதி காத்து வாழ வழிவகுத்தனர் !!!

முன்னேறு நன்றே சென்றால்
பின்னெரு தானே வருமென நம்பி
தேநீர் வடிகட்டியதாய்   பொய்யுரைத்தவனுக்கு 
பதவி கொடுத்து அழகு பார்த்த
சில மடையர்களின்  விளைவை பார்த்தாயா !!!

உயிர் துறக்கலாம்,  தாய் நாட்டிற்காக
பெருமை தான் எனக்கு /ஆனால்
சில ஊழல் பெருச்சாளிகளின் பேராசைக்கு
பலிகள் நாங்களா ?எங்குருதி குடித்து  கொழுத்த
ஓநாய்களிடமிருந்து எவ்வனம் மீட்பேன்
என் தாய் திரு நாட்டை!!!

மீண்டும் அமைதிப்படை அம்மாவாசையிடம்
நாட்டை கொடுத்தால்
இழப்பதற்கு நம்மிடம்
ஏதுமிஞ்சாது !!!
 
என் தலைமுறைக்கு
என்ன விட்டு செல்ல போகிறேன் நான் ?
என் இறைவா , கேளாயோ !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 209
Post by: Guest 2k on February 22, 2019, 12:03:07 AM
கல்லறை மீதமைந்த உலகம்

மிக சாதாரணமாக ஒரு வன்முறை நிகழ்ந்து முடிகிறது
ஒற்றை நொடியில்
உரசி விழுகிறது சில துப்பாக்கி ரவைகள்
எரிந்தடங்குறது சில தீக்கங்குகள்
வெந்து தணிகிறது சில உடல்கள்
வீழ்ந்தழிகிறது சில மனங்கள்

ஓர் தாயின் ஓலமும்
ஓர் மனைவின் கதறலும்
ஓர் குழந்தையின் அழுகையும்
மிக எளிதாக மறக்கப்படுகிறது
பிறகு
மீண்டும் நிகழ்கிறது சில மரணங்கள்

வேற்று கிரகவாசிகளிலர் இவர்
நம் கருவறையில் வைத்தே வளர்த்திருக்கிறோம்
நம் கைகளே நம் கண்களை குத்தும்
பரிணாமம் எங்கிருந்து தோன்றியது?
அண்ணன் தம்பிகளின் சிதறடிக்கப்பட்ட சதைகளையும்,
பைஞ்சிறு மலர்களின் ரத்தங்களையும்
புசிக்கும்
கொடுவாள்களும், ஷெல்லடிகளும்,
துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும்,
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னுமென ரத்தமும், சதைகளும் கேட்கும்
கூர் நகங்களும், கோரைப் பற்களும்

கொன்றழிப்பதெல்லாம் லட்சிய-கொள்கை எனில்
கடைசி மனிதனின் வீழ்ச்சிக்கு பின் தான்
இத்துப்பாக்கியின் ரவைகளும்
ரசாயன பெருவெடிப்புகளும்
ஓயும்
அப்பொழுது உலகமெனும் இக்கல்லறையின் மீது
மலர்வளையம் வைக்க
பூக்களொன்றும் மிச்சமிருக்காது

உண்மையில்,
பூக்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்
என்ன ஒற்றுமை இருக்கிறது?
உதிர்ந்து விழுவதை தவிர