Author Topic: ஹிட்லரை ஒரு சர்வாதிகாரியாக மட்டுமே தெரிந்த பலருக்கு அவர் ஒரு நல்ல ஓவியர் என்பது  (Read 877 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
<a href="http://www.youtube.com/v/eGhdX1SI3KY&amp;bpctr=1357684222" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/eGhdX1SI3KY&amp;bpctr=1357684222</a>


அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889 - ஏப்ரல் 30, 1945 ) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய இவர் 1933 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டு, பின்பு 1934 ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃ பியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லரை ஒரு சர்வாதிகாரியாக மட்டுமே தெரிந்த பலருக்கு அவர் ஒரு நல்ல ஓவியர் என்பது தெரியாது. இதோ அவர் வரைந்த ஓவியங்கள் சில.


<a href="http://www.youtube.com/v/mALbFREo-bk&amp;feature=player_embedded" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/mALbFREo-bk&amp;feature=player_embedded</a>
« Last Edit: January 09, 2013, 03:35:46 AM by Global Angel »