Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 1/11/2013 (1st Nov)  (Read 912 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 1/11/2013 (1st Nov)

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகள் ஆக்கப் பூர்வமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.


மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர் கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகை
கள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோ கத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.


கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


சிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய யோசனைகள் பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.


கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


துலாம்: கணவன்,மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்கு கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருங்கிய வர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.


தனுசு: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார் கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப் படும் நாள்.


மீனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளி யூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர் கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.