Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 08/12/2013 (8th Dec)  (Read 915 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 08/12/2013 (8th Dec)



மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தோர் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் நீங்கள் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிலரின் சுயரூபம் தெரிய வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


மிதுனம்: காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்படுங்கள். பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள்.


கடகம்: காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் வீணான சந்தேகமும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


கன்னி: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.


துலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விருந்தினர் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். தாயாருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


மகரம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் சோர்வடைவீர். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.



கும்பம்: காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். செரிமானக் கோளாறு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.


மீனம்: மற்றவர்களின் வேலை யையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சலிப்பு மற்றும் சோர்வு வந்து விலகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.