Author Topic: Raasi Characters ராசியின் பண்புகள் மற்றும் பலன்கள்  (Read 4496 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Raasi Characters ராசியின் பண்புகள் மற்றும் பலன்கள்




Aries (mesham)
 According to Tamil Astrology, those who born in “Aries” will be always having clear hearted, good thoughts. While they are in a smiling face they are not willing to talk with others more. They will love their jobs deeply. They are reluctant to go in short cut, instead they will strive hard and get their goal. Normally they don’t have more children nevertheless, they have more friends.
 
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தெளிவான மனதுடன், தெளிவான சிந்தனையும் கொண்டவர்கள். புன்முகத்தோடு இருந்தாலும் அதிகம் பிறருடன் பேச மாட்டார்கள் . தான் செய்யும் தொழிலை மிகவும் நேசிப்பார்கள். குறுக்கு வழியில் செல்ல மாட்டார்கள், கடின உழைப்பால் வெற்றி அடையும் மனம் கொண்டவர்கள்.குழந்தைகள் அதிகம் இருக்காது. நண்பர்கள் அதிகம் உண்டு.
 
Taurus(rishibam)
 Tamil Horoscope says “Those who born in “Taurus”will love their parents more and give respect to the elders.They will show full involvement and confidence in any task. Though they are suffering a lot in the young stage they will have pleasent life in the middle and old stage of life.They are able to live happily at any circumstances.”
 
ரிஷிப ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர்களை அதிகம் நேசிப்பர். வயதில் மூத்தவர்களை மதிப்பதில் சிறந்தவர்கள். எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையுடன் செய்யும் மனம் கொண்டவர்கள். இளம் வயதில் அதிக படியான கஷ்டங்களை அனுபவித்தாலும், மத்திய மற்றும் மூத்த வயது காலங்களில் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள். எந்த ஒரு சூழலிலும் மகிழ்ச்சியாக வாழும் மனம் படைத்தவர்கள்.
 
Gemini (mithunam)
 In Tamil Jothidam, Softed hearted people and always they are very active and dynamic, always they need changes. Though they get angry abrubtly they will get consolation atonce. They may have large family. Digestion capacity is very less for these people.
 
மென்மையாக பேசும் குணம் கொண்டவர்கள். சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்கள். மாற்றத்தை விரும்புவோர். சட்டென்று கோபப்பட்டாலும் உடனே அமைதியாகிவிடுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் பெரிய குடும்பங்கள் இருக்கும். மதம் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள். ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும்.
 
Cancer(kadagam)
 They are so interested to enjoy natural scenes. They also interested to travel extensively. They are fearless and most oftenly use hard words while talking with others. They reap maximum benefits through their friendship with others. According to Tamil astrology predictions, They love the luxurious life. On left side of their body, mole and scare may be present. As they are more prone to respiratory problems so care should be taken on their health.
 
இயற்க்கை அழகை ரசிக்கும் ஆர்வம் உடையவர்கள். தொலைதூரப் பயணம் செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள். பயம் அறியாதவர்கள் மற்றும் கடின வார்த்தைகளை பயன்படுத்துவர். நட்பு மூலமாக அதிக லாபம் பெறுவர். ஆடம்பர வாழக்கையை விரும்புவர். மச்சம் மற்றும் தழும்புகள் இவரது உடம்பின் இடப்பக்கத்தில் இருக்கும். நெஞ்சு மற்றும் சுவாச நோய்கள் வரும் வாய்ப்புகள் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை.
 
Leo(simmam)
 Tamil jothidam says “They are very brave people. They have good leadership skill by nature. They can attract others easily. They are always preferred to have a job related to administration. Noble hearted people. They will fulfill their desires at the age of 30 and above. They are always having a character to torture their subordinates.”
 
இந்த ராசிக்காரர்கள் தைரிய மிக்கவர்கள். ஆளுமை திறமை இயற்கையாகவே இவர்களிடம் அமையபெற்றிருக்கும். மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவர். ஆட்சி மற்றும் அதிகாரம் தொடர்புடைய துறைகளையே அதிகம் விரும்புவர். தூய மனம் கொண்டவர்கள். அவர்களின் இலக்கை முப்பது வயதிருக்கு மேல் நிச்சியம் அடைவர். வலிமையான இவர்கள் தன்னை விட குறைந்த நிலையில் இருக்கும் ஊழியர்களிடத்தில் கடினமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
 
Virgo(Kanni)
 Their identity is smiley face. Lazy in nature and doesn’t have punctuality in their work. Patience, smiley and legible thoughts are their characters. They will accru huge property at their aged stage.
 
புன்சிரிப்பே இவர்களின் அடையலாம். சோம்பல் மனம் படைத்தவர்கள். தனது வேலைகளை தாமதமாக செய்வர். பொறுமை, புன்சிரிப்பு மற்றும் தெளிவான சிந்தனை இதுவே இவர்களின் பண்புகள். அதிக சொத்துக்களை தனது முதுமை காலத்தில் சேர்ப்பர்.
 
Libra(Thulaam)
 They will create advantage, meaningfull in their speech/any mmoments. Naturally they have a character to allure their neighbours. Though there will be a problem at their stage ultimately they will get happy life. They can get the help of dignitaries. Usually they marry the richest. They will live at their native birth place.
 
துலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக எதை பேசினாலும், சிந்தித்தாலும் அதில் காரணமும், அர்த்தமும் இருக்கும். எளிதில் மக்களிடம் பழகும் குணம் கொண்டவர்கள். இளமை காலத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும், பிற காலத்தில் மகிழ்ச்சியே நிலைத்திருக்கும். பெரிய மனிதர்கள் உதவி கிடைக்கும்.பெரும்பாலும் வசதியானவர்களை மணப்பர். தனது சொந்த ஊரில் வாழ்வார்கள்.
 
Scorpio(Viruchigam)
 Usually they are very particular in their task itself, at the sametime they feel jealous with others. They always like professions in the field of chemical, defence and technology related. Normally they are having the nature of to implement their thoughts. Also they will get enmity with others by their hard words. They are intellectual in earning money. They are not having smooth relationship with their brothers and sisters.
 
தனது வேலையில் விழிப்போடு செயல்படும் இவர்கள் சிறிது பொறாமை குணமும் கொண்டவர்கள். ரசாயனம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேலையே செய்ய விரும்புவார்கள். பேச்சோடு மட்டும் இல்லாமல் செயலில் செய்து காட்டவேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள். தனது கடின பேச்சால் பிறரிடம் பகைமையை வளர்த்துக்கொள்வர். பணம் சம்பாதிப்பதில் திறமை மிக்கவர்கள். தனது சகோதரின் மற்றும் சகோதிரியிடம் நல்லுறவு வைத்து கொள்ளமாட்டார்கள்.
 
Sagittarius(Dhanusu)
 Tamil Horoscope says “They always follow religious rituals without laxity. They earn not only for them but for all of their family. Generally they born in welltrude families. They always honest in business. Without expecting any benefit, they will help others. Brave people and keeping patience. Good fortune at above 20 years of age.”
 
இந்த ராசிக்காரர்கள் பொதுவாக மதம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை தவறாது பின்பற்றுவர். தனக்காக மட்டும் சம்பாதிக்காமல் தனது குடும்பத்தில் வாழும் அனைவருக்காகவும் சம்பாதிப்பவர்கள். பொதுவாக இவர்கள் வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பர். தொழிலில் மிகவும் நேர்மையானவர்கள். பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்யும் மனம் கொண்டவர்கள். தைரிய சாலியான இவர்கள் பொறுமை குணத்துடன் விளங்குவர். இருபது வயதிற்கு மேல் அதிர்ஷ்டம் நிச்சியம் உண்டு.
 
Capricorn(makaram)
 They always like stability in any work. They will work with focussing the huge target. Brave in nature. In their life, they may face enemies and involves in arguement with them. Above 30 years age, there may be better life.
 
எந்த செயலிலும் நிலையான தன்மையுடன் இருப்பர். மிகவும் உயர்ந்த இலக்கை தனது லட்சியமாக கொண்டு செயல்படுவர். மனதைரியம் மிக்கவர்கள். தனது வாழ்க்கையில் எதிரிகளை சந்திக்ககூடும் அவர்களிடம் வாக்குவாதமும் செய்யும் நிலையை சந்திப்பர். முப்பது வயதிற்கு மேல் வாழ்கையில் ஏற்றம் இருக்கும்.
 
Aquarius(kumbam)
 They like always liberty and never have a friendship easily. They are fear to make sin and at the sametime they will live very close with their spouse. They may always suffer by headache, and digestive problems. Nevertheless, the problem will recup at the age of 30.
 
சுதந்திரத்தை அதிகம் விரும்பும் கும்ப ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதாக யாரிடமும் நட்பு கொள்ளமாட்டார்கள். வாழ்க்கையில் பாவம் செய்ய பயப்படும் இவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் மிகவும் நெருக்கமாக வாழ்வார்கள். தலைவலி, அஜீரண கோளாறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரிச்சனைகளால் அடிக்கடி அவதி பட நேரிடும். ஆனால் முப்பது வயதிற்கு மேல் சரியாகிவிடும்.
 
Pisces(meenam)
 According to Tamil Astrology, Truth, Honesty, innocent and deep thoughts are the nature of these people. They always fear to do sin and get good fortune abruptly. They will get money from various sources. They can start earning at the age of 20 and travel extensively. They will give birth more children and spend their leisure time usefully.
 
உண்மை, நேர்மை, கள்ளம் கபடம்மற்ற மனம் மற்றும் சீரிய சிந்தனை குணம் கொண்டவர்கள். பாவம் செய்வதற்கு அஞ்சும் இவர்கள் திடீர் யோகம் கொண்டவர்கள். பணம் பல வழிகளில் திடீர் என்று வரும்.இருபது வயதில் சம்பாதிக்க தொடங்குவார்கள். தொலை தூரம் பயணம் செய்வார்கள். நிறைய குழந்தைகளை பெறுவார்கள். தனது ஒய்வு நேரத்தையும் உபயோகமாக செலவழிப்