Author Topic: அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்?  (Read 2863 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர் திடீரென சைவப் பிரியராக மாறுவதற்கும், பிறந்தது முதலே சைவ உணவை மட்டும் சாப்பிட்டு ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த ஒருவர் அசைவப் பிரியராக மாறுவதற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம்.

என்னிடம் வந்த ஜாதகர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதல் ஆச்சாரமான நடைமுறைகளை கடைப்பிடித்த அவரது மகன் 10 வயதிற்குப் பின்னர் மிகவும் மாறி விட்டதாகவும், தற்போது அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

அவரது மகன் மேஷ லக்னம், புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தார். மகனுக்கு 9 வயது வரை குரு தசை நடைபெற்றது. அதன் பின்னர் சனி தசை துவங்கிய காலம் முதல் மகனின் உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக மாறி விட்டது. அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டார். பள்ளித் தோழர்கள் மூலமாகவும் அவருக்கு அசைவ உணவுகள் கிடைத்துள்ளன.

மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ஆவார். அவரது மகனின் ஜாதகத்தில் சனி 4வது இடத்தில் அமர்ந்துள்ளார். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும். அந்த 4ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்ததால், அவரது (சனி) தசை துவங்கியது முதல் மகனின் நடத்தையில் (உணவுப் பழக்கம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பாதகாதிபதி தசை வரும் காலத்தில் பிள்ளைகளின் நடத்தையை (உணவுப் பழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை) கண்காணிக்க வேண்டும். அவர்கள் தீய பாதையில் சென்றால் உடனடியாக நல்வழிப்படுத்த வேண்டும்.