Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 28/11/2013 (28th Nov)  (Read 886 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 28/11/2013


மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


கடகம்:  தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயன டைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.


சிம்மம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


துலாம்: சின்னசின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.


தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பழைய கடன் பிரச்னை தீரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத் தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோ தரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட் கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.