FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 16, 2019, 10:37:07 PM

Title: எங்கும் எதிலும் கவிதை
Post by: thamilan on April 16, 2019, 10:37:07 PM
கிழக்கில் வெளிச்சம்
சூரியக் கவிதை
இரவில் மின்னும்
நட்சத்திரக் கவிதை

மழையை பொழிவது
விண்ணின்  கவிதை
நல்ல மகசூல் தருவது
மண்ணின் கவிதை

தத்தி வருவது
அலைகளின் கவிதை
தவழ்ந்து வருவது
மழலையின் கவிதை

தேடல் என்பது
வாழ்வின் கவிதை
ஊடல்  என்பது 
காதலின் கவிதை

சங்கீதம் என்பது
ஸ்வரங்களின் கவிதை
சிலைகள் எல்லாம்
உளியின் கவிதை

ஓவியம் என்பது
நிறங்களின் கவிதை
ஒளி மயமாவது
விளக்கின் கவிதை

சோலை வனங்களில்
குயில்களின் கவிதை
உலகமெல்லாம் ஒலிப்பது
யின் கவிதை